-->

வியாழன், 24 நவம்பர், 2011

தவமாய் தவமிருந்து...





நன்றி படம்: www.mazhalaigal.com
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

நல்ல கணவர் அமைய வேண்டுமென்று அவளும், நல்ல மனைவி அமைய வேண்டுமென்று அவனும் பல ஆண்டுகளாக கண்ட கனவு ஒருநாள் பலித்து, பின் இருவரும் அழகிய குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்தனர், உகந்த கல்வி, உடை, நேரம் தவறாமல் உணவு என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தனர்.


மழலையாய் இருந்த பொழுது 'அப்ப்ப்பா...இது என்ன ப்ப்பா...' என்று  கேட்கும் ஒவ்வொரு நூறுதடவையும் முதல் முறை சொல்வது போலவே குழந்தைக்கு பதில் அளிக்கும் தந்தை, பருவ வயதில், சற்று தலை வலிப்பது போல இருக்கிறது என்று சொல்ல, உடனேயே கஷாயம் வைத்துக் கொடுக்கும் தாய், எவ்வளவு சண்டைப் போட்டாலும் கண்ணீர் விட்டுக்கொண்டே கட்டித்தழுவும் தங்கை, இப்படி பருவ வயது வந்து சேரும் வரை பாசத்தின் பிணைப்பிலேயே வளர்ந்து வந்த நாம்,  நமது ஒவ்வொரு பிறந்தநாளிலும் நினைக்க வேண்டியது, நமது பிறந்த நாளை மட்டும் அல்ல, நமது பெற்றோர் வயதில் முதிர்ந்துக்கொண்டே வருகிறார்கள் என்பதனையும் தான்.

மழலையாய், குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு பொறுமையுடன் தந்தை பதில் அளித்தாரோ, அதற்க்கு மேல் பொறுமையுடம் அவர்களின் நிகழ் காலத்திலும், ஒரு சிறு தலை வலிக்கு துடித்த தாயின் நிகழ் காலத்தில் அவருடைய உடல் நலத்தையும் பேணுவது மிக மிக்கியமான ஒன்றாகும்.

நமக்கு எது நடந்தாலும் பாசம் காட்ட நமது பெற்றோர் இருக்கிறார், ஆனால் நம் பெற்றோருக்கு எந்தக்கவலையானாலும் அதை பகிர்ந்துக்கொள்ள அவர்களுடைய பெற்றோர் இல்லை, நாம் தான் அந்த இடத்தில் இருக்கிறோம். இந்த சிறு விஷயம் நம்மில் பலர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு தாய், தந்தை எதிர்பார்ப்பு இதுதான்.

சிறிது நேரம் தொலைக்காட்சி, கைபேசி/தொலைபேசி அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலோடு மனம் விட்டு பேசினால், அதனால் அவர்களடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் சில நாட்கள், நண்பர்களோடும், பொழுதுபோக்கிலுமே கழிந்து பின் வீட்டாருடன் பேச நேரமில்லாமல் திரும்பக் கிளம்ப வேண்டிய சூழல் எப்பொழுதும் நடக்கிற ஒன்றாகிவிட்டது!

ஒவ்வொரு நாளும் நம்மை தவமாய் தாமிருந்து' பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமைகளுள் இதுவும் ஒன்றாகும் என்பதை மறந்துவிடக் கூடாது!
Blogger Widget

வெள்ளி, 18 நவம்பர், 2011

'அவசரக்கரண'மாக மாறிய தோப்புக்கரணம்!

நன்றி: தினமணி
தேதி:18.11.2011

Blogger Widget

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...

சில மாதங்களுக்கு முன் வரை எந்த ஊடகத்தினை பார்த்தாலும் ஒரு வாக்கியம் 'இது இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டம்' என்று! 


74 வயதான அன்னா ஹசாரே, தனது கிராமத்தின் வளர்ச்சியை முன் மாதிரியாக கொண்டுவந்தமைக்காக பத்ம ஸ்ரீ(1990), பத்ம பூஷன் (1992) போன்ற உயரிய விருதுகளைப்பெற்றவர். மேலும் மாநில, மதிய அரசுகளால் பல விருதினை பெற்றுள்ளார் (விருதுகளை வாங்கவில்லை, பெற்றுள்ளார்!)

இந்திய ராணுவத்திலிருந்து வரும் ஓய்வூதியத்தை மட்டுமே தனது வருமானமாகக் கொண்டுள்ள ஹசாரே, ஏப்ரல் 16  ஆம் தேதி தனது சொத்து விபரத்தை தாக்கல் செய்தார், அதில் அவருக்கு வங்கியில் 
INR 67,183 மற்றும் கையிருப்பாக INR 1,500 உள்ளதாக தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அவரின் முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். 

திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஊழல் எதிர்ப்பு காட்சியினை அன்று முதல் 
அனைத்து ஊடகங்களும் புத்துணர்ச்சி பெற்று ஒளிபரப்பத் தொடங்கின...

இதில் இவருடன் முன்னாள்/இந்நாள் நேர்மையாளர்கள் சிலர் 
சேர்ந்துக்கொண்டு 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' என்று ஒரு அமைப்பை 
தொடங்கி அதற்கு புத்துனர்வ்வு கொடுத்தனர்.
ஹராரே 'நினைப்பதை' மக்களிடத்திலும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள்
இவர்கள் தாம். இப்படியாக சில பல வாரங்கள் ஊடகங்களில் 
இவர்கள் 'காட்சியளிக்க' இவர்களின் எண்ணங்களோ வேறு மாதிரியாக 
திரும்பத் தொடங்கிவிட்டது! 

இந்திய நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்ததாக கொண்டிருக்கும் வேலையில்,
அவர் குழுவில் 'இருந்த' கேஜ்ரிவால், ஹசாரே தான் நாடாளுமன்றத்தைவிட  

முக்கியமானவர் என்று ஒரு கருத்தினை தெரிவித்தார்.


மேலும், இது போன்ற பல வீண் வீர வசனங்கள் பத்திரிகைகளுக்கு அள்ளி வீசி அரசாங்கத்தை கோபப்படுத்தி வந்தனர்.


                  
பிரஷாந்த் புஷன் (அடிபட்டதற்கு முன்)
அவரே தான்! அடி வாங்கும்போது!


பார்த்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள்(?!), இப்படியாக விட்டால் நமது நிலை
'இன்னும்' மோசமாகி விடும் இந்த குழுவினை அடக்க வேண்டும் என்று 
நினைத்துக்கொண்டிருந்த வேலையில், குழுவில் இருந்த பிரஷாந்த் பூசன் 
காஷ்மீர் பற்றி கூறிய தவறான கருத்தால் அடி, உதய் வாங்கியது மட்டுமலாமல், 
அன்னா ஹசாரே குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். குழுவிலேயே இருந்தால் அவர்களுக்கும் அவப்பெயர் வந்துவிடுமோ என்று 
அவர்கள் நினைத்தார்களோ என்னவோ, நமக்கு தெரியாது!

ஒவ்வொரு பேட்டியிலும் தனது கருத்தினை மாற்றி, மாற்றி சொல்லும் 'திறமை'
வாய்ந்த ஹசாரே, இனி எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை என்று சில 
நாட்களுக்கு முன், தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் காரணமாக மௌனவிரதம்த்தைக் கடைபிடிக்கப்போவதாக அண்ணா ஹசாரே முடிவெடுத்துள்ளார்.

இப்படியாக இருக்க ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசாங்கத்தை கொச்சை படுத்தியதாக குழுவில் உள்ள கிரண் பேடி மேல் சில புகார்களும் எழுந்துள்ளது... மேலும் இவர்களின் போராட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியின் 'நிலை' என்ன என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால்
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக இருக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் கேஜ்ரிவால் INR 9.15 லட்சம் வரி பாக்கி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியுள்ளது. மேலும் குழுவில் சேர்ந்த நிதியில் தனது அறக்கட்டளைக்கு சில ஒதுக்கிகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

லோக்பால் நிறைவேரவிடால் காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்வோம், நிறைவேற்றினால் காங்கிரஸ் க்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று (ஏதோ லோக்பால் நிறைவேற்றினாலே ஊழல் ஒழிந்துவிடுவது போலவும், நிறைவேற்றினால் இதுவரை நடந்த ஊழளெல்லாம் சரியான முடிவிற்கு வந்துவிடுவது போலவும்!) ஏக வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழு, ஆரம்பமாவதற்கு முன்பே ஆட்டம் கண்டு வருகிறது என்பது தான் உண்மை!!!


Blogger Widget

வெள்ளி, 28 அக்டோபர், 2011

பேச்சைக் குறை...

நன்றி: துக்ளக்


மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். 
புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. 


ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. 




அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது.

2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்! உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.

எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.

அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம்.




ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது.

இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், "பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது.

ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .
Blogger Widget

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பழகலாம் வாங்க!!!

'எப்போ பாத்தாலும் அப்படி அந்த கைபேசியில என்னதான் பண்ணற' என்று கேட்கும் பெற்றோரிடமும் சொல்லப்படும் பதில் பெரும்பாலும், நண்பரோடு குறுஞ்செய்தி பகிர்ந்துக்கொண்டிருக்கிறேன் எனபது தான்... பெரும்பாலும், காலை முதல் மாலை வரை, பள்ளியிலோ,கல்லூரி, பணியிடத்தில் இருப்பவரிடமோ தான் குறுஞ்செய்தி பரிமாரிக்கொள்ளப்படுகிறது, அப்படி செய்வதில் தவறொன்றும் இல்லைத்தான், ஆனால்... பெற்றோர், உடன் பிறந்தவர், சுருக்கமாக சொல்லப்போனால், நம் வீட்டில் இருப்பவரை தவிர, மற்ற அனைவரிடமும் நாம் அரட்டயடிதுக்கொண்டிருப்போம்!

வெளியில் சென்றவர்காக வீட்டில் காத்துகொண்டிருப்பவரை ஒரு நாளில், எத்துனை முறை பலர் நினைதுப்பார்கின்றோம்? வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த 'புரட்சி' முகப்புத்தகம்! அதன் முன் உட்கார்ந்தவுடன் நேரம் போவது தெரியாமல், இரவு உணவு உண்பதற்கு பல முறை 'அழைப்பு'விடுத்தவுடன் அவசரமாக உண்டு, மீண்டும் 'புரட்சி'யில் ஈடுபடுவது தான் இன்று பலரது வாடிக்கையான செயலாக உள்ளது!

'சுவற்றிடமாவது சொல்லி அழு' எனபது பழமொழி!'

அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு அரை மணி நேரம் பேசினாலே பாதி பாரம் குறையும்! கேட்பவர், பேசுபவர் இருவருக்கும் தான்!

'முகப்புத்தகத்தில் நிலையை மேம்படுத்தி' நிழல் நண்பர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுவதில் ஆறுதல் கிடைக்காது... அதனால் சில, பல ஏமாற்றங்கள் தான் நேரும், அவ்வபோது நிகழும் தற்கொலைகளே இதற்க்கு சாட்சி பெங்களூர் ஐ.ஐ.எம் மாணவி தற்கொலை
 
எங்கேயோ இருக்கும் ஒரு நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால், தேங்காய் உடைப்பதும், பால் குடம் தூக்குவது, அலகு குத்திக் கொள்வதுமாக பல விசித்திரங்கள் நடைபெறுவது நமது நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் தான்! பெற்றோருக்காக, உடன் பிறந்தவருக்காக இது போல என்றாவது வேண்டிக்கொண்டதுண்டா? இவ்வளவு பெரிய சாகசங்களெல்லாம் செய்யத்தேவயில்லை, உடனிருந்து ஆறுதல் சொன்னாலே போதும்! அவர்களுக்கு குணமாகிவிடும்!


பகுத்தறிவாளர் M.R.ராதா 1954இல் ரத்தகண்ணீர் படத்தில் தான் நோய் வயப்பட்டிருக்கும் போது...


.....காந்தா, எண்ணப் பார்... என் முகத்தைப் பார்... எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டேன் பார்த்தாயா காந்தா...


காந்தா...இந்த மாதிரி நேரத்திலே என்னை வீட்டிலே தனியே போட்டுவிட்டு இரவெல்லாம் ஊர் சுத்தும் வேலையிலே இறங்கியிருக்காயாம்...

வேண்டாம் காந்தா...

அதை நான் கேட்கும்போது என் மனம் என்ன பாடு படும் தெரியுமா?
காந்தா... நீ வேறொன்றும் செய்யவேண்டாம்... என் பக்கத்திலே இரு.. அது
எனக்கு போதும்...

என் பக்கத்திலே இருந்துகொண்டு, மருந்து சாப்பிட்டீர்களா? என்று
கேட்டால் என் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்....
கஞ்சி சாப்பிடுங்கள் என்று சொனால்... மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்'


என்று கண்ணீர் விட்டுக் கதறும் ஒரு காட்சி...

இது அன்று திரையில் வந்தது... இது போன்று இன்று பலரிடத்தில் வெளியில் சொல்லமுடியாத ஆதங்கம் இருக்கிறது... அதற்க்கு சற்றும் இடம் கொடுக்காமல், அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு பேச வேண்டும்! அதனால் உண்டாகும் மகிழ்ச்சி விபரிக்கமுடியாதது!

பணியிடத்தில் இருக்கும் போது வீட்டில் தனிமையில் இருக்கும் மனைவி தொலை பேசி அழைப்பு விடுத்தவுடன், அருகில் இருப்பவரிடம் தாம் அதி பயங்கரமாக வேலை செய்வது போல, 'சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்' என்று கூறி இணைப்பை துண்டிப்பதை அவ்வபோது நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...

தேவையில்லாமல் முகத்தை இருக்கிக்கொள்வதை விடுத்து சிறு புன்னகையுடன் மலரச்செய்து நம் இருப்பினை விரும்புபவரிடம் பழகலாம் வாங்க...
Blogger Widget

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உயிர் மதிப்பு பெறுவோம்...

செய்தித்தாள் கையில் எடுத்தவுடனே கண்ணில் தென்படுவது, 'குண்டு வெடிப்பில் 100 பேர் உயிர் இழப்பு', 'தீவிரவாதிகளால் பலர் சுட்டுக்கொலை', 'இரயில் விபத்து, பேருந்து விபத்து - பலர் சாவு' போன்றன. செய்தி என்று  படித்தாலும் இவை வேறு வகையில் வந்தவண்ணம் தான் உள்ளன.
இங்கு கேள்வி என்னவெனில், அந்த செய்தியை படிக்கும்போது நம் மனதில் தோணுவது என்ன?

'அடடா பாவம்', 'இவனுங்களுக்கு வேல இல்ல, எவனாவது யாரயாவது சுட்டுண்டே இருப்பானுங்க', 'இப்படி துப்பாக்கி சூடு நடதரவனலாம் `தூக்குல` போடணும்' போன்றன.

இவ்வாறு 'முதல் பக்கத்திலிருந்து, அடுத்த பக்கம் திருப்பும் வரை' நாம் வருந்துவோம்... அவர்களின் குடும்பத்தினரை பற்றி ஒரு கணமும் நாம் வருந்துவதில்லை. அவர்கள் மனநிலை என்ன பாடு படும் என்பதை நாம் சிந்திப்பதில்லை.


நமக்கு பிடித்த ஒருவர், நம்மீது பாசம் வைத்த ஒருவர், உடல் நலக்குறைவால் அவதிப்படும் போது நம் மனம் படும் பாடு, அவர் உயிருக்கு போராடும் வேலையில் அவரருகில் இருந்து ஒரு கணம் அவர் படும் வேதனயைக்கண்டு, அவர் அனுபவிக்கும் சித்திரவதையைக்கண்டு நம்மை அறியாமல் நம் கண்களிலிருந்து கொட்டும் கண்ணீர் அருவி, இவை தான் அந்த உயிரின் மதிப்பினை, அந்த பிரிவின் வருத்தத்தினை நமக்கு உணர வைக்கும் சமயங்களாக அமைகிறது.

பணமிருக்கும் மனிதனை எப்போதும் மனம் நாடுவதில்லை.... நல்ல குணம் இருக்கும் மனிதனைதான் மனம் நாடுகிறது. பாசத்திற்காக ஏங்குவதுதான் மனித மனம், அந்த ஏக்கத்தினை நாம், நமக்கு வேண்டியவருக்கு ஏற்படும்படி விடக்கூடாது. பாசத்தை மனதிலேயே பூட்டி வெய்பதால் ஒரு பயனும் இல்லை. பாசத்தை அள்ளிக்கொடுக்க வேண்டும். பணம் காசு கொடுப்பது மட்டுமே பாசம் அல்ல, அன்புடன் பேசுவது தான் என்பதை உடனடியாக உணர வேண்டும். அடுத்தவரிடம் மனம் விட்டு பேசுவது நம் மனதையும் அமைதி படுத்தும். காரணமில்லாமல் முகத்தை 'உம்' என்று காட்டுவதனால் நம் மனம் அழுத்தம் தான் அடையும், ஒரு சிறு புன்முறுவலினால் மனக்குழப்பம் சட்டென்று மறையும்.

நமக்கு தெரியாத உயிர் பிரிந்தால் நாம் அதை சட்டைசெய்வதுகூட இல்லை, அனால் நம்மை பிறர் எப்படி பார்க்க வேண்டும் என்பது நாம் பிறரிடம் நடந்து கொள்வதில் தான் உள்ளது.

பிற உயிரிடம் உண்மையான அன்பு செலுத்தி, நம் உயிர் மத்திப்பை பெறுவோம்.
Blogger Widget

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தலையாயக் கடமை...


வெகுவான மாநிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் பெருகிவரும் வாகனங்கள், அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெறிசல் போன்றவற்றை சமாளிக்க சாலைகளை அகலப்படுத்துவதில் தவறில்லை, பல வருடங்களாக வளர்ந்த மரங்களை ஒரு நொடியில் வெட்டிச் சாய்ப்பதை கண்டு எதுவும் செய்ய இயலாதவர்கலாகத்தான் இருக்கிறோம். வெட்டிய பின் சில பசுமை அமைப்புகள், மரங்களை வெட்டக்கூடாது என்று சில நடிகைகளை முன்னிறுத்தி பெங்களுருவில் அண்மையில் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கும் வரை போராட்டம் செய்தனர். இதெல்லாம் என்றும் மாறாக் காட்சிகள்.

சிறு தொலைவிலிருக்கும் இடம் செல்ல, பல நேரம் நெரிசலில் சிக்கித்தவித்து, சமிக்ஞையில் பச்சை விழுந்தவுடன் வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றுக்கொண்டிருந்த மாலை சமயத்தில், பணி நேரம் முடிந்து வீடு திரும்ப சாலையோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தேன், பல இடங்களில் குழிகளும், குழாய்களும் நடைபாதையினை அடைத்துக்கொண்டிருந்தன. ஊனமற்றவர்கள் செல்லவே கடினமாக இருக்கும் பல இடங்களை கண் பார்வையட்ற்ற மாற்றுத்திரனாளி நண்பர்கள் கடக்கத்தான் செய்கிறார்கள்.

வெறும் மரினாக் கடற்கரையின் நடைப்பாதையினை சீரமைப்பதால், ஒய்யாரமாக நடைப்பயிற்சி செல்பவர்கள் தான் பயனடைவர், பல கோடிகளை செலவு செய்து சாலைகள் அமைக்கும் அரசாங்கம், சில கோடிகளை செலவிட்டு நடைபாதைகளை சீரமைப்பதன் மூலம் தான் உண்மையான பயனாளிகளுக்கு அவை சென்றடையும் என்பதனை உணர வேண்டியது அரசாங்கத்தின் தலையாயக் கடமை.
Blogger Widget

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தடம் மாறிய ரயில்

மாணவர்களுக்கான தேர்வு முடிவு அறிவிக்கப் பட்டிருக்கும் இவ்வேளையில் இக்கட்டுரை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பலமுறை நாம் நினைத்திருக்கக்கூடும், நாம் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கும் வேலை நமக்கு பிடித்தவையா என்று.


கல்லூரியிலிருந்து பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரி முடிந்து விடுமுறையை (வாழ்வில் மாதக்கணக்கில் கிடைக்கும் கடைசி விடுமுறை) அனுபவிப்பதற்கு முன் பணிக்கு அழைக்கப் பட்டு, பணிக்கு சேர்ந்த சில நாட்களில், என்னுடன் பணிபுரியும் சக நண்பர் ஒருவர் கேட்டார்,  நான் படித்ததற்கும் இங்கு எனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் சம்பந்தமே இல்லையே என்று...

நியாயம் தான்! அவர் படித்ததோ இயந்திர பொறியியல், தேர்ந்தெடுக்கப்பட்டதோ மென்பொருள் நிறுவனத்தில். கட்டிடப் பொறியியல், மின்னணு பொறியியல், வானூர்தி பொறியியல், ஜவுளி பொறியியல் என்று படித்த பலருடைய நிலைமை இது தான்.

பள்ளியில் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து, குறைந்த மதிப்பெண் எடுத்தபோது வீட்டில் வசவு வாங்கி, அக்கம் பக்கத்தில் நம் வயதொத்த சக மாணவர்களின் மதிப்பெண்ணுடன் நம் மதிப்பெண்ணை ஒப்பிட்டு, அதிலிருந்து அடித்துபிடித்து கஷ்டப்பட்டு வாங்கிய மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு,  இட ஒதுக்கீட்டிற்காக காத்திருந்து,  இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் சிலர் நன்கொடை கொடுத்து ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து, மூன்று/நான்கு வருடங்கள் படித்து முடித்து ஒரு நிறுவனத்தில் சேரும்போது, நாம் கடினமாக படித்த படிபிற்கும், சேரப்போகும் பணிக்கும் பொருத்தம் உள்ளதா என்று பார்த்து சேர்வது அவர்களின் கடமை என்று தான் கூற வேண்டும்.

சிலர் தாம் படித்த துறையில் தான் செல்லவேண்டும் என்று பொறுமையோடிருந்து வெற்றி பெறுகின்றனர். சிலர் குடும்ப சூழல் காரணமாக வேலை கிடைத்தால் போதும் என்று படித்ததற்கும், செய்யப் போகும் வேலைக்கும் சமந்தம் இல்லை என்றாலும் அதில் சேர்ந்து வேறு வழி இல்லாமல் வருந்துகின்றனர்.

மென்பொருள் துறை அவ்வபோது சந்திக்கும் மந்த நிலையின்போது, நான் படித்த துறைக்கே சென்றிருக்க வேண்டும் என்று புலம்புவதனால் ஒரு பயனும் இல்லை என்பதை நாம் முன்பே உணரவேண்டும்.

தம் சுற்றத்தினர்க்கும், பள்ளியில் படிக்கும் உறவினர்களுக்கும் இதுபற்றி முன்பிருந்தே ஆலோசனை வழங்குவதும், நமக்கு தெரிந்த அனுபவங்களை கூறுவதும் அவர்களுக்கு நாம் செய்யும் உதவி ஆகும்.

இது ரயிலை, அது செல்ல வேண்டிய தடத்துக்கு உண்டான தண்டவாளத்திலிருந்து தடம் மாறாமல் காப்பது போன்ற உதவி ஆகும்.

Blogger Widget

செவ்வாய், 19 ஜூலை, 2011

கை அளவு உலகம்!

பல நூற்றாண்டுகளாக நம் நாடு அடிமைப் பட்டிருந்தாலும், பல ஆட்சியாளர்கள் (அந்நாள் ஆட்சியாளர்கள்!) நம் நாட்டின் வளங்களை சுரண்டியிருந்தாலும், வற்றாத வளம் படைத்த நாடு நம் இந்திய நாடு.

பொன், பொருள் (இவையெல்லாம் யாரிடமிருந்தன, எங்கு இருந்தது என்று ஒரு வரையறை இல்லை!), மண், காடு, கனிமங்கள் போன்று அணைத்து வளங்களையும் பெற்றிருந்த பெருமை நம் நாட்டிற்கு மட்டுமே உண்டு.

இயன்றவரை நம்மிடமிருந்து அபகரித்துசென்ற பின் சுதந்திரம் பெற்றோம் <இவற்றைப் பற்றி "எதற்கு சுதந்திரம்" கட்டுரையில் விரிவாக பேசியிருந்தோம்>
நம் நாட்டில் தீர்க்க தரிசனம் காணும் தலைவர்கள் இல்லை போலும். எதிர்காலத்தை எண்ணிப்பார்க்காமல் அனைத்து தரப்பு நிறுவனங்களையும் நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி அளித்து, நம் நாட்டின் வளங்களை அழிக்க வழி வகுத்துவிட்டர்கள் நம் தலைவர்கள்.
 
எத்துணையோ இடம் இருந்தும் அவரவர் நாட்டில் தொழில் தொடங்காமல் (கழிவுகளால் பாதிப்பு அவர்களின் நாட்டிற்குத் தான் உண்டாகும் என்று!), நம் நாட்டில் தொழில் தொடங்கி, அதனால் பெரும் லாபம் அடைது வருகிறார்கள். இதனால் நம் நாட்டிற்கு என்ன பயன்? சில சொற்ப வரி மட்டுமே! (அதுவும் எத்துனை செலுத்துகிறார்கள் எனபது அரசாங்கத்திற்கே வெளிச்சம்).
 
நம் நாட்டில் தொழில் தொடங்குவார்கள், சொற்ப விலை கொடுத்து வேலை வாங்குவார்கள், பண் மடங்கு லாபம் ஈட்டுவார்கள் (தவறில்லை, இது வணிகம், ஆனால்...) தொழிற்சாலைகளின் கழிவுகளை மட்டும் நம் மண்ணில் விட்டுவிடுவார்கள்! இதனால் பாதிக்கப் படுவது? நமது விவசாய பூமியல்லவா?


இப்படி மற்றவரெல்லாம் தீர்க்க தரிசனத்தோடு முடிவெடுக்கும் போது, நாம் மட்டும் எமாந்தவர்களாய் இருக்கிறோமே!

கடந்த சில வருடங்களாகவே பருவக்காலங்களில் மழை பொழிவதில்லை, எல்லா மாதங்களிலும் வெயில் என மாற்றங்கள் ஏராளம். அனைத்து நாடுகளும் 'உலக வெப்பமயமாதலை' (Global Warming ஐ ) எதிர்கொள்ள திட்டம் தீட்டி வருகிறார்கள்.

அனால், இங்கோ... சாலைகளை விரிவாக்க சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன! மக்களுக்காக எடுத்து செல்லப்படும் தண்ணீர் வண்டியிலிருந்து பாதி தண்ணீர் சாலைகளில் தான் கொட்டிக்கொண்டு செல்லப்படுகிறது... அவ்வளவு அலட்சியம்! இது போல் எரிபொருள் (பெட்ரோல்) ஏற்றி செல்லும் வாகனங்களை விடுவார்களா?

இன்னும் நாற்பது ஆண்டுகளில் இமயமலை, அது தொடர்ந்து ஓடும் நதிகள் வற்றிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது! இப்பொழுதே பல நதிகள் வறண்டுவிட்டன, பல குளங்கள், ஏரிகள் மட்டைபந்து விளையாடுமிடமாகிவிட்டது!

தாமதிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தண்ணீர், மின்சாரம் (இருக்கும் பொழுது!) என அனைத்தையும் தேவைக்கு 'குறைவாகவே' உபயோகப் படுத்த பழகிக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் புழு, பூச்சிகளை உண்ணப்பழகி வருகிறார்கள். அவர்களும் ஏதோ பழகுகிறார்கள் போலும்!


இக்கையளவு உலகை காப்பது, ஒவ்வொருவரின் கடமை!
Blogger Widget

ஞாயிறு, 19 ஜூன், 2011

கிடைத்தவை சில... தொலைந்தன பல...

கதைகளைக் கேட்டுக்கொண்டே உறங்கிய நாட்கள், பல வருடங்களாக விரிந்திருந்தன, நமது பள்ளிப்பருவத்தில்...
கதை சொல்லச் சொல்லி அப்பாவை நச்சரித்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் 'அழகிய புன்னகை' பூக்கும் நம் முகத்தில்...

தெருக்களில் கண்ணாம்பூச்சி, நொண்டி, கில்லி, கோலி, ஓட்டப்பந்தயம் விளையாடிய காலம் போய்,
அப்படி பல விளையாட்டுக்கள் இருந்த சுவடே இல்லாமல் உருத்தெரியாமல் ஆகி,
கைப்பேசியை வைத்து விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும்போதும்;
காலையில் எழுந்தவுடன் இறைவன் படத்தையும், பெற்றோர் முகத்தையும் பார்த்து விழித்துக்கொண்டிருந்த காலம் சென்று, கைபேசியில் எத்தனை குறுஞ்செய்திகள் வந்துள்ளன, தவறிய அழைப்புகள் எத்தனை என்பதை பார்த்து விழிக்கும்போதும்,
'உயிரற்ற' ஒரு பொருளுக்கு 'இவ்வளவு' முக்கியத்தனம் தேவைதான என்றுதான் தோனுகிறது...
பண்டிகைகளை அதற்குரிய முறையில் சொந்தபந்தங்களோடு விமரிசையாக கொண்டாடிய கொண்டாடிய காலம்,

எப்பண்டிகையாக இருந்தாலும் 'தொலைகாட்சி' முன் கொண்டாடும் காலமாக மாறிவிட்டது...


ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் வாங்கி ருசித்த காலம் போய்,
ஐந்து ரூபாய்க்கு என்ன கிடைக்கும், என்று அங்கலாய்த்துக்கொள்ளும் நாளாகிவிட்டது...

மொத்த படிப்பையும் சில ஆயிரங்களுள் படித்து முடித்து,
இன்று ஆரம்பப் பள்ளிக்கே ஆயிரங்களைக்க் கொட்டி,
தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் லகரங்களைக் கொட்டி,
கட்டண நிர்ணயத்திற்கு நீதிமன்ற வாசலில் காக்கும் காலம் இது...

இப்படியாக
நினைவலைகளை படர்த்திப் பார்த்தால்,

புதிதாக கிடைத்த சில தவிர, நாம் தொலைத்த(தவிர்க்க முடியாத)வை பல!!!
Blogger Widget

புதன், 8 ஜூன், 2011

பலித்தது சாபம்...


இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று மாலைஇந்தியாவை பரம விரோதியாக பார்த்த Winston Churchill சொனார்...
 வின்ஸ்டன் சர்ச்சில் 1898 - 1927
Power will go to the hands of rascals, rogues and freebooters.
All Indian leaders will be of low caliber and men of straw.
They will have sweet tongues and silly hearts.
They will fight among-st themselves for power and India will be lost in political squabbles.

அன்று அவர் சொன்னது தொலைநோக்கு பார்வையோ, அல்லது அவருடைய சாபமோ தெரியவில்லை,  ஆனால், அதனை நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

(இடமிருந்து வலம்) கபில் சிபல், ப.சிதம்பரம், வீரப்ப மௌலி, பிரணாப் முகர்ஜி, சல்மான் க்ருஷீத்





தேர்தல் ஆணையத்தைப் போல, தனி பலம் கொண்ட ஒரு ஆணையம்; அதற்கு, அரசாங்கத்தை கேட்காமல் ஊழல் புரிபவரை (தொழிலதிபராகட்டும், அரசியல்வாதியாகட்டும்) கடுமையான முறையில் தண்டிக்கும் அதிகாரம் தான் 'லோக் ஜன பால்' (citizens' ombudsman bill). இந்த தண்டனை சட்டத்தை, சமூக ஆர்வலர்கள் மக்களின் கருத்துக்களைக்கொண்டு ஒரு விதிமுறைகளை இயற்றி அரசாங்கத்திடம் கொடுப்பார்கள், பின் இரு தரப்பினரும் கலந்தாலோசித்து, விதிமுறைகளையும், தண்டனைகளையும் இறுதி செய்து..,பின்  இம்மசோதாவிற்கு மாநிலங்களவையில் ஆதரவு கிடைத்து அமல் படுத்தவேண்டும். 

கடந்த 1969இல் இருந்து.., அதாவது கடந்த  நாற்பத்து இரண்டு (42) வருடங்களாக ஒரு மசோதாவை கிடப்பிலேயே வைத்திருக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அவ்வபோது இம்மசோதாவை நிறைவேற்ற போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன, ஆனால் அண்மையில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு மசோதா கிடப்பில் இருந்ததே இபொழுதான் நம்மில் பலருக்கு தெரியவந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.

(இடமிருந்து வலம்)அண்ணா ஹசாரே, சந்தோஷ் ஹெக்டே, ஷாந்தி பூசன், கிரண் பேடி, J.M.Lyngdoh
ஊடங்கங்களின் ஆதரவும்., விடாது தொடர்ந்து மக்கள் மத்தியில் இச்செய்தியை வெளியிட்டு நாடெங்கும் பரவச்செய்துள்ளது, சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை கிளப்பியுள்ளது.



இதற்கிடையில் இப்பொழுது இதற்காக குரல் கொடுப்பவர்களை மிரட்டும் வண்ணம் மத்திய அரசு நடந்து வருகிறது, பெண்களையும், வயதானவர்களையும் அடித்து உதைத்து அவசரகால நிலைபோல கண்ணீர் குண்டுகளை வீசி, சுதந்திரத்திற்கு முன் நடந்த ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறது மத்திய அரசு.


சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து பிரதமராக இயங்கிக்கொண்டிருக்கிறவர், இச்சம்பவம் துரதிஷ்டவசமானது என்று ம் கருத்தினை தெரிவித்தார். மேலும், உண்ணாவிரதம் இருக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. நாட்டில்... ஏன் உலகுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் குஜராத் மாநிலத்தை புகழ்ந்து (அட.. அங்கு உள்ளத்தை சொல்வதே, புகழ்ந்து சொல்வதுபோல்தான் தெரியும்...) சொன்ன அண்ணா ஹசறேவை கண்டிக்கிறார்கள் காங்கிரசார்... இந்த குழுமத்தில் 'பொறுப்பாளராக' இருந்துக்கொண்டே கபில் சிபல், வீரப்ப மௌலி போன்றோர்.., இம்மசொதாவினை நிறைவேற்றினால் நாட்டில் மழை வருமா, நல்ல கல்வி கிடைக்குமா, நல்ல மருத்துவம் கிடைக்குமா என்று கேலி பேசுகிறார்கள்...   

நாளும் பல ஊழல் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன... இவையெல்லாம் காணும்போது ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது....

வின்ஸ்டன் சர்ச்சில் அன்று விட்ட சாபம்... இன்று பலித்துக்கொண்டிருக்கிறது...
Blogger Widget

புதன், 1 ஜூன், 2011

KD சகோதரர்கள்


தமிழகத் தேர்தலுக்கு முன் 10 ஏப்ரல் 2011 அன்று சவுக்கு எழுதிய இந்தப் பதிப்பை உங்களுடன் இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நேரமின்மை காரணமாக எழுத்துப்பிழைகளை நீக்க இயலவில்லை, மன்னிக்கவும். 

நன்றி: சவுக்கு

கருணாநிதி எத்தைன ெபரிய தீய சக்தி என்பைத நீங்கள் அறிவர்ீ கள். ஆனால் கருணாநிதிைய விட மிகப் ெபரிய தீயசக்தி ஒன்று இருக்கிறது. அது எதுெவன்றால், ேகடி சேகாதரர்கள் என்று அைழக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சேகாதரர்கள். இவர்கள் எப்படி கருணாநிதிைய விட மிகப் ெபரிய தீய சக்தியாக ஆக முடியும் என்றால் காரணம் இருக்கிறது.





தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்ைத கட்டியவர்கள், தன் ெசாந்த மகைன ரவுடி என்று ெதாைலக்காட்சியில் ெசய்தி ேபாட்டைத மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன ெபருந்தன்ைம பைடத்தவரா ?

நிச்சயமாக இல்ைல. ேகடி சேகாதரர்கைளப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்ைம. ேகடி சேகாதரர்கேளாடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறைன மந்திரி பதவிைய விட்டு ராஜினாமா ெசய்ய உத்தரவிட, கட்சியின் ெசயற்குழுைவ கூட்டி முடிெவடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று ேசர்ைகயில் வசதியாக ெசயற்குழுைவ

கூட்ட மறந்து விட்டார். “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்ைற வார்த்ைதயில் முடித்து விட்டார்.

ஸ்ெபக்ட்ரம் ஊழல் என்று எழுந்த ேகள்விக்கு, “அது முடிந்து ேபான விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி ைவத்தார்.


கருணாநிதி, இந்தத் ேதர்தல் முடிந்தவுடன் தளர்ந்து ேபாய் விடுவார். அவருக்கு பாராட்டு விழா நடத்தி, காக்காய் பிடிக்கும் ஜால்ராக் கூட்டங்கள் அவைர விட்டு விலகிப் ேபாய் விடும். கருணாநிதியின் கண்ணுக்கு கண்ணாக, உயிருக்கு உயிராக இருந்து ஜாபர் ேசட், ஏற்கனேவ அதிகாரம் இழந்து நிற்கிறார். ஆைகயால், ேதர்தலுக்குப் பின், கருணாநிதி தமிழக

மக்களுக்கு ெபரிய ஆபத்தாக இருக்கப் ேபாவதில்ைல. ஆனால், ேகடி சேகாதரர்கள் ?

திமுக ெதாண்டர்களின் உைழப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்ைத பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள்.

யார் இந்த கலாநிதி மாறன். ெசன்ைன டான்பாஸ்ேகா பள்ளியில் பள்ளிப் படிப்ைப முடித்து விட்டு, லேயாலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அேமரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.






இந்தியா டுேட நிறுவனம், அப்ேபாது வடிீ ேயா ேமகசின் என்ற புதிய உத்திைய கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வடிீ ேயா பத்திரிக்ைகைய ெதாடங்கியது.

இைதப் பார்த்து, தமிழிலும் இது ேபால் ெதாடங்க ேவண்டுெமன திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன்

முதலில் 1990ல் ெதாடங்கப் பட்டதுதான் “பூமாைல“. இந்த பூமாைல மாதமிருமுைற வரும் வடிீ ேயா ேகசட். இதில் தற்ேபாது, இந்த வார உலகம் என்று ெதாைலக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அைதப் ேபாலேவ, ெதாடங்கபபட்டது.

ஆனால், இந்த பூமாைலக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் ெசயல்பட்டது. இந்தியா டுேடவின் ந்யூஸ் ட்ராக் ேபால, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தைன வடிீ ேயா கைடகளும், மிரட்டப் பட்டன. மாதந்ேதாறும், பூமாைல ேகசட்டுகள் ஒவ்ெவாரு கைடயும் 10 வாங்க ேவண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டன. தவறும் கைடகள் மீது, நீலப் படம் ைவத்திருந்த வழக்கு பாய்ந்தது. (அப்ேபாவும் ேபாலீஸ் இப்படித்தான்). இைத ைவத்து மிரட்டி, மிரட்டி பூமாைல வடிீ ேயா ேகசட்ைட ஓட்டினார்கள்.

அதன் பிறகு தாராளமய ெபாருளாதாரக் ெகாள்ைக வந்த பிறகு, சன்டிவி ெதாடங்கப் படுகிறது. 1993ம் ஆண்டு சன் டிவி ெதாடங்கப் படுகிறது. இந்த சன் டிவி ெதாடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுைவயான கைத இருக்கிறது.

இப்ேபாது ேபால, அப்ேபாெதல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குைறந்த விைலயில் கிைடக்காது. இப்ேபாது ஒரு ேகாடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி ேசனல் ெதாடங்கி விடலாம். அத்தைன மலிவாகி விட்டது. உடேன, ஆண்டிமுத்து ராசா நிைனத்திருந்தால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் ேகாடி ேசனல்கைள ெதாடங்கியிருக்கலாேம என்று

ேயாசிக்காதீர்கள். 1993ல் ெசன்ைனயில் ப்ரூேன சுல்தானின் உறவினர் ஒருவர் இருந்தார். அவருக்கு ெசாந்தமான

ட்ரான்ஸ்பாண்டர் ஒன்று இருந்தது. அவேராடு நட்பு ஏற்படுத்தி, அந்த ட்ரான்ஸ்பாண்டைர இலவசமாக ெபறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி ெதாடங்கப் பட்டது.

சன்டிவி ெதாடங்கிய உடேனேய பிரபலமாக ஆனதன் காரணம், அப்ேபாது ேவறு டிவி ேசனல்கள் இல்ைல என்றாலும்

கூட, தரமான நிகழ்ச்சிகைள வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பைத மறுக்க முடியாது. எத்தைன ேகாடி ெகாட்டிக் ெகாடுத்தாலும், ேசனலின் நம்பகத்தன்ைமைய ேபாக்கும் வைகயில் எந்த நிகழ்ச்சிையயும் ஒளிபரப்ப மாட்ேடன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார். மற்ற ேசனல்களில் வருவது ேபால், சன் டிவியில், ெடலி ஷாப்பிங்ேகா, சுவிேசஷக் கூட்டங்கேளா, ேபாலி மருத்துவர்களின் ேநரடி நிகழ்ச்சிேயா இடம் ெபறாது. ஏெனனில், இது ேபான்ற நிகழ்ச்சிகள் ஒரு முைற வந்தால் கூட, ேசனலின் நம்பகத்தன்ைம ேபாய் விடும் என்று கலாநிதி நம்பினார்.

இது 1993 முதல் 1996 வைர தான். 1991 முதல் 1996 வரியிலான ெஜயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் ெமாத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் ெசய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்ைதப் பயன்படுத்தி, அன்ைறய எதிர்க்கட்சி ேவைலைய சன்டிவி குழுமத்தினர் நன்றாகேவ ெசய்தனர். தூர்தர்ஷன் ெசய்திகளுக்கு ேவறு மாற்ேற இல்ைல என்பதால், மக்களும், இைத ரசிக்கேவ ெசய்தார்கள்.

இப்ேபாது ெஜயா டிவியில் இருக்கும், ரபி ெபர்னார்ட் அப்ேபாது சன்டிவியில் இருந்தார். ெஜயலலிதா அரசாங்கத்தில்,

பத்திரிக்ைகயாளர்களுக்கு ெசய்திகளுக்கு குைறேய இல்ைல. தினம் தினமும் ெசய்திகள் புதிது புதிதாக வந்து ெகாண்ேட இருக்கும். அப்ேபாது ெஜயலலிதாவின் அதிமுகவிலிருந்து, தினந்ேதாறும் ஒருவர் விலகி, ெஜயலலிதாவின் ஊழல்கைளப் பற்றியும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்ைதப் பற்றியும் ெசய்திகைள ெவளியிட்டுக் ெகாண்ேட இருப்பார்கள். இவ்வாறு விலகி வந்தவர்கைள ைவத்து ரபி ெபர்னார்ட் நடத்திய ேநருக்கு ேநர் நிகழ்ச்சி அப்ேபாது
அவ்வளவு பிரபலம்.


1995 ெசப்டம்பர் 7 அன்று ெஜயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் ெவகு விமர்ைசயாக இருந்தது. அப்ேபாது சன் டிவி வழங்கிய ெசய்திகள், மக்கள் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்தது.

வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகைள மிரட்டியது, ேபான்ற அத்தைன விஷயங்கைளயும் படம் பிடித்துக் காட்டியது. இன்ைறய தைலமுைறயினர் முன்னூறு ேசனல்கேளாடு பிறந்ததால், அந்தச் ெசய்திகள் அப்படி சிறப்பாகத் ேதான்றாவிட்டாலும், அப்ேபாது தூர்தர்ஷன் ெசய்திகைளப் பார்த்துப் பார்த்து சலித்துப் ேபாயிருந்த கண்களுக்கு, சன் டிவியின் ெசய்திகள் புத்துணர்ைவ தந்தது. வளர்ப்பு மகள் திருமணத்தின் ேபாது, அந்த மணமகன் வரேவற்பு ஊர்வலத்தில், பட்டாைடயுடன், ெஜயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நைக

ெஜாலிக்க நடந்து வந்தைதயும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் பாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் ேபால, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கிேயாடு, அப்ேபாது நடந்து வந்த வால்டர் ேதவாரமும் நடந்து வந்த கண்ெகாள்ளா காட்சிைய மலர் மருத்துவமைன மாடியிலிருந்து சன்டிவியின் ேகமரா ேமன் கண்ணன் என்பவர், படெமடுத்தார்.

இப்ேபாது எல்ைலப் பாதுகாப்புப் பைட டிஜிபியாக உள்ள விஜயகுமார், அப்ேபாது ெஜயலலிதாவின் பாதுகாப்புக்காகேவ எஸ்எஸ்ஜி என்ற பைடைய உருவாக்கினார். அந்தப் பைடையச் ேசர்ந்தவர்கள், மலர் மருத்துவமைனயின் மாடியிலிருந்து படெமடுத்த கண்ணைன ெஜயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக ைகது ெசய்தனர்.

இந்த ைகது சன்டிவியின் பரபரப்ைப ெபருமளவில் அதிகரித்தது. இந்தக் ைகைத ெபரிய ெசய்தியாக்கிய சன் டிவி, இது ெதாடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்ேபாைதய உள்துைற அைமச்சர் எஸ்.பி.சவாண், ஆகிேயாருக்கு புகார் அனுப்பியது.

1996. இதற்குப் பிறகுதான், மாறன் சேகாதரர்களின் அசல் முகம் ெதரியத் ெதாடங்கியது. கருணாநிதி ஆட்சிையப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், ெநடுந்ெதாடர்களுக்கு திைரப்பட நடிக நடிைகயைர மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்கைள மிரட்டுவதில் ெதாடங்கி ேகடி சேகாதரர்களின் ஆதிக்கம் ெகாடிகட்டிப் பறந்தது. திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திைரத் துைறயினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.

அறிவாலயத்தில் தனது அலுவலகத்ைத ைவத்திருந்த சன் டிவி, ெமல்ல ெமல்ல, அறிவாலயத்ைதேய தன் வசம் ெகாண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் ைவத்திருந்த, ேவலூர் எம்எல்ஏ காந்திைய, தனது ெசல்வாக்ைகப் பயன்படுத்தி காலி ெசய்ய ைவத்தார் கலாநிதி மாறன்.




அழகிரி, அதிரடி அரசியல் ெசய்து தனது ெபயைர ெகடுத்துக் ெகாண்டார் என்றால், ேகடி சேகாதரர்கள், அழகிரி
ெசய்வைதப் ேபால பத்து பங்கு ெசய்தாலும் ெவளியில் ெதரியாமல் பார்த்துக் ெகாண்டார்கள். ேகடி சேகாதரர்கைளப் ேபால திமுக ஆட்சியின் அதிகாரத்ைத பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருேம இல்ைல.

அப்ேபாெதல்லாம், இப்ேபாது ேபால ேகபிள் யுத்தம் ெபரிதாக இல்ைல. ேசனல்களும் குைறவாக இருந்ததால், ேகபிள் ெதாழில் அவ்வளவு ேபாட்டி நிைறந்ததாக இல்ைல. ஆனால், ஒரு ஆக்ேடாபஸ் ேபால ேகபிள் ெதாழிைல ேகடி சேகாதரர்கள் வைளக்கத் ெதாடங்கினர். எஸ்.சி.வி என்ற ேகபிள் விநிேயாக நிறுவனத்ைத ெதாடங்கியவர்கள் முதலில் ெசன்ைன நகரில் மட்டும் ேகபிள் விநிேயாகத்ைத நடத்தி வந்தனர். எஸ்சிவிக்கு ேபாட்டியாக ெசன்ைனயில் இருந்தது மும்ைபையச் ேசர்ந்த ஹாத்ேவ நிறுவனம். ஹாத்ேவ நிறுவனத்தின் முக்கிய சந்தாதாரர்கள் மிகப் ெபரிய

பணக்காரர்கள். வசதி பைடத்தவர்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஹாத்ேவ நிறுவனம் ெகாடிகட்டிப் பறந்தது.

96-2001ல் ஹாத்ேவைய விட்டு ைவத்த ேகடி சேகாதரர்கள், 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ேகபிள் ெதாைலக் காட்சியில் தங்கள் ஏகேபாகத்ைத நிைலநாட்டினர்.

2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்ேப, ெஜயலலிதா ஆட்சிக் காலத்திேலேய தமிழகம் முழுக்க ேகபிள் ெதாழிைல தங்கள் கட்டுப் பாட்டில் ெகாண்டு வந்தவர்கள் தான் ேகடி சேகாதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்ைத பிரேயாகித்து, ஹாத்ேவ நிறுவனத்ைத ெசன்ைன நகரத்ைத விட்ேட துரத்தினர். தமிழகம் முழுக்கவும், ேகபிள் ெதாழில்,

ேகடி சேகாதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், ெதாைலத் ெதாடர்புத் துைற அைமச்சராக ஆனதும், ேகபிள் ெதாழில் இவர்கள் கட்டுப் பாட்டில் ெகாண்டு வருவதற்கு ெபரும் உதவியாக அைமந்தது மட்டுமல்ல,
பல்ேவறு ேசனல்களில் ெசய்தி ெவளியிடாமல் இருக்க ெபரும் ெநருக்கடி ெகாடுக்க உதவியது. விஜய் டிவியில் முன்பு,

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்ேதாடு ேசர்ந்து தயாரித்த ெசய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச்  ெசய்திகள், நடுநிைலைமயாக, மக்களிடம் நல்ல வரேவற்ைபப் ெபற்றதால், தனது அதிகாரத்ைத பயன்படுத்தி, விஜய் டிவிக்கு ெசய்திகள் ஒளிபரப்பும் அனுமதிைய பறித்தார் தயாநிதி மாறன். அப்ேபாது பறிக்கப் பட்ட ெசய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படேவயில்ைல.

இது மட்டுமல்லாமல், அப்ேபாது ஓரளவு நடுநிைலேயாடு ெசய்திகைள ெவளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது ெதலுங்கு ெதாைலக்காட்சிக்காக ஆன்ைலன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி ேவைன ைவத்து, ெசய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா ெதாைலக்காட்சிைய ெசய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்துவிட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறேன… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரேயாகம் பாருங்கள்.

தயாநிதி மாறன் மத்திய ெதாைலத்ெதாடர்புத் துைற அைமச்சரானேத ஒரு சுைவயான கைத. அவரின் தந்ைத
முரெசாலி மாறன் வர்த்தகத் துைற அைமச்சராக இருந்து, உலக வர்த்தக ைமய மாநாட்டில் ஏைழ நாடுகள் ெதாடர்பான நீண்ட உைரைய ஆற்றி, இந்தியாைவ ெபருைமப் படுத்தினார். ெசன்டிெமன்ட்டலாகவாவது, அந்தத் துைறைய ேதர்ந்ெதடுத்திருக்க ேவண்டும். ஆனால் இவர்கள் தான் ேகடி சேகாதரர்களாயிற்ேற… ெதாைலத் ெதாடர்புத் துைறதான்

ேவண்டும் என்று, அத்துைறைய ைகப்பற்றினர். அந்தப் ெபாறுப்ைப ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தைலைம நிர்வாகியாக இருநதார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறன் தரப்பில் ெசால்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி ேசனல்கள் ெதாடர்பாக தகவல் ஒளிபரப்புத் துைறதான் அனுமதி வழங்க ேவண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துைற ஒரு ேபாஸ்ட் ஆபீஸ்தான். ஒரு ெதாைலக்காட்சி தனது ஒளிபரப்ைப நடத்துவதற்கு ஸ்ெபக்ட்ரம் தான் அடிப்பைட. அந்த ஸ்ெபக்ட்ரத்ைத வழங்குவதற்கு அனுமதி வழங்க ேவண்டியது ெதாைலத் ெதாடர்புத் துைற. இைத ைவத்துத் தான், சன் டிவிக்கு ேபாட்டியாக, உள்ள
ேசனல்கைள வளர விடாமல் ெசய்தனர்.

ஒரு உதாரணத்ைதக் கூற ேவண்டுமானால், ெஜயா ெதாைலக்காட்சி, 24 மணி ேநர ெசய்தி ேசனல் ெதாடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ெஜயா ெதாைலக்காட்சி புதிய ஸ்ெபக்ட்ரம் ேகட்கவில்ைல. ஏற்கனேவ ெஜயா  ெதாைலக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்ெபக்ட்ரத்ைத ேமலும் வலுவாக பயன்படுத்தேவ அனுமதி ேகட்டது. ேம 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ெஜயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் ேமலாக தயாநிதி மாறனால் கிடப்பில் ேபாடப்பட்டது.

ெஜயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தது. நீதிமன்றத்தில் ெஜயா டிவி ேபாலேவ, ைகரளி டிவியும்ெசய்தித் ெதாைலக் காட்சி ெதாடர்வதற்காக ெகாடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலைன ெசய்யப்பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது.

தயாநிதி மாறன் ெதாைலத் ெதாடர்புத் துைற அைமச்சராக இருந்த ேபாது நடந்த மற்ெறாரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்ைக ெதாடர்பானது. டாடா ேநரடியாக வட்ீ டுக்ேக ெதாைலக்காட்சி ேசைவைய வழங்கும் டாடா ஸ்ைக என்ற ஒளிபரப்ைப துவக்க உத்ேதசித்தது. இதற்கான அனுமதிைய வழங்க ேவண்டியது ெதாைலத் ெதாடர்புத் துைற அைமச்சகம். டாடா ஸ்ைக ெதாடங்க அனுமதி வழங்குவைத ெதாடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன்.


தயாநிதி மந்திரியாக இருந்த சமயத்தில், ெதாைலத் ெதாடர்புத் துைற புதிய சட்டம் ஒன்ைற ெகாண்டு வந்தது. அது என்னெவன்றால், ெதாழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ெசல்ேபசியிேலேய ேநரடியாக ெதாைலக்காட்சிைய பார்க்கும் வாய்ப்பு உருவானதால், ெசல்ேபசிக்கு பயன்படும் ஸ்ெபக்ட்ரத்ைதயும், ெதாைலக்காட்சிகள் ஒளிபரப்பப் படும்

அைலவரிைசையயும் இைணக்கும் வைகயில் (Convergence) வழி வைக ெசய்யும் ஒரு சட்டம் உருவாகிறது.

இது ேபான்ற சட்டம், உருவாக்கும் அைமச்சகத்தின் அைமச்சர் தம்பி தயாநிதி மாறன். அந்த அைமச்சகம் உருவாக்கும் சட்டத்தின் விைளவுகள் என்ன என்பைத உணர்ந்து அதற்குத் தகுந்தாற்ேபால புதிய பிசினைச ெதாடங்குவது அண்ணன் கலாநிதி மாறன். எப்படி இருக்கிறது ?

நீண்டெதாைலவு அைழப்புகளுக்கான கட்டணம் 100 ேகாடி ரூபாயாக இருந்த ேபாது, அந்த கட்டணத்ைத 2.5 ேகாடியாக குைறத்தவர் தயாநிதி. இது எந்த ேநரத்தில் என்றால், ெதாைலத் ெதாடர்பு நிறுவனங்கள் நீண்ட தூர அைழப்பு வசதிைய வழங்குவதற்கு ேபாட்டி ேபாடத் ெதாடங்கிய ேநரத்தில் இவ்வாறு கட்டணங்கைள குைறத்தார். ெவளிநாடுகளுக்கு அைழக்கும் கட்டணங்கைளயும் குைறத்தார். இந்த ெதாழில் ெதாடங்குவதற்காக இருந்த பல்ேவறு கட்டுப்பாடுகைளயும் நீக்கினார். அேதாடு, ஒேர கம்பிவட இைணப்பு மூலமாக, இைணய இைணப்பு, ெதாைலேபசியில் ேபசும் வசதி உள்ளிட்ட வசதிகைள வழங்கவும் வழிவைக ெசய்தார்.

இந்த வசதிகைள உருவாக்கிய ேநாக்கேம, எஸ்சிவி மூலமாக, இேத வசதிைய சன் ெநட்ெவார்க் வழங்க ேவண்டும் என்பதற்காேவ…. தம்பி வழங்குகிறார்… அண்ணன் பயன்படுத்திக் ெகாள்கிறார். இதற்காக நாம் வாக்களித்து இவர்கைள பாராளுமன்றத்திற்கு அனுப்புகிேறாம்.

84 எப்எம் ைலெசன்ஸ் ெபறுவதற்கு விண்ணப்பித்த ேகடி சேகாதரர்கள் 67 ைலெசன்சுகைள ெபற்றார்கள். இப்ேபாது உள்ள சட்டத்தின் கீழ் 46 ைலெசன்சுைளத் தான் ைவத்துக் ெகாள்ள முடியும் என்பதால், மீதம் உள்ள ைலெசன்சுகைள விற்று விடுவார்கள்.

தம்பி தருகிறார், அண்ணன் ெபறுகிறார். டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், ேபான்ற அத்தைன ெபரிய நிறுவனங்களும்,  அரசாங்க விதிகைள வைளத்து, லஞ்சம் ெகாடுத்துதான் ெதாழில் ெசய்கின்றன என்றாலும், இது ேபால இவர்கேள அரசாங்கமாகவும், இவர்கேள ெதாழில் அதிபர்களாகவும், இவர்கேள ைலெசன்சுகைள ெகாடுத்தும், இவர்கேள, அைதப் ெபற்றுக் ெகாள்வதும், இந்தியாவிேலேய முதல் முைற என்றால் அது மிைகயாகாது.

இந்த ேகடி சேகாதரர்கள், இந்து பத்திரிக்ைகயின் பங்ைக வாங்குவதற்கு முயற்சி எடுத்தார்கள் என்ற ெசய்தி உங்களில் பல ேபருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ேகடி சேகாதரர்கள் சன் டிவி பங்குச் சந்ைதயில் நுைழந்த காலத்தில், அதன் மூலம் வந்த ெபரிய வருவாைய ைவத்து, இந்து பத்திரிக்ைகயில் பங்ைக வாங்க முயற்சித்து, அது நிைறேவறாமல் ேபானது.

சன் டிவி உள்ளிட்டு, ேகடி சேகாதரர்கள் ெமாத்தம் 20 ேசனல்கைள பல்ேவறு ெதன்னிந்திய ெமாழிகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்ைடப் ேபால, ஏகேபாகம் அங்ேக இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள, ெதலுங்கு, மைலயாளம், கன்னடம் ேபசும் மக்களின் ஒட்டு ெமாத்த கவனத்ைதயும் ஈர்த்து அதன் மூலம் ெபரிய வருவாைய ஈட்ட கடுைமயாக முயற்சித்து வருகிறார்கள்.

ேகடி சேகாதரர்களின் ெவற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வியாபார தந்திரம். ஒரு விஷயத்ைத வியாபார ரீதியாக ெவற்றி ெபற ைவக்க நூதனமான பல்ேவறு தந்திரங்கைள ைகயாளுவதில் ேகடி சேகாதரர்கள் சமர்த்தர்கள். தினகரன் நாளிதைழ வாங்கியதும், வடிவைமப்ைப மாற்றி வண்ணத்தில் ெகாண்டு வந்தேதாடு, அைத வியாபார ரீதியாக ெவற்றி ெபற ைவக்க மிகச் சிறந்த தந்திரத்ைத ைகயாண்டார்கள். தினத்தந்தி 3 ரூபாய்க்கும், தினமணி 3 ரூபாய்க்கும், தினமலர் 3 ரூபாய்க்கும் விற்றுக் ெகாண்டிருந்த காலத்தில், தினகரைன 1 ரூபாய்க்கு வழங்கினார்கள். 1 ரூபாய் என்றதும், வியாபாரம் ெகாடிகட்டிப் பறந்தது. குறுகிய காலத்திேலேய சர்குேலஷன் பல மடங்கு உயர்ந்ததும், பத்திரிக்ைக விைலைய 2 ரூபாய் ஆக்கி விட்டு இன்று தமிழகத்தின் 2வதாக அதிகம் விற்பைனயாகும் நாளிதழாக ஆக்கியிருக்கிறார்கள்.

இேத ேபால ேகடி சேகாதரர்கள் ெதாடங்கிய மாைல நாளிதழ் தமிழ் முரசு. ெசன்ைனயில் மாைலயில் பரபரப்பாக பல வருடங்களாக ெகாடிகட்டிப் பறந்த மாைல நாளிதழ்கள் மாைல முரசு மற்றும் மாைல மலர். தமிழ் முரசு ெவளியீடு ெதாடங்கியதும், தினந்ேதாறும், தமிழ் முரேசாடு இலவசமாக ஏதாவது ஒரு ெபாருைள வழங்கினார்கள். அவ்வாறு இலவசமாக வழங்கப் படும் ெபாருள்களுக்கு இவர்கள் காசு ெசலவழிக்கப் ேபாவது இல்ைல. சம்பந்தப் பட்ட ெபாருள்கைள தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக இலவசமாக வழங்கும் ெபாருட்கைள இவர்கள் தமிழ் முரேசாடு வழங்கி, தங்கள் விற்பைனைய அதிகரித்துக் ெகாண்டார்கள். இது தவிரவும், குங்குமம், வண்ணத்திைர, முத்தாரம் என்று வார இதழ்கைளயும் நடத்தி வருகிறார்கள் ேகடி சேகாதரர்கள்.

இதற்கு அடுத்து ேகடி சேகாதரர்கள் இறங்கிய ெதாழில் திைரப்படத் தயாரிப்பு. இவர்கள் திைரப்படத் தயாரிப்பில் இறங்கிய பிறகு, சன் டிவி தங்கள் வியாபாரத்துக்கான எத்தைன ெபரிய அேயாக்கத்தனத்தில் ேவண்டுமானாலும்

இறங்கும் என்பது ெதள்ளத் ெதளிவாகத் ெதரிந்தது.






சன் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப் பட்ட முதல் படம் ‘காதலில் விழுந்ேதன்’. அந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடைல தவிர்த்து ேவறு எதுவுேம இல்ைல. மிகச் சுமாரான வசூைலப் பார்த்த அந்தப் படத்ைத சன்டிவி டாப் ெடன் திைரப்படங்களில் முதலிடத்ைத பிடித்ததாக ெதாடர்ந்து பல வாரங்களுக்கு ஒளிபரப்பியது, சன் டிவியின் ேமாசமான
ஊடக தர்மத்ைத ெவளிப்படுத்தியது.

எந்திரன் என்ற ரஜினிகாந்த் நடித்த படத்துக்காக ெபரிய பரபரப்ைப ஏற்படுத்தி, இந்தியாவுல் ஏேதா யுகப்புரட்சி நடந்து விட்டது ேபான்ற ேதாற்றத்ைத ஏற்படுத்தினார்கள் ேகடி சேகாதரர்கள். இந்தத் திைரப்படம் எதிர்ப்பார்த்தைதப் ேபால ஓடவில்ைல, விநிேயாகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்று ஒரு ெசய்தி ேபாட்டதற்காக ெடக்கான் க்ரானிக்கிள் மற்றும் தினமணி ெசய்தித் தாள்கைள மிரட்டும் விதமாக வக்கீல் ேநாட்டீஸ் அனுப்பியவர்கள் இந்த ேகடி சேகாதரர்கள் என்பைத மறந்து விடக் கூடாது. அப்ேபாது சவுக்கும் இைதப் பற்றி கண்டித்து எழுதியது.

அடுத்ததாக ேகடி சேகாதரர்கள் இறங்கிய ெதாழில் விமான ேசைவ. ஸ்ைபஸ் ெஜட் விமான ேசைவ நிறுவனத்தில் ெபரும்பான்ைம பங்குகைள வாங்கி இன்று அந்த நிறுவனத்ைத தங்களுக்குச் ெசாந்தமானதாக ஆக்கிக் ெகாண்டுள்ளனர் ேகடி சேகாதரர்கள். சமீபத்தில் ெஜயா டிவியில் ெவளி வந்த ெசய்தி ேகடி சேகாதரர்களின் அேயாக்கியத்தனத்துக்கு ஒரு  சான்று.


 திமுக சார்பாக, வாக்காளர்களுக்கு ெகாடுக்கப் படுவதற்காக பல்ேவறு மூட்ைடகள் ஸ்ைபஸ் ெஜட் விமானத்தின் சரக்குகளாக தூத்துக்குடியில் வந்திறங்கி ேசாதைனயில் அந்தப் பார்சல்கள் ைகப்பற்றப் பட்ட ெசய்தி,  அவ்வளவாக ெவளியில் ெதரியாமல் ேபானது.

ேகடி சேகாதரர்களின் விஷமத்தனத்துக்கு ஒரு நல்ல சான்று, அரசு ேகபிள் கார்ப்பேரஷன். தினகரன் ஊழியர்கள் படுெகாைலக்குப் பிறகு, குடும்பம் பிரிந்ததும், அரசுப் பணம் சும்மாதாேன இருக்கிறது என்று கருணாநிதி அரசு ேகபிள் கார்ப்பேரஷைன ெதாடங்கினார். லஞ்சம் வாங்கி சம்பாதிக்கத் ெதரியாத உருப்படாத ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர்,  அந்த கார்ப்பேரஷனின் தைலவராக நியமிக்கப் பட்டு, மிக மிக சிறப்பான பணிைய ெசய்தார். ேகாைவ மாவட்டத்தில் முதல் முைறயாக ஒளி இைழ வடங்கைள நிறுவி, ேகபிள் மூலமாகேவ, இைணய இைணப்பு, ேகபிள் ெதாைலக்காட்சி ேபான்ற பல்ேவறு ேசைவகைள வழங்க முயற்சி எடுத்தார்.



அப்ேபாது, ேகடி சேகாதரர்கள் அழகிரிேயாடு கடுைமயான யுத்தத்தில் இருந்தார்கள். அரேச அவர்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், ேகடி சேகாதரர்கள் சற்றும் சைளக்காமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, கம்பி வட இைணப்புகைள இரேவாடு இரவாக அறுத்ெதரிந்தார்கள். கம்பி வட இைணப்பு ஒரு முைற அறுக்கப் பட்டால், மீண்டும் ெமாத்தமாக
புதிதாக நிறுவப்பட ேவண்டும். பல முைற இவ்வாறு அறுக்கப் பட்டு புதிதாக நிறுவப்பட்டும், மீண்டும் மீண்டும் அைத அறுக்கும் ேவைலகளில் ேகடி சேகாதரர்கள் ஈடுபட்டைத ெபாறுக்க முடியாமல் தான் உமாசங்கர், கம்பி வட இைணப்புகைள அறுப்பவர்கைள குண்டர் சட்டத்தில் ைகது ெசய்ய அனுமதி ேவண்டும் என்ற அப்ேபாைதய தைலைமச் ெசயலாளர் ஸ்ரீபதிக்கு கடிதம் எழுதினார். ஸ்ரீபதி, ெபருமாள் ேகாயில் வாசலில் பிச்ைச எடுப்பவனுக்கு இருக்கும்

சுயமரியாைத கூட இல்லாத ஒரு நபர். அவரா நடவடிக்ைக எடுப்பார் ?
அதிகாரம் இல்லாத ேபாேத இவ்வாறு ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், ேகடி சேகாதரர்களின் துணிச்சைல புரிந்து ெகாள்ளுங்கள். இது தவிரவும், ேகடி சேகாதரர்களுக்கு திமுக கட்சிைய ைகப்பற்ற ேவண்டும் என்ற கனவு உண்டு. பிரிவு காலத்தின் ேபாது, ‘மாறன் ேபரைவ’ என்ற ேபரைவைய ெதாடங்கி கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சித்தவர்கள் தான் இவர்கள் என்பைத மறந்து விடக் கூடாது.

குடும்பம் பிரிவதற்கு முன்பு கூட, கட்சிைய ைகப்பற்றும் முயற்சியில் ேகடி சேகாதரகள் ஈடுபட்ேட வந்தார்கள்.

கருணாநிதிேயாடு உைரயாடிய ஒரு சமயத்தில், கலாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் அைனவருக்கும் ஒரு ெபாலிேரா ஜீப் வாங்கித் தர உத்ேதசித்துள்ளதாக கருணாநிதியிடம் கூறிய ேபாது தான், கருணாநிதி உஷாரானார். பிரிவு காலத்தின் ேபாது, ேகடி சேகாதரர்கள் சார்பாக, தன்னிடம் ேபச்சு வார்த்ைத நடத்த வந்த ைவரமுத்துவிடம், கருணாநிதி முரெசாலி

மாறன் தன் கண்ணின் மணிேபான்றவர் என்றும், ஒரு நாளும், தன்னுைடய நாற்காலிக்கு ஆைசப்பட்டவர் கிைடயாது
என்றும் ெசால்லியிருக்கிறார்.

ேகடி சேகாதரர்கள் சந்தித்த முதல் ெநருக்கடி, கைலஞர் டிவியின் ெதாடக்கம். கைலஞர் டிவி ெதாடங்கப் பட்ட ேபாது,
அங்ேக பணியாற்றிக் ெகாண்டிருந்த 250க்கும் ேமற்பட்ட ெதாழில்நுட்ப கைலஞர்கள், கைலஞர்கள் என ஒேர நாளில் கைலஞர் டிவிக்கு மாறினார்கள். இதற்கான முக்கிய காரணம் என்னெவன்றால், இத்தைன ேகாடிகள் சம்பாதித்தாலும்,

ஊழியர்களுக்கு கப்பித் தனமாக குைறந்த சம்பளேம சன் டிவியில் வழங்கப் படும் என்பது. கைலஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிைடக்கிறது என்றவுடன், ெபரும்பாலான கைலஞர்கள் கிளம்பி விட்டார்கள்.

ேகடி சேகாதரர்களின் அராஜகம் ஒரு பக்கம் என்றால், அவர்களிடம் ேவைல பார்க்கும் நபரும் அராஜகத்தில் ஈடுபடுவது
என்பதுதான் ேவதைனயிலும் ேவதைன. சரக்கடித்து விட்டு, ெபண் விவகாரத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்ைடைய,  ஆட்கைள கூட்டிக் ெகாண்டு ேபாய், ஒரு ஓட்டைல அடித்து ெநாறுக்கும் அளவுக்கு துணிச்சல் ெகாண்டவர்தான்.

ஹன்ஸ்ராஜ் சக்ேசனா என்ற ேகடி சேகாதரர்களின் நம்பிக்ைகக்குரிய ைகத்தடி.



இந்தத் துணிச்சல் வந்ததற்கு காரணம், கருணாநிதி முதல்வர் என்பைதத் தவிர ேவறு என்ன ? அவர்களின் துணிச்சல்
ெபாய்யானது இல்ைல என்பைத நிரூபிக்கும் வைகயில், ெசன்ைன மாநகர கமிஷனர் கண்ணாயிரம், இந்த விஷயத்தில் இது வைர ஒருவைரக் கூட ைகது ெசய்யவில்ைல என்பது குறிப்பிடத் தகுந்தது.

ேகடி சேகாதரர்களின் அதிகாரமும், அேயாக்கியத்தனங்களும் தமிழகத்தில் பாயாத இடேம இல்ைல எனலாம்.
அடுத்ததாக  ேகடி சேகாதரர்கள் ரிைலயன்ஸ் ப்ேரஷ் ேபான்ற ரீட்ெடயில் வாணிபத்திலும் இறங்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான்
ேலட்டஸ்ட் தகவல்.

Tomorrow Never Dies என்று ஒரு ேஜம்ஸ் பாண்ட் படம் வரும். அந்தப் படத்தில் வரும் வில்லனுக்கு ெதாழிேல மீடியா அத்தைனையயும் தன் கட்டுப் பாட்டில் ைவத்திருப்பது. அது எதற்காக என்றால், நாைள இந்த உலகம் என்ன படிக்க ேவண்டும், எது ெசய்தியாக ேவண்டும் என்பைத நான்தான் தீர்மானிப்ேபன் என்று கூறுவார். ஏறக்குைறய அந்த
வில்லன் ேபான்றவர்கள் தான் இந்த ேகடி சேகாதரர்கள்.

சமீபத்திய உதாரணம், அன்னா ஹசாேரவின் பட்டினிப் ேபாராட்டம். அன்னா ஹசாேர பட்டினிப் ேபாராட்டத்ைத ெதாடங்கியதிலிருந்து, ேதசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த  ெசய்திக்கு ெகாடுத்த

முக்கியத்துவத்ைதயும், அைதெயாட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அைனத்தும் கிளர்ந்ெதழுந்ததும் நம் அைனவரும் அறிந்த ஒரு விஷயம்.





ஆனால் சன் டிவி, இது ேபான்ற ஒரு சம்பவேம நடக்காதது ேபால, வடிேவலுவின் ேபச்ைச ஒளிபரப்பிக் ெகாண்டிருந்தது என்றால், எத்தைன ெபரிய அேயாக்கியத்தனம் என்பைத நிைனத்துப் பாருங்கள். நாேட பற்றிக் ெகாண்டு எறியும், ஒரு ெசய்திைய, அந்தச் ெசய்தி ேதர்தைல பாதிக்கும் என்பதால், ெவளியிடாமல் இருப்பது எத்தைன ெபரிய துேராகம்? அேயாக்கியத்தனம் ?

ேகடி சேகாதரர்களின் மிகப் ெபரிய பலேம, எஸ்சிவி தான். இந்த எஸ்சிவியின் ெகாட்டத்ைத அடக்கினால், இவர்களின் ஏகேபாகம் தானாக முடிவுக்கு வரும். இன்று ெசன்ைனயில் என்டிடிவி இந்து, பாலிமர், ேபான்ற பல்ேவறு ெதாைலக்காட்சிகள் ஒழுங்காக ெதரியாமல் இருக்கிறது என்றால், அதற்கு ஒேர காரணம், ேகடி சேகாதரர்கள் தான்.

வருடத்துக்கு இவர்களுக்கு ஐந்து ேகாடி கட்டினால் மட்டுேம, சம்பந்தப் பட்ட ேசனல்கள் ப்ைரம் பாண்டில் ைவக்கப்
படும். இல்லெயன்றால், சுத்தமாக ெதரியாத வண்ணம் பார்த்துக் ெகாள்வார்கள்.

நான்கு வருடங்களாக அைமதியாக இருந்து விட்டு, இன்று திடீெரன கருணாநிதி குடும்பத்ைத உறித்து ெதாங்க விட்டுக்
ெகாண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகைள ேகடி சேகாதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது

பரவலாக பத்திரிக்ைகயாளர்கள் மத்தியில் உலவும் ெசய்தி. திமுக குடும்பத்ைதப் பற்றி இத்தைன ெசய்திகள் ெவளியிட்டாலும், விகடன் குழுமம், ேகடி சேகாதரர்கைளப் பற்றி ஒரு வார்த்ைத கூட ேபசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவைல உறுதிப் படுத்துகிறது.

கருணாநிதி ஆட்சி வழ்ீ த்தப் பட ேவண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல….. ேகடி சேகாதரர்கள் என்ற ஆக்ேடாபஸ், தமிழகத்ைத கபளகீ ரம் ெசய்யாமல் இருப்பதற்காகவுேம…
Blogger Widget