-->

செவ்வாய், 19 ஜூலை, 2011

கை அளவு உலகம்!

பல நூற்றாண்டுகளாக நம் நாடு அடிமைப் பட்டிருந்தாலும், பல ஆட்சியாளர்கள் (அந்நாள் ஆட்சியாளர்கள்!) நம் நாட்டின் வளங்களை சுரண்டியிருந்தாலும், வற்றாத வளம் படைத்த நாடு நம் இந்திய நாடு.

பொன், பொருள் (இவையெல்லாம் யாரிடமிருந்தன, எங்கு இருந்தது என்று ஒரு வரையறை இல்லை!), மண், காடு, கனிமங்கள் போன்று அணைத்து வளங்களையும் பெற்றிருந்த பெருமை நம் நாட்டிற்கு மட்டுமே உண்டு.

இயன்றவரை நம்மிடமிருந்து அபகரித்துசென்ற பின் சுதந்திரம் பெற்றோம் <இவற்றைப் பற்றி "எதற்கு சுதந்திரம்" கட்டுரையில் விரிவாக பேசியிருந்தோம்>
நம் நாட்டில் தீர்க்க தரிசனம் காணும் தலைவர்கள் இல்லை போலும். எதிர்காலத்தை எண்ணிப்பார்க்காமல் அனைத்து தரப்பு நிறுவனங்களையும் நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி அளித்து, நம் நாட்டின் வளங்களை அழிக்க வழி வகுத்துவிட்டர்கள் நம் தலைவர்கள்.
 
எத்துணையோ இடம் இருந்தும் அவரவர் நாட்டில் தொழில் தொடங்காமல் (கழிவுகளால் பாதிப்பு அவர்களின் நாட்டிற்குத் தான் உண்டாகும் என்று!), நம் நாட்டில் தொழில் தொடங்கி, அதனால் பெரும் லாபம் அடைது வருகிறார்கள். இதனால் நம் நாட்டிற்கு என்ன பயன்? சில சொற்ப வரி மட்டுமே! (அதுவும் எத்துனை செலுத்துகிறார்கள் எனபது அரசாங்கத்திற்கே வெளிச்சம்).
 
நம் நாட்டில் தொழில் தொடங்குவார்கள், சொற்ப விலை கொடுத்து வேலை வாங்குவார்கள், பண் மடங்கு லாபம் ஈட்டுவார்கள் (தவறில்லை, இது வணிகம், ஆனால்...) தொழிற்சாலைகளின் கழிவுகளை மட்டும் நம் மண்ணில் விட்டுவிடுவார்கள்! இதனால் பாதிக்கப் படுவது? நமது விவசாய பூமியல்லவா?


இப்படி மற்றவரெல்லாம் தீர்க்க தரிசனத்தோடு முடிவெடுக்கும் போது, நாம் மட்டும் எமாந்தவர்களாய் இருக்கிறோமே!

கடந்த சில வருடங்களாகவே பருவக்காலங்களில் மழை பொழிவதில்லை, எல்லா மாதங்களிலும் வெயில் என மாற்றங்கள் ஏராளம். அனைத்து நாடுகளும் 'உலக வெப்பமயமாதலை' (Global Warming ஐ ) எதிர்கொள்ள திட்டம் தீட்டி வருகிறார்கள்.

அனால், இங்கோ... சாலைகளை விரிவாக்க சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன! மக்களுக்காக எடுத்து செல்லப்படும் தண்ணீர் வண்டியிலிருந்து பாதி தண்ணீர் சாலைகளில் தான் கொட்டிக்கொண்டு செல்லப்படுகிறது... அவ்வளவு அலட்சியம்! இது போல் எரிபொருள் (பெட்ரோல்) ஏற்றி செல்லும் வாகனங்களை விடுவார்களா?

இன்னும் நாற்பது ஆண்டுகளில் இமயமலை, அது தொடர்ந்து ஓடும் நதிகள் வற்றிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது! இப்பொழுதே பல நதிகள் வறண்டுவிட்டன, பல குளங்கள், ஏரிகள் மட்டைபந்து விளையாடுமிடமாகிவிட்டது!

தாமதிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தண்ணீர், மின்சாரம் (இருக்கும் பொழுது!) என அனைத்தையும் தேவைக்கு 'குறைவாகவே' உபயோகப் படுத்த பழகிக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் புழு, பூச்சிகளை உண்ணப்பழகி வருகிறார்கள். அவர்களும் ஏதோ பழகுகிறார்கள் போலும்!


இக்கையளவு உலகை காப்பது, ஒவ்வொருவரின் கடமை!
Blogger Widget

1 கருத்து: