-->

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்கா!

*** மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ***


முதன்முதலில் தொலைதூர விமானப் பயணம். அமெரிக்கா செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். அப்பா, அம்மா, என் தங்கை மூவரும்  தேவையான துணிகளை, பொருட்களை, தின்பண்டங்களை புதிதாக வாங்கிய டிராலி பாகில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். முதல் நாள் இரவு வாங்கிவந்த பாஸ்போர்ட் வாலட்டில்; பாஸ்ப்போர்ட்டை வைக்கலாம், இரவு விமான நிலையம் செல்லும்போது எடுக்க சுலபமாக இருக்கும் என்று பாஸ்ப்போர்ட்டை எடுக்க பீரோவை திரிந்தால்..., அங்கு பாஸ்போர்ட் இருந்த கவர் மட்டும்தான் இருந்தது! பாஸ்ப்போர்ட்டை காணோம்!!!


இரவு பத்தரை மணிக்கு விமானம், மதியம் பதினோரு மணிக்கு பாஸ்ப்போர்ட்டை காணோம்! எனக்கு பதற்றம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. பெங்களூருவில் உடன் தங்கியிருந்த என் நண்பன் லிபினுக்கு போன் செய்து அங்கே மறந்து விட்டிருக்கிறேனா என்று தேட சொல்லி, அலுவலகத்தில் பாஸ்ப்போர்ட்டை ஸ்கேன் செய்தபோது அங்கு விட்டிருப்பேனோ என்று அங்கு பிரேமுக்குபோன் செய்து என் ட்ரைவை  தேட சொல்லி என்று என் பாஸ்ப்போர்ட்டை ஒரு எட்டு பேர் தேடிக்கொண்டிருந்தனர்.


பல நேரமாக என் தங்கை தேட சொன்ன ராக்கில் தேடாமல் எனக்கு தோனியை இடங்களிலெல்லாம் தேடிவிட்டு சரி தேடித்தான் பாப்போம் என்று என் தங்கை சொன்ன இடத்தில் தேடினேன், கோட்டை மாரியம்மனுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக அம்மா வேண்டிக்கொண்டிருந்தார். அப்பாடா!!! கிடைத்தது பாஸ்போர்ட். ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக கிடைத்தது - என்னடா இது ஓசூர் காரனுக்கு வந்த சோதனை!!!

Pause செய்திருந்த பாட்டு மீண்டும் பாட ஆரமித்தது போல, மீண்டும் packingஐ தொடங்கினோம்.

ஓசூர் to நியூயார்க் பயணம் தொடங்கியது. அபுதாபி வழியாக, பெங்களுருவில் விமானம் ஏறியது முதல் நியூயார்க்கிற்கு பத்தொன்பது மணிநேரம் கழித்து வந்திறங்கினேன். என்னை அழைத்து செல்ல John F Kennedy விமான நிலையத்தில் என் நண்பன் அனந்த நாராயண் காத்திருந்தான். விமான நிலையத்திருந்து அவன் தங்கியிக்கும் வீட்டிற்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகியது போக்குவரத்து நெரிசலையும் சேர்த்து.

இரவு ஏழு மணி இருக்கும் நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது. வந்து படுத்து தூங்கியவன் தான், எப்போது எழுந்தேன், என்ன மணி ஒன்னும் தெரியவில்லை. இதன் பெயர் Jet Lag என்பார்கள், நம் நாட்டில் நேரம் வேறு, இங்கு நேரம் வேறு, இந்த புதிய நேரத்திற்கு ஏற்றவாறு நம் உடல் ஒத்துழைக்கும் வரை இந்த நாடு இரவு நேரத்தில் நமக்கு தூக்கம் வர சில நாட்கள் ஆகும். அதற்கு பிறகு வழக்கம் போல தாமதமாக உறங்குவது வேறு கதை!

பெங்களுருவில் இருந்தவரை காலை நான் எழுந்தவுடன் ஒரு அண்ணன் கடையில் காலை தோசை அல்லது இட்லி அல்லது வாங்கிபாத் (வாங்கி பாத்து சாப்பிடுவது அல்ல!) சாப்பிடுவேன். மதியம் சேட்டா கடையில் சாதம் சாப்பிடுவேன், இரவு அலுவலகத்தில் கேன்டீனில் உணவு உண்பேன். தூங்கி எழுந்த முதல் நாள் காலை. நண்பன் அலுவலகம் செல்ல கிளம்பிக்கொண்டிருந்தான். நானும் பொறுமையாக கிளம்ப ஆரமித்தேன், எனது அலுவலகத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நன்பன் வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல ஒரு டாக்ஸி, பின் ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரத்தில் பயணசீட்டு வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் ரயிலுக்காக காத்திருந்தேன்.  ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது. நம்மூரில் இருந்தவரை அலுவலக கார் நேரத்திற்கு வந்து அழைத்து செல்லும், இங்கோ ஒரு conceptஏ கிடையாது! இங்கு எல்லாமே "நமக்கு நாமே" தான்!

அடப்பாவிங்களா!! நம்ம ஆளுங்க இவனுங்க கிட்டேர்ந்துதான் காசவாங்கி, நம்ம ஆளுங்கள ஆபீசுக்கு கார்ல கூட்டிட்டு போறான், அனா இங்க அப்படி ஒரு விஷயமே கிடையாது!

ஒரு வழியாக நியூயார்க்கு வந்து இறங்கினேன். இறங்கும் முன்னரே, முதல் நாள் இது, பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் ஆபீஸ் போகணும் என்று நினைத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினேன். இறங்கி, எப்படி வெளியே செல்லவேண்டும் என்றெல்லாம் யாரையும் கேட்கவில்லை, அதுதான் கடைசி நிறுத்தம், அபப்டியே கூட்டத்துடன் வெளியே சென்றேன்.அந்த நிறுத்தத்திற்கு NY Penn Station என்று பெயர். வெளியே இறங்கியதும் இடது பக்கம் திரும்பினேன், Madison Squre Garden என்றிருந்தது!

அடட!! இது நம்ம மோடி (மூணு வருஷத்துக்கு முன்னாடி, இப்பல்லாம் "நம்ம மோடி" கிடையாது.) வந்து பேசின இடமாச்சே (ஆட்சி ஆரமித்து நான்கு மாதங்களில் அதற்கு ஒரு வாரம் முன்னர் தான் நியூயார்க்கில் மோடி பேசி சென்றிருந்தார்!) என்று எடுத்தேன் உடனே ஒரு selfie. முதல் போட்டோ, அமெரிக்கா வந்திறங்கிய பின்னர். பின்னர் மூன்றாண்டுகளில் எடுத்த முப்பதாயிரம் போட்டோவுக்கு இதுதான் பிள்ளையார் சுழி!  


என்னது? மூணு வருஷத்துல முப்பதாயிரம் போட்டோவா? ஆமாம் பின்ன, திரும்பின பக்கமெல்லாம் அடுக்குமாடி கட்டிடங்கள், விதவிதமான வடிவங்களில், சென்றடைய வேண்டிய இடம் வரை எங்கு சென்றாலும் சுத்தமாக இருக்கும் ரோடுகள், ரோட்டோர குப்பை கூடைகள் முடிகளில் சோலார் பேனல்கள், ஆங்காங்கே உட்கார பெஞ்சு, உணவு வைத்து சாப்பிட டேபிள் & சேர் என்றிருந்தால் ஏன் தான் போட்டோ எடுக்க தோணாது?

தெருவை கூட்டி பெருக்குபவர்கள் அவர்கள் வேலையை செய்ய வேண்டிய தரமான பொருட்களுடன், ஷூ, கைகளுக்கு gloves, ஸ்வாச கவசம், என்று அவர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தால் சலிப்பில்லாமல் எப்பொழுதும் அவர்கள் வேலையை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். நேற்று காலை, அலுவலகம் செல்லும் வழியில், Timessquare அருகில் சாலையில் யாரோ போட்டிருந்த பபுள்கம்மை ஒரு பணியாளர் குச்சியில் குத்தி சொரண்டி சுத்தம் செய்ட்துக்கொண்டிருந்தார். தங்கள் வேளையில் அவ்வளவு மெனக்கெட்டு லட்சக்கணக்கில் மக்கள் நடமாடும் சாலையை ஒருவர் சுத்தம் செய்துக்க கொண்டிருந்தார் என்றால் பாருங்கள்.

இவ்வளவு ஏன், ரோட்டில் நடக்க சிக்னலுக்காக காத்திருந்தேன், யாரோ ரோட்டில் போட்டிருந்த ஒரு குப்பை பேப்பரை, வேலை முடித்து வீடு செல்ல போய்க்கொண்டிருந்த என்னைப் போல ஒருவர் அதை எடுத்து அங்கிருந்த குப்பை கூடையில் போட்டார். அடேங்கப்பா என பூரித்துப்போனேன் முதல் தடவையாக அதை பார்த்தபோது! ஆம், நாம் தான் சுத்தத்திற்கு முதல் படி. நம்ம ஒருத்தர் ரோட்டுல குப்பை போடாம இருந்தா நாடு சுத்தம் ஆகிடப்போகுதா என்ன? என்று கேட்பவர்கள் படத்தில் எட்டு பேர். என் நண்பன் பிரவீன் எப்பொழுதுமே தெருவில் குப்பை போட்டு நான் பார்த்ததில்லை. தன் சட்டைப் பையில் வைத்துக்கொள்வான், பாகில் வைத்துக்கொள்வான். குப்பை தொட்டியை பார்க்கும் போது அதில் அந்தக் குப்பையை போடுவான். இந்த பழக்கமெல்லாம் நம்மிடமிருந்து வரவேண்டியவை, சினிமாவில் வெளிநாட்டை பார்த்து பூரித்தால் மட்டும் போதுமா? இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்து, ஒரு திட்டம் தீட்டி, புதிய பெயரில் வரி விதித்து என்று எத்தனை ஆர்ப்பாட்டம். சுதந்திரம் கிடைத்து ஐம்பது, அறுபது, என்று நூராண்டே ஆகிவிடும் போல இருக்கிறது ஆனால் இன்னும் ரோட்டை சுத்தமாக வைக்க ஒரு வழி பிறக்கவில்லை.

Swachh Barathதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு "ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்!பாகம் - 2 அடுத்த வெள்ளிக்கிழமை வெளிவரும்...
Blogger Widget

15 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

Good Beginning. Continue.

பார்கவ் கேசவன் சொன்னது…

நன்றி கந்தசாமி அவர்களே!

Sriram சொன்னது…

Very good thought!!

பார்கவ் கேசவன் சொன்னது…

நன்றி ஸ்ரீராம்!

ananth narayanan சொன்னது…

Mela koovu da bargav

புலவர் இராமாநுசம் சொன்னது…

சொல்லிச் செல்லும் விதம் நன்று! தொடர்வேன்

பார்கவ் கேசவன் சொன்னது…

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, புலவர் திரு. இராமாநுசம் ஐயா அவர்களே.

Rahini Kesavan சொன்னது…

Very good.. un payanam inithaai thodarattum!

பார்கவ் கேசவன் சொன்னது…

நன்றி அன்புத் தங்கை ராஹினி :)

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

தொடர்கின்றேன். சுத்தம் என்பது நமக்கு சுத்தமாக வராது.

பார்கவ் கேசவன் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி திரு.தமிழ் இளங்கோ ஐயா. தனி மனிதனாக நமக்கு இருந்தாலும், அரசுக்கு இல்லாததுதான் நாட்டுக்கு பிரச்சனையே!

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

நன்றாக எழுதுகிறீர்கள். அமெரிக்க வாழ்வு பற்றி தற்போதுதான் அறிகிறேன் நன்று..

பார்கவ் கேசவன் சொன்னது…

தங்கள் கருத்திற்கு நன்றிகள், தெம்மாங்கு பாட்டாரே! தங்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது :)

vedha சொன்னது…

Simply brilliant.... inum rendu iruku padichitu varaenpa.

பார்கவ் கேசவன் சொன்னது…

நன்றி வேதாத்ரி 😊

Related Posts Plugin for WordPress, Blogger...