-->

புத்தக விமர்சனம்


கிமு. கிபி.
சுட சுட வைத்த காபி  ஆறு நிமிஷத்துக்குள்ள குடிக்கலேன்னா சூடு ஆரிடரா மாதிரி, நல்ல வேலையா புத்தகங்களுக்கு அப்படி ஒன்னும் இல்லை!
ஏன்னா ஆருவருஷதுக்கு முன்னாள் மதன் ('ஹாய்' மதன்) எழுதின 'கிமு. கிபி.' புத்தகத்தை இப்போதுதான் படித்தேன்!

வழக்கமா எழுதறா மாதிரி இல்லாமல், ஒரு வித்யாசமா பேசிக்கொண்டே எழுதலாம் என்று தான் இந்த 'புத்தக விமர்சனம்' பதிவு.

வழக்கமா வரலாறு படிப்பதைப்போல படிக்கபோறோம் என்று நினைத்துதான் படிக்க ஆரம்பித்தேன்! புத்தகம் தொடங்கியவுடனே நம்மை கால இயந்திரத்தில் அமர்ந்துக்கொள்ள சொல்கிறார் மதன்! நாம் 450 கோடி ஆண்டுகளுக்கு பின்னரில் இருந்து புது மில்லினியம் வரை பயணிக்கிறோம்!

மனிதன் தோன்றுவதற்கு முன், நமக்கு தெரிந்த (?!), அதாவது பெயர் தெரிந்த மிருகங்கள் தோன்றுவதற்கு முன், என்று பல இடங்களுக்கு இந்த புத்தகம் வழியே அழைத்து செல்கிறார்! படிக்கும் விஷயத்தை அதன் பக்கத்திலிருந்தே பார்பதைப்போல ஒரு கற்பனையோடு படித்தால், மிக சுவாரஸ்யம்! 'லைப் ஒப் பை' படம் பார்த்த அனுபவம், இல்லை.. முதல் தடவையாக  'ஜுராசிக் பார்க்' பார்த்த திகைப்பு, ஹ்ம்ம்... 'ஜுமாஞ்சி' படம் பார்த்த சுவாரஸ்யம்!

வழக்கமான வரலாறு புத்தங்களை போல 'கண்டிப்புடன்' வரலாறை மட்டுமே பேசாமல், இப்போது இருக்கும் சில விஷயங்களுடன் ஒப்பிட்டு சொல்லிருக்கும் விதம், அக்மார்க் மதன் ஸ்டைல்! 'அக்மார்க்', 'ஸ்டைல்'.. ஹ்ம்ம் இப்படிதான் பல இடங்களில் தனது பாணியில் ஆங்கிலம் உபயோகப்படுத்தி எழுதி இருக்கார்! அதில் தவறு ஒன்னும் இல்லை!
எனது 'நற்கனா' பதிவுல தூக்குப்படுக்கைன்னு சொன்னதை 'அப்படின்னா என்னா பா' என்று கேட்ட சிலருக்கு Stretcherபா என்று சொன்னதை கேட்டுவிட்டு, அட இதத்தான் அப்படி சொன்னியானு கேட்ட சம்பவம் தான் நினைவுக்கு வருது! அது போல இல்லாமல் இயல்பாக எல்லோருக்கும் புரியும் விதத்தில் தனக்கு உரிய பாணியில் எழுதியிருக்கார்!

தமிழகத்து பக்கம் கொஞ்சம் திரும்பியிருந்திருக்கலாம், தமிழில் எழுதினதாலோ என்னவோ, தமிழ் நாட்டை பற்றி எழுத மறந்துவிட்டார்! ரோம், இத்தாலி, ஏதன்ஸ் புகழ் தான் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில்! கர்நாடகத்தை பற்றி நாலு வரிகள் பேசின அளவுக்கு கூட தமிழகத்தை பற்றி சொல்லலை என்பது வருந்த தக்கது! 

சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த கால இயந்திரத்திலிருந்து தடாலென தள்ளி விட்டது போல கடைசி பக்கம் படிக்கும் பொது இருந்தது.

இதற்கான தொடர்ச்சி புத்தகம் வருமா?

ஹ்ம்ம்.. அவரைத்தான் கேட்கணும் என்று நீங்க சொல்லறது கேட்க்குது!

திரை விமர்சனத்தில் படங்களுக்கு மார்க்கு போடற மதனுக்கு நம்ம மார்க்கு போடமுடியாது, சுருக்கமா இந்த புத்தகத்தை நீங்க ஏன் படிக்கனும் என்று சொனால் "எலேய் மிஸ் பண்ணிடாதீக, அப்பறம் வருத்தப்படுவீங்க!"

Blogger Widget

2 கருத்துகள்: