-->

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...

சில மாதங்களுக்கு முன் வரை எந்த ஊடகத்தினை பார்த்தாலும் ஒரு வாக்கியம் 'இது இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டம்' என்று! 


74 வயதான அன்னா ஹசாரே, தனது கிராமத்தின் வளர்ச்சியை முன் மாதிரியாக கொண்டுவந்தமைக்காக பத்ம ஸ்ரீ(1990), பத்ம பூஷன் (1992) போன்ற உயரிய விருதுகளைப்பெற்றவர். மேலும் மாநில, மதிய அரசுகளால் பல விருதினை பெற்றுள்ளார் (விருதுகளை வாங்கவில்லை, பெற்றுள்ளார்!)

இந்திய ராணுவத்திலிருந்து வரும் ஓய்வூதியத்தை மட்டுமே தனது வருமானமாகக் கொண்டுள்ள ஹசாரே, ஏப்ரல் 16  ஆம் தேதி தனது சொத்து விபரத்தை தாக்கல் செய்தார், அதில் அவருக்கு வங்கியில் 
INR 67,183 மற்றும் கையிருப்பாக INR 1,500 உள்ளதாக தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அவரின் முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். 

திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஊழல் எதிர்ப்பு காட்சியினை அன்று முதல் 
அனைத்து ஊடகங்களும் புத்துணர்ச்சி பெற்று ஒளிபரப்பத் தொடங்கின...

இதில் இவருடன் முன்னாள்/இந்நாள் நேர்மையாளர்கள் சிலர் 
சேர்ந்துக்கொண்டு 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' என்று ஒரு அமைப்பை 
தொடங்கி அதற்கு புத்துனர்வ்வு கொடுத்தனர்.
ஹராரே 'நினைப்பதை' மக்களிடத்திலும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள்
இவர்கள் தாம். இப்படியாக சில பல வாரங்கள் ஊடகங்களில் 
இவர்கள் 'காட்சியளிக்க' இவர்களின் எண்ணங்களோ வேறு மாதிரியாக 
திரும்பத் தொடங்கிவிட்டது! 

இந்திய நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்ததாக கொண்டிருக்கும் வேலையில்,
அவர் குழுவில் 'இருந்த' கேஜ்ரிவால், ஹசாரே தான் நாடாளுமன்றத்தைவிட  

முக்கியமானவர் என்று ஒரு கருத்தினை தெரிவித்தார்.


மேலும், இது போன்ற பல வீண் வீர வசனங்கள் பத்திரிகைகளுக்கு அள்ளி வீசி அரசாங்கத்தை கோபப்படுத்தி வந்தனர்.


                  
பிரஷாந்த் புஷன் (அடிபட்டதற்கு முன்)
அவரே தான்! அடி வாங்கும்போது!


பார்த்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள்(?!), இப்படியாக விட்டால் நமது நிலை
'இன்னும்' மோசமாகி விடும் இந்த குழுவினை அடக்க வேண்டும் என்று 
நினைத்துக்கொண்டிருந்த வேலையில், குழுவில் இருந்த பிரஷாந்த் பூசன் 
காஷ்மீர் பற்றி கூறிய தவறான கருத்தால் அடி, உதய் வாங்கியது மட்டுமலாமல், 
அன்னா ஹசாரே குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். குழுவிலேயே இருந்தால் அவர்களுக்கும் அவப்பெயர் வந்துவிடுமோ என்று 
அவர்கள் நினைத்தார்களோ என்னவோ, நமக்கு தெரியாது!

ஒவ்வொரு பேட்டியிலும் தனது கருத்தினை மாற்றி, மாற்றி சொல்லும் 'திறமை'
வாய்ந்த ஹசாரே, இனி எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை என்று சில 
நாட்களுக்கு முன், தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் காரணமாக மௌனவிரதம்த்தைக் கடைபிடிக்கப்போவதாக அண்ணா ஹசாரே முடிவெடுத்துள்ளார்.

இப்படியாக இருக்க ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசாங்கத்தை கொச்சை படுத்தியதாக குழுவில் உள்ள கிரண் பேடி மேல் சில புகார்களும் எழுந்துள்ளது... மேலும் இவர்களின் போராட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியின் 'நிலை' என்ன என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால்
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக இருக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் கேஜ்ரிவால் INR 9.15 லட்சம் வரி பாக்கி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியுள்ளது. மேலும் குழுவில் சேர்ந்த நிதியில் தனது அறக்கட்டளைக்கு சில ஒதுக்கிகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

லோக்பால் நிறைவேரவிடால் காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்வோம், நிறைவேற்றினால் காங்கிரஸ் க்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று (ஏதோ லோக்பால் நிறைவேற்றினாலே ஊழல் ஒழிந்துவிடுவது போலவும், நிறைவேற்றினால் இதுவரை நடந்த ஊழளெல்லாம் சரியான முடிவிற்கு வந்துவிடுவது போலவும்!) ஏக வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழு, ஆரம்பமாவதற்கு முன்பே ஆட்டம் கண்டு வருகிறது என்பது தான் உண்மை!!!


Blogger Widget

வெள்ளி, 28 அக்டோபர், 2011

பேச்சைக் குறை...

நன்றி: துக்ளக்


மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். 
புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. 


ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. 
அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது.

2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்! உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.

எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.

அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம்.
ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது.

இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், "பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது.

ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .
Blogger Widget