-->

புதன், 8 ஜூன், 2011

பலித்தது சாபம்...


இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று மாலைஇந்தியாவை பரம விரோதியாக பார்த்த Winston Churchill சொனார்...
 வின்ஸ்டன் சர்ச்சில் 1898 - 1927
Power will go to the hands of rascals, rogues and freebooters.
All Indian leaders will be of low caliber and men of straw.
They will have sweet tongues and silly hearts.
They will fight among-st themselves for power and India will be lost in political squabbles.

அன்று அவர் சொன்னது தொலைநோக்கு பார்வையோ, அல்லது அவருடைய சாபமோ தெரியவில்லை,  ஆனால், அதனை நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

(இடமிருந்து வலம்) கபில் சிபல், ப.சிதம்பரம், வீரப்ப மௌலி, பிரணாப் முகர்ஜி, சல்மான் க்ருஷீத்

தேர்தல் ஆணையத்தைப் போல, தனி பலம் கொண்ட ஒரு ஆணையம்; அதற்கு, அரசாங்கத்தை கேட்காமல் ஊழல் புரிபவரை (தொழிலதிபராகட்டும், அரசியல்வாதியாகட்டும்) கடுமையான முறையில் தண்டிக்கும் அதிகாரம் தான் 'லோக் ஜன பால்' (citizens' ombudsman bill). இந்த தண்டனை சட்டத்தை, சமூக ஆர்வலர்கள் மக்களின் கருத்துக்களைக்கொண்டு ஒரு விதிமுறைகளை இயற்றி அரசாங்கத்திடம் கொடுப்பார்கள், பின் இரு தரப்பினரும் கலந்தாலோசித்து, விதிமுறைகளையும், தண்டனைகளையும் இறுதி செய்து..,பின்  இம்மசோதாவிற்கு மாநிலங்களவையில் ஆதரவு கிடைத்து அமல் படுத்தவேண்டும். 

கடந்த 1969இல் இருந்து.., அதாவது கடந்த  நாற்பத்து இரண்டு (42) வருடங்களாக ஒரு மசோதாவை கிடப்பிலேயே வைத்திருக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அவ்வபோது இம்மசோதாவை நிறைவேற்ற போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன, ஆனால் அண்மையில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு மசோதா கிடப்பில் இருந்ததே இபொழுதான் நம்மில் பலருக்கு தெரியவந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.

(இடமிருந்து வலம்)அண்ணா ஹசாரே, சந்தோஷ் ஹெக்டே, ஷாந்தி பூசன், கிரண் பேடி, J.M.Lyngdoh
ஊடங்கங்களின் ஆதரவும்., விடாது தொடர்ந்து மக்கள் மத்தியில் இச்செய்தியை வெளியிட்டு நாடெங்கும் பரவச்செய்துள்ளது, சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை கிளப்பியுள்ளது.இதற்கிடையில் இப்பொழுது இதற்காக குரல் கொடுப்பவர்களை மிரட்டும் வண்ணம் மத்திய அரசு நடந்து வருகிறது, பெண்களையும், வயதானவர்களையும் அடித்து உதைத்து அவசரகால நிலைபோல கண்ணீர் குண்டுகளை வீசி, சுதந்திரத்திற்கு முன் நடந்த ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறது மத்திய அரசு.


சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து பிரதமராக இயங்கிக்கொண்டிருக்கிறவர், இச்சம்பவம் துரதிஷ்டவசமானது என்று ம் கருத்தினை தெரிவித்தார். மேலும், உண்ணாவிரதம் இருக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. நாட்டில்... ஏன் உலகுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் குஜராத் மாநிலத்தை புகழ்ந்து (அட.. அங்கு உள்ளத்தை சொல்வதே, புகழ்ந்து சொல்வதுபோல்தான் தெரியும்...) சொன்ன அண்ணா ஹசறேவை கண்டிக்கிறார்கள் காங்கிரசார்... இந்த குழுமத்தில் 'பொறுப்பாளராக' இருந்துக்கொண்டே கபில் சிபல், வீரப்ப மௌலி போன்றோர்.., இம்மசொதாவினை நிறைவேற்றினால் நாட்டில் மழை வருமா, நல்ல கல்வி கிடைக்குமா, நல்ல மருத்துவம் கிடைக்குமா என்று கேலி பேசுகிறார்கள்...   

நாளும் பல ஊழல் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன... இவையெல்லாம் காணும்போது ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது....

வின்ஸ்டன் சர்ச்சில் அன்று விட்ட சாபம்... இன்று பலித்துக்கொண்டிருக்கிறது...
Blogger Widget

4 கருத்துகள்:

 1. -->PM should come out and clean his cabinet first. This will never happen unless or until Mrs.Gandhi realise.

  -->For all the issues, we have 3 ministers on track - HM, FM, DM - will these ppl does not have any job on their own sensitive port folios?

  -->Why PM gave the deadline to declare the assets of ministers to aug 31? why so long time? does they need time to grab those and include it??

  -->If the Jan lokpal bill was not passed in parliament for resolution. then as per Anna Hazare - aug 15th onwards as per him - second freedom fight to commence, ppl of india feel!!!!!

  பதிலளிநீக்கு
 2. இக்கருத்தினை ஆமோதிக்கிறேன்.
  இந்தியாவின் பெருமை உலகநாடுகளிடையே சந்திசிரிக்கிறது.
  இப்பொழுதாவது நிலைமையை சீர் செய்ய மதிய அரசு முன் வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையில் சர்சில் சொன்ன வாசகத்தை
  இன்றுதான் முழுமையாகப் படிக்கிறேன்
  எத்தகைய தீர்க்க தரிசி

  பதிலளிநீக்கு
 4. ஒரு தீர்க்க தரிசியின் சாபம் என்றும் சொல்லலாம்!

  தங்கள் கருத்துக்கு நன்றி ரமணி ஐயா...

  பதிலளிநீக்கு