-->

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உயிர் மதிப்பு பெறுவோம்...

செய்தித்தாள் கையில் எடுத்தவுடனே கண்ணில் தென்படுவது, 'குண்டு வெடிப்பில் 100 பேர் உயிர் இழப்பு', 'தீவிரவாதிகளால் பலர் சுட்டுக்கொலை', 'இரயில் விபத்து, பேருந்து விபத்து - பலர் சாவு' போன்றன. செய்தி என்று  படித்தாலும் இவை வேறு வகையில் வந்தவண்ணம் தான் உள்ளன.
இங்கு கேள்வி என்னவெனில், அந்த செய்தியை படிக்கும்போது நம் மனதில் தோணுவது என்ன?

'அடடா பாவம்', 'இவனுங்களுக்கு வேல இல்ல, எவனாவது யாரயாவது சுட்டுண்டே இருப்பானுங்க', 'இப்படி துப்பாக்கி சூடு நடதரவனலாம் `தூக்குல` போடணும்' போன்றன.

இவ்வாறு 'முதல் பக்கத்திலிருந்து, அடுத்த பக்கம் திருப்பும் வரை' நாம் வருந்துவோம்... அவர்களின் குடும்பத்தினரை பற்றி ஒரு கணமும் நாம் வருந்துவதில்லை. அவர்கள் மனநிலை என்ன பாடு படும் என்பதை நாம் சிந்திப்பதில்லை.


நமக்கு பிடித்த ஒருவர், நம்மீது பாசம் வைத்த ஒருவர், உடல் நலக்குறைவால் அவதிப்படும் போது நம் மனம் படும் பாடு, அவர் உயிருக்கு போராடும் வேலையில் அவரருகில் இருந்து ஒரு கணம் அவர் படும் வேதனயைக்கண்டு, அவர் அனுபவிக்கும் சித்திரவதையைக்கண்டு நம்மை அறியாமல் நம் கண்களிலிருந்து கொட்டும் கண்ணீர் அருவி, இவை தான் அந்த உயிரின் மதிப்பினை, அந்த பிரிவின் வருத்தத்தினை நமக்கு உணர வைக்கும் சமயங்களாக அமைகிறது.

பணமிருக்கும் மனிதனை எப்போதும் மனம் நாடுவதில்லை.... நல்ல குணம் இருக்கும் மனிதனைதான் மனம் நாடுகிறது. பாசத்திற்காக ஏங்குவதுதான் மனித மனம், அந்த ஏக்கத்தினை நாம், நமக்கு வேண்டியவருக்கு ஏற்படும்படி விடக்கூடாது. பாசத்தை மனதிலேயே பூட்டி வெய்பதால் ஒரு பயனும் இல்லை. பாசத்தை அள்ளிக்கொடுக்க வேண்டும். பணம் காசு கொடுப்பது மட்டுமே பாசம் அல்ல, அன்புடன் பேசுவது தான் என்பதை உடனடியாக உணர வேண்டும். அடுத்தவரிடம் மனம் விட்டு பேசுவது நம் மனதையும் அமைதி படுத்தும். காரணமில்லாமல் முகத்தை 'உம்' என்று காட்டுவதனால் நம் மனம் அழுத்தம் தான் அடையும், ஒரு சிறு புன்முறுவலினால் மனக்குழப்பம் சட்டென்று மறையும்.

நமக்கு தெரியாத உயிர் பிரிந்தால் நாம் அதை சட்டைசெய்வதுகூட இல்லை, அனால் நம்மை பிறர் எப்படி பார்க்க வேண்டும் என்பது நாம் பிறரிடம் நடந்து கொள்வதில் தான் உள்ளது.

பிற உயிரிடம் உண்மையான அன்பு செலுத்தி, நம் உயிர் மத்திப்பை பெறுவோம்.
Blogger Widget

4 கருத்துகள்: