-->

திங்கள், 30 மே, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா!!!

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகிவிட்டன... மதிப்பெண்களை அள்ளிக்குவித்துள்ளனர் மாணவர்கள்...

இம்முறை நகர்புற மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளனர்...

இதற்கான காரணங்களை நாம் இங்கு ஆராயப்போவதில்லை...

அன்று அம்பேத்கர் நிர்ணயித்தார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடத் என்று...

ஒரு நல்ல எண்ணத்தோடு அவர் கொண்டு வந்த முறை சரியாக பயன்படுத்தப்படாமல் வெறும் அரசியலுக்காகவே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது...

நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி அளிக்க வகைசெய்யும் கல்வி உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் 6 ஆகஸ்ட் 2009இல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது... இம்மசோதாவினை திடமாக அமல் படுத்தினாலே எதிர்காலத்தில் இடஒதுக்கீடு தேவையிலாமல் போகும்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே, பல குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறும் வேலையில், உயர் கல்விக்கு இட ஒதுக்கீடு எதற்கு?

இக்கால சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தர சலுகையாகிவிட்டது...


எந்த பெரியார், ஜாதிகள் இருக்ககூடாது என்று போராடினாரோ, இன்று அவர் பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைகழகம், மாணவர் சேர்கையின் பொழுது ஜாதிவாரியாக இடம் ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது... அந்த நிலைமையில் அவரது சிந்தனைகளை பாதுகாக்கிறார்கள் அவரது தலையாயத்  தொண்டர்கள்...

இப்படியாக ஒரு குழந்தை ஆரம்பக்காலப் பள்ளியில் சேரும்பொழுதே விண்ணப்பப்படிவத்தில் சாதியினைக் குறிப்பிடச்செய்வது, கட்சித்தலைவர்கள், தங்களைப்பற்றி உண்மைச்செய்திகளை மக்களுக்கு விளக்கும்படியாக பத்திரிக்கைகளில் வந்தால் அந்தப்பத்திரிக்கையினை ஜாதியின் பெயரைச் சொல்லி அவதூறு கூறுவது, அகில இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு செய்வது, மேற்படிப்பிற்கு குறைந்த மதிப்பெண் போதும் என்று அந்த மாணவர்களை சோம்பேரிகலாக்குவது என்று எதில் காணிலும் ஜாதியினை புகுத்தி அரசியல் செய்யும் இக்காலத்தில், பாரதி பாடிய

ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்

என்று பாடியது பொய்யாகி,

ஜாதிகள் உள்ளதடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அரசியல் என்று தான் பாடவேண்டும்.
Blogger Widget

புதன், 25 மே, 2011

திஹார்... சிறை எண் ஆறு...

நன்றி: சவுக்கு.net

சிறைக்கு செல்வதை போல புகைப்படத்திற்கு Pose கொடுத்தபோது எடுத்த படம்...
தமிழகத் சட்டமன்றத் தேர்தலின்போது இலங்கைத்தமிழர்களுக்காக போராடுவதைப்போல நாடகமாடி, சிறை செல்வதைப்போல காவலர் வண்டியில் ஏறி Pose கொடுத்து, அப்படியே காவலர் வண்டியில் வீட்டில் இறங்கியிருப்பார்... ஆனால், இன்று!!!

ஈழத் தமிழினம் சோறில்லாமல், கையிழந்து, காலிழந்து, உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது, ஏசி காரில் பவனி வந்து, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, போலிப் பாதிரியோடும், நக்கீரன் காமராஜோடும் முந்திரி பக்கோடாவைச் சாப்பிட்டுக் கொண்டு அதைப் பற்றி விவாதம் நடத்தினார் கனிமொழி. பதுங்கு குழிக்குள் மக்கள் கிடந்த போது, சென்னை சங்கமம் நடத்தி பவனி வந்தார் கனிமாழி.


அன்று பதவியிலிருந்தபோது மக்களின் நலத்திட்டங்களுக்காக தில்லிக்கு செல்லாதவர் இன்று தன் 'சொந்த' விடயத்திற்காக 'தில்லிக்கு' செல்ல முடிகிறது! ஹ்ம்ம்... மற்றவைத்தான் வேஷம்,  பெத்த பாசம், இல்லாமலா போகும்? 


சிறைக்கு செல்லும்போது Pose குடுக்க முடியாது என்பதை சொல்வதை போல எடுத்தபோது...
இன்று திஹாரில் இருக்கிறார். முதல் நாள் இரவு அவருக்கு வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் தூங்க முடியவில்லையாம். கழிப்பறைக்கு மறைப்பு இல்லாததால் கஷ்டப் பட்டாராம். விடியற்காலை 2.30 மணிக்குத் தான் உறங்கச் சென்றாராம். காலை 5.30 மணிக்கு சிறை அதிகாரிகள் எழுப்பியதும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று கேட்டாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டதாம்.


கனிமொழி அவர்களே…. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.

இதற்கு உங்க டாடி என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா ?

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

Blogger Widget

சனி, 21 மே, 2011

Corporate குடிகாரன்.


முற்காலத்தில், இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாதபொழுது அவர்களிடையே மது அருந்துவது ஒரு பழக்கமாக இருந்தது, பின்னர் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைமுறை வந்தபின்னர், பலர் குடியை ஒதுக்கிவைத்தனர், இது அனைவரும் அறிந்ததே.

பெண் பார்க்கும் பேச்சு எடுத்தாலே, மாப்பிளையைப் பற்றிய  முதல் கேள்வி, புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருப்பவரா என்றுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாலிபர்கள் அவ்வளவு சுலபமாக மது அருந்திவிட முடியாது. மது அங்காடியில் விற்பனையாளர் வயதில் இளையோர் குடிக்க வந்தால், அவர்களை அதட்டி அனுப்புவார்கள் என்று கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் உள்ளூரிலேயே கல்லூரிப் படிப்பையும் படித்துவந்தனர்.

ஆனால், இன்று நிலைமை வேறு. பெரும் விழுக்காட்டினர் வெளியூர் சென்றுதான் படிக்கின்றனர். அதிலும் கல்லூரி விடுதியில் தங்குவதும், வெளி விடுதியில் தங்குவதும்தான் வாடிக்கை. இதனால் கேட்பாறற்று பல பழக்கங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். கல்லூரி வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே ஏதோ கட்டவிழ்த்து விட்டது போல நினைப்பு வந்துவிடுகிறது. பக்கத்து வீட்டு ஆயா செத்தாலும் சோகம் என்று சொல்லி குடிப்பது, நண்பனை ஒரு பெண் பார்க்கிறாள் என்றாலும் குஷி என்று சொல்லி குடிப்பது என்று இப்பொழுது தொட்டதிற்கெல்லாம் குடி. போதாக்குறைக்கு அவ்வபோது அரசு நடத்தும் மதுபானக்கடைகிளில் புதியவகைகளை வேறு அறிமுகப்படுத்துகின்றனர்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. [பொருட்பால்: கள்ளுண்ணாமை]

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.


பொங்கல் தினத்தன்று மட்டும் தமிழகத்தில் 90 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்தது முந்தய தி.மு.க ஆட்சி.
இதில் எந்த ஆட்சியையும் விதிவிலக்கல்ல... 
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் பண்டிகை தினத்தன்றும், பிரபல அணிகள் களமிறங்கும் கிரிக்கெட் தினத்தன்றும், அரசு மதுபானக்கடைகளில் ஒரு 'இலக்கு வைத்து விடுகிறார்கள்', குறைந்த பட்சம் 50 கோடி, 100 கோடிக்கு விற்பனை செய்யவேண்டுமென்று. அந்த அளவிற்கு நமது சமுதாயத்தினரை அரசாங்கம் புரிந்து வைத்திருக்கிறது.

கல்லூரி முடித்து பணிக்கு சேர்ந்ததும், உடன் பணிபுரிபவரிடம் கேட்கும் முதல் கேள்வி... அடிக்கடி party எல்லாம் உண்டா? பெற்றோர் பணத்தில் படித்த போதே கேட்பாறற்று மாதம் ஒரு முறை குடிக்கப் பழகியவனுக்கு, பணியிர்சேர்ந்தவுடன் கேட்கவும் வேண்டுமா?


கம்பனிகளிளெல்லாம் இப்பொழுது குடிக்காதவனைத்தான் தீண்டத்தகாதவனைப்போல பார்கிறார்கள் இப்பொழுது.

அவன் குடிகாரன் என்று ஒதுங்கிய காலம் சென்று இப்பொழுது, அவன் 'குடிக்காதவன்' என்று சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம் பார்க்கும் போது வள்ளுவரின் 'குர(ல்)ள்' தான் நினைவிற்கு வருகிறது

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. [பொருட்பால்: கள்ளுண்ணாமை]

அதாவது, ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது Corporate குடிகாரனுக்கு.
Blogger Widget

வியாழன், 5 மே, 2011

யாம் பெற்ற இன்பம்.


ஒவ்வொரு பொழுதும் உணவு உண்ணும்பொழுது, 'நல்லா இருக்கு அம்மா...' என்று சொன்னபோது என் தாய் பெற்ற மகிழ்ச்சி;

விடுமுறைக்கு என் பாட்டியின் வீடிற்கு சென்றிருந்த சமயம், மாடியில் இருந்த கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்து, 'பந்து போடுடா நம்ம ஒரு ஆட்டம் விளையாடலாம்' என்று குழந்தை மனதுடன் என் தந்தை கூறிய அந்த சமயம்;

விளையாட்டில் ஆர்வம் கொண்ட என் தந்தையை ஒரு நாள் மாலையில், 'வாங்கப்பா விளையாடலாம்' என்று நான் அழைத்த பொழுது அவர் நெகிழ்ந்த விதம்;

வெகுநேரமாக அழுதுக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு குழந்தையை, என் மடியில் போட்டு, என் காலாட்டி துங்கவைத்தபோது;

விடியற்காலையில் பணிக்கு சென்றபொழுது, எட்டு ரூபாய் பயனசீட்டிற்கு முழுதும் சில்லறையாய் கொடுத்தபொழுது, புன்முறுவலுடன் அகத்திலிருந்து நடத்துனர் கூறிய 'நன்றி';

சாலையில் சென்றுகொண்டிருந்தபொழுது ஒரு பந்து என் மேல் விழ, மறுபுறம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், 'அண்ணா, அந்த பந்தை எடுத்து போடுங்கண்ணா என்று பயம் கலந்த புன்னகையுடன் கேட்டபொழுது நினைவிற்கு வந்த 'என் சிறுவயது விளையாட்டு';

ஏழு வருடம் கழித்து சந்தித்த என் நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, அவனுக்கு வந்த அழைப்பில்... 'பல வருடம் கழித்து என் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், பிறகு உன்னுடன் பேசுகிறேன் என்று 'தன் காதலியிடம்' என் நண்பன் கூறிய அந்த நிகழ்வு;

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் சக நண்பர்கள் முன்னிலையில் 'நீ இல்லாமல் போயிருந்தால், இந்த அளவு என் கல்லூரி நாட்களை கொண்டாடியிருபேனா என்பது சந்தேகமே' என்று என் நண்பன் கூறிய அந்த சமயம்...

இது போல் இன்னும் சிற்சில நிகழ்வுகளாலும், நிகழ்சிகளாலும் வாழ்வில் யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்.
Blogger Widget