-->

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...

சில மாதங்களுக்கு முன் வரை எந்த ஊடகத்தினை பார்த்தாலும் ஒரு வாக்கியம் 'இது இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டம்' என்று! 


74 வயதான அன்னா ஹசாரே, தனது கிராமத்தின் வளர்ச்சியை முன் மாதிரியாக கொண்டுவந்தமைக்காக பத்ம ஸ்ரீ(1990), பத்ம பூஷன் (1992) போன்ற உயரிய விருதுகளைப்பெற்றவர். மேலும் மாநில, மதிய அரசுகளால் பல விருதினை பெற்றுள்ளார் (விருதுகளை வாங்கவில்லை, பெற்றுள்ளார்!)

இந்திய ராணுவத்திலிருந்து வரும் ஓய்வூதியத்தை மட்டுமே தனது வருமானமாகக் கொண்டுள்ள ஹசாரே, ஏப்ரல் 16  ஆம் தேதி தனது சொத்து விபரத்தை தாக்கல் செய்தார், அதில் அவருக்கு வங்கியில் 
INR 67,183 மற்றும் கையிருப்பாக INR 1,500 உள்ளதாக தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அவரின் முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். 

திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஊழல் எதிர்ப்பு காட்சியினை அன்று முதல் 
அனைத்து ஊடகங்களும் புத்துணர்ச்சி பெற்று ஒளிபரப்பத் தொடங்கின...

இதில் இவருடன் முன்னாள்/இந்நாள் நேர்மையாளர்கள் சிலர் 
சேர்ந்துக்கொண்டு 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' என்று ஒரு அமைப்பை 
தொடங்கி அதற்கு புத்துனர்வ்வு கொடுத்தனர்.
ஹராரே 'நினைப்பதை' மக்களிடத்திலும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள்
இவர்கள் தாம். இப்படியாக சில பல வாரங்கள் ஊடகங்களில் 
இவர்கள் 'காட்சியளிக்க' இவர்களின் எண்ணங்களோ வேறு மாதிரியாக 
திரும்பத் தொடங்கிவிட்டது! 

இந்திய நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்ததாக கொண்டிருக்கும் வேலையில்,
அவர் குழுவில் 'இருந்த' கேஜ்ரிவால், ஹசாரே தான் நாடாளுமன்றத்தைவிட  

முக்கியமானவர் என்று ஒரு கருத்தினை தெரிவித்தார்.


மேலும், இது போன்ற பல வீண் வீர வசனங்கள் பத்திரிகைகளுக்கு அள்ளி வீசி அரசாங்கத்தை கோபப்படுத்தி வந்தனர்.


                  
பிரஷாந்த் புஷன் (அடிபட்டதற்கு முன்)
அவரே தான்! அடி வாங்கும்போது!


பார்த்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள்(?!), இப்படியாக விட்டால் நமது நிலை
'இன்னும்' மோசமாகி விடும் இந்த குழுவினை அடக்க வேண்டும் என்று 
நினைத்துக்கொண்டிருந்த வேலையில், குழுவில் இருந்த பிரஷாந்த் பூசன் 
காஷ்மீர் பற்றி கூறிய தவறான கருத்தால் அடி, உதய் வாங்கியது மட்டுமலாமல், 
அன்னா ஹசாரே குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். குழுவிலேயே இருந்தால் அவர்களுக்கும் அவப்பெயர் வந்துவிடுமோ என்று 
அவர்கள் நினைத்தார்களோ என்னவோ, நமக்கு தெரியாது!

ஒவ்வொரு பேட்டியிலும் தனது கருத்தினை மாற்றி, மாற்றி சொல்லும் 'திறமை'
வாய்ந்த ஹசாரே, இனி எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை என்று சில 
நாட்களுக்கு முன், தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் காரணமாக மௌனவிரதம்த்தைக் கடைபிடிக்கப்போவதாக அண்ணா ஹசாரே முடிவெடுத்துள்ளார்.

இப்படியாக இருக்க ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசாங்கத்தை கொச்சை படுத்தியதாக குழுவில் உள்ள கிரண் பேடி மேல் சில புகார்களும் எழுந்துள்ளது... மேலும் இவர்களின் போராட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியின் 'நிலை' என்ன என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால்
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக இருக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் கேஜ்ரிவால் INR 9.15 லட்சம் வரி பாக்கி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியுள்ளது. மேலும் குழுவில் சேர்ந்த நிதியில் தனது அறக்கட்டளைக்கு சில ஒதுக்கிகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

லோக்பால் நிறைவேரவிடால் காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்வோம், நிறைவேற்றினால் காங்கிரஸ் க்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று (ஏதோ லோக்பால் நிறைவேற்றினாலே ஊழல் ஒழிந்துவிடுவது போலவும், நிறைவேற்றினால் இதுவரை நடந்த ஊழளெல்லாம் சரியான முடிவிற்கு வந்துவிடுவது போலவும்!) ஏக வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழு, ஆரம்பமாவதற்கு முன்பே ஆட்டம் கண்டு வருகிறது என்பது தான் உண்மை!!!


Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...