-->

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெண்கள் நம் கண்கள்

நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஓசுரின்  பிரதான கடைத்தெருவில் நான் கண்ட காட்சி...

ஏழு பேர் அடங்கிய மாணவர்களை உள்ளாடையுடன் அவர்கள் கழுத்தில், ஸ்லேட்டில் ஒரு செய்தி தொங்கவிடப்பட்டவாறே தெரு தெருவாக இழுத்து செல்லப்பட்டனர்.

ஸ்லேட்டில் எழுதப்பட்டிருந்த செய்தி 'நாங்கள் இனி எந்த பெண்ணையும் கேலி செய்யமாட்டோம், பெண்கள் எங்கள் கண்கள்' என்று.

பத்து பேரில் ஒருவர் நல்லவராக இருப்பார்கள் என்று பொதுவாக சொல்லக்கூட முடியவில்லை இன்று, காரணம் அஸ்ஸாமில் நடந்த கொடுமை.

ஒரு பெண்ணை நடு ரோட்டில், பொது மக்கள் நடமாடும் இடத்தில், துளியும் பயமிலாமல் இருபது பேர் மான பங்கப்படுத்தி உள்ளனர். தட்டி கேட்க ஒரு ஈர நெஞ்சமும் முன் வரவில்லை. 

என்பது, தொன்னூறுகளில் திரைப்படங்களில் வருவது போல பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடுமையை சில ஊடகங்கள் வீடியோ பிடிக்க செய்த முயற்சியை , அதை தடுப்பதில் காட்டவில்லை.

நடு ரோட்டில் பெண்ணை மான பங்கப் படுத்திய ஈனப் பிறவிகள்
எடுத்த காட்சியை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பி, இதில் காவலர் தலையிட நான்கு  நாட்கள் தேவைப்பட்டதா என்று கேட்கும் இந்த ஊடகங்கள், கொடுமை நிகழ்ந்த இடத்தில் இருந்த போதே அதை தடுக்கவில்லை, அந்த ஈனப்பிறவிகளை பிடிக்கவும் இல்லை.

இந்த கொடுமை நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இதே அஸ்ஸாமில் சிப்சாகர் மாவட்டத்தில் எல்லை பாதுகாவலர்கள் (ஜவான்) முப்பது பேர் கொண்ட கும்பல் மற்றொரு பெண்ணை மான பங்கப் படுத்த முயல, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓர் மக்கள் காப்பாற்றி உள்ளனர்.

இது போதாதென்று சமிபத்தில் தன வீட்டு பணிப்பெண் மான பங்கப் படுத்தி கொலை செய்த வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ கைது செய்யப் பட்டுள்ளார். 

பெண்களை நம் போல ஒரு மனித இனமாக பார்க்காமல், காமப் பொருளாக பார்க்கும் இந்த ஈனப்பிறவிகளை வீதியில் பொது மக்கள் முன்பு அரசியல் பாகுபாடின்றி தண்டிக்க வேண்டும், அப்போது தான் இது போல பின்னாட்களில் தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.


துபையில் பெண்களை கண்டாலே தண்டனை என்று இங்கு இருக்கும் மக்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால், அந்த கடுமையான தண்டனையின் வெற்றி அது.

என்ன செய்தாலும் வெளியே வந்து விடலாம் என்ற  எண்ண மிகுதியாலே இங்கு தவறுகள் பெருகி உள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் தண்டனை சட்டங்களை கடுமை படுத்த வேண்டிய நேரம் இது.
Blogger Widget