அன்றாடம் நம்மிடம் இருக்கும் பழகுமுறை பற்றிய சில கருத்துக்களை பழகலாம் வாங்க பதிவில் படித்திருப்பீர்கள், இந்த பதிவு அதன் தொடர்ச்சியாக கருதவும்!
நம்முடைய எண்ணங்கள் எப்போது புதிய விடயங்களை சிந்திக்கும்? நாம் பிறருடன் கலந்துரையாடும்போது தான்.
இன்று பலர் நேரம் செலவழித்து பிறரிடம் பேசுவதில்லை. வீட்டில் இருக்கும்போது கணினி, கைப்பேசியுடன் மட்டுமே பேசுகிறோம். நம்மில் எத்தனை பேர் நம் வீட்டினருடன் மனம் விட்டு பேசுகிறோம் இன்று? கணினி, கைபேசி இல்லா காலத்தில் மகிழ்ச்சி பொங்க மாலை ஆனால் நண்பர்களுடன் விளையாட்டு, நம் வீட்டினர் அக்கம் பக்கத்து வீட்டாருடன் உரையாடுவதுமாக ஒரு அற்புதமான காலம் அது. மாலை ஆனால் வீதியெங்கும் மக்கள் நடமாட்டம், பேச்சு சத்தம், சிரிப்பு சத்தம், குழந்தைகளின் விளையாட்டு சத்தம் என்று அமர்க்களப்படும்.
காலை வீட்டை விட்டு வெளியே சென்றால், சோர்ந்து வியர்வை வடிய உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் மட்டுமே வீடிற்கு வந்து,
விளையாடப் போனால் வீட்டிற்கே வருவதில்லை என்று அம்மாவிடம் வசவு வாங்கிய காலம் சென்று, இன்று பலர் வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லை (சினிமாவிற்கு செல்வதை தவிர்த்து)..! சுதந்திரமாக வெளியே சுற்றியகாலம் சென்று, இன்று இணையம், தொலைக்காட்சி முன்னர் அடிமையாகயுள்ளது உலகம்.
விளையாடப் போனால் வீட்டிற்கே வருவதில்லை என்று அம்மாவிடம் வசவு வாங்கிய காலம் சென்று, இன்று பலர் வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லை (சினிமாவிற்கு செல்வதை தவிர்த்து)..! சுதந்திரமாக வெளியே சுற்றியகாலம் சென்று, இன்று இணையம், தொலைக்காட்சி முன்னர் அடிமையாகயுள்ளது உலகம்.
படிக்கும் காலத்தில் அதிகமாக பழகாதவர்களுக்கு இன்று சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கில் நண்பர்கள் என்று பார்க்கும் உடன் படித்தோருக்கு ஆச்சர்யமாக தெரியும்! நிஜ நண்பர்களுடன் பழகாமல் நிழல் நண்பர்களுடன் பழகும் மட்டத்திலேயே இன்று உலகம் சுழன்றுக்கொண்டிருக்கிறது. அவ்வபோது அடிபடும் செய்தி, சமூக வலைதளத்தில் முன்பின் தெரியாதவரிடம் பழகி எமர்ந்ததால் பெண் தற்கொலை! மேலும் இது போன்ற செய்திகள்... முன்பின் தெரியாதவரிடம் ஏமார்ந்து இறப்பதற்காகவா இந்த உயிர் கொடுக்கப்பட்டுள்ளது?
பல நாள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடும் சமயம், கேளிக்கைக்காக சினிமா செல்வதை தவிர்த்து விளையாடிப்பாருங்கள், இரண்டு மணிநேரம் பேசிப்பாருங்கள், சினிமா சென்று யாரோ ஒருவர் நடிப்பதை பார்த்து ரசித்து பொழுதை போக்குவதைவிட நம் நண்பர்களுடன் பேசி கழிக்கும் சமயத்தில் தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்! புதிய எண்ணங்கள் பிறக்கும். அந்த புதிய எண்ணம் ஒரு புதிய படைப்பை கூட உருவாக்கலாம், புது திறமையை வெளிக்கொண்டுவரலாம், புது உத்வேகத்தை கொடுக்கலாம்!
நிழலிலிருந்து வெளிவந்து நிஜத்துடன் பழகுவோம்!