திங்கள், 9 ஜனவரி, 2012

அழிய விடமாட்டோம் - தமிழை!


மின் அஞ்சலில் வந்த வண்ணம்... இங்கு...
தேவையின் காரணமாக சில இடங்களில் ஆங்கிலம் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது...
படித்து மறந்துவிடக்கூடிய பதிவு அல்ல இது, தமிழருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தொகுப்பு!
நன்றி!
___________________________________________


இதில் சில கருத்துக்கள் முற்றிலும் வருத்ததிற்குரிய உண்மை.
என்று மாறும் இந்த நிலை?!

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!
இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.


கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.
தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?


*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல.
இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

* மிருகங்களில் நாய்… பாலில் பெண்பால்… இனத்தில் தமிழன்… இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.
ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.
இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

*பெண்ணாசை
பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள், பின்னால் வந்த குறு நில மன்னர்கள், என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரி ‘அரிவராசனம் பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.


இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன் என்று சொல்லி& தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களை, சிங்கள அரசு ஒடுக்கியபோது, ஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.

* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற  மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்! நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!

* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம் காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், "பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம் எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி;எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்" என்று சொன்னார்.
ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும், காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இலை போட்டு, உணவு ஊட்டி, வெற்றிலை மடித்துக்கொடுக்கும் தமிழக காவல்துறை  தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும் அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்.
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்.
பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

“Even a correct decision is wrong….,When it was taken too late..."

தமிழர் என்பதில் பெருமைகொள்வோம், நமது கடமை அறிந்து, பெருமை உணர்ந்து தமிழராக வாழ்வோம், தமிழை வீழாமல் காப்போம்.


வாழ்க தமிழ், வெல்க தமிழ்.
Blogger Widget

வெள்ளி, 6 ஜனவரி, 2012

பெண்ணின் 'நியாயமான' ஏக்கம்!

நன்றி: மின் அஞ்சலில் இந்த தொகுப்பை பகிர்ந்துகொண்ட நண்பர் பா.விஜய்


வயதானால் கருப்பை பிரச்சனை வராது...

நகரப் பேருந்துகளில் ஈனப்பிறவிகளிடம் இடிபட வேண்டியது இருக்காது...

மாதமொரு முறை அடிவயிற்று வலி தாங்க வேண்டியதில்லை...

சட்டங்கள் இருந்தும் குற்றங்களுக்கு ஆளாகமலிருக்கலாம்...

முக்கியத்துவ பட்டியலில் குடும்பத்தை பின் தள்ளி எப்பொழுதும் நம் தோழர்கள் முதலிடம் வகிப்பார்கள்...

சடங்கானால் ,சத்தமில்லாமல் இருப்பதை விட்டு,அலங்கார பொருளாக ஊர் முன் நிற்காமல் இருக்கலாம்...

காதலை ஏற்காவிட்டால் ஆசிட் வீச்சு வாங்காமல் இருக்கலாம்...

கல்யாணம், நகை, பட்டுப்புடவை, வளைகாப்பு ஆகியவற்றை நினைத்து கருக்கலைப்பு செய்யாமல் இருப்பார்கள்...

‘கணவனுக்கு கட்டுப்பட்டு போ’ என்ற அம்மாவின் அறிவுரை கேட்காமல் இருந்திருக்கலாம்...

அன்புக்கணவன் மூணாருக்கு அழைத்து போய், கொலை செய்ய மாட்டான்...

அந்தரங்காமாக எடுத்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் போட்டதற்கு தற்கொலை செய்யாமல் இருக்கலாம்...

மூன்றாவது மனைவியாய் வாக்கப்பட்டு, பதின்நாங்காவது பிள்ளை பெறும் போது இறந்து, தாஜ்மஹால் பெற தேவை இல்லை...

மனைவியையும் எதிரியிடம் பந்தயப் பொருளாக வைக்கலாம்...

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, ஆசிரியரின் இச்சை பார்வைக்கு ஆளாக வேண்டாம்...

கணவனை இழந்தால் மதுரையை எரிக்க வேண்டி இருக்கும்...

ஆண்டவனே ஆனாலும் பதி சந்தேகப்படுவான்...

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்...

குட்டைப் பாவாடைக்காக இல்லாமல் திறமைக்காக விளையாட்டில் புகழ் பெறலாம்...

பத்திரிகைகளிடமிருந்து தப்பிக்க உயிரை விலைக் கொடுக்க வேண்டாம்...

வலைப்பூவில்கூட தேனைத் தேடி, வண்டுகள் திரியாமல் இருக்கும்...

திடீரென்று நாம் துணிக்கடையில் உடை மாற்றியதை இணையதளத்தில் பார்க்க வேண்டாம்...

யார் ஆண்டாலும் 33%-காக போராட வேண்டாம்...

பேசாமல் நாமும் ஆணாகவே பிறந்திருக்கலாம் இல்லையா!!!

Blogger Widget

வியாழன், 24 நவம்பர், 2011

தவமாய் தவமிருந்து...





நன்றி படம்: www.mazhalaigal.com
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

நல்ல கணவர் அமைய வேண்டுமென்று அவளும், நல்ல மனைவி அமைய வேண்டுமென்று அவனும் பல ஆண்டுகளாக கண்ட கனவு ஒருநாள் பலித்து, பின் இருவரும் அழகிய குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்தனர், உகந்த கல்வி, உடை, நேரம் தவறாமல் உணவு என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தனர்.


மழலையாய் இருந்த பொழுது 'அப்ப்ப்பா...இது என்ன ப்ப்பா...' என்று  கேட்கும் ஒவ்வொரு நூறுதடவையும் முதல் முறை சொல்வது போலவே குழந்தைக்கு பதில் அளிக்கும் தந்தை, பருவ வயதில், சற்று தலை வலிப்பது போல இருக்கிறது என்று சொல்ல, உடனேயே கஷாயம் வைத்துக் கொடுக்கும் தாய், எவ்வளவு சண்டைப் போட்டாலும் கண்ணீர் விட்டுக்கொண்டே கட்டித்தழுவும் தங்கை, இப்படி பருவ வயது வந்து சேரும் வரை பாசத்தின் பிணைப்பிலேயே வளர்ந்து வந்த நாம்,  நமது ஒவ்வொரு பிறந்தநாளிலும் நினைக்க வேண்டியது, நமது பிறந்த நாளை மட்டும் அல்ல, நமது பெற்றோர் வயதில் முதிர்ந்துக்கொண்டே வருகிறார்கள் என்பதனையும் தான்.

மழலையாய், குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு பொறுமையுடன் தந்தை பதில் அளித்தாரோ, அதற்க்கு மேல் பொறுமையுடம் அவர்களின் நிகழ் காலத்திலும், ஒரு சிறு தலை வலிக்கு துடித்த தாயின் நிகழ் காலத்தில் அவருடைய உடல் நலத்தையும் பேணுவது மிக மிக்கியமான ஒன்றாகும்.

நமக்கு எது நடந்தாலும் பாசம் காட்ட நமது பெற்றோர் இருக்கிறார், ஆனால் நம் பெற்றோருக்கு எந்தக்கவலையானாலும் அதை பகிர்ந்துக்கொள்ள அவர்களுடைய பெற்றோர் இல்லை, நாம் தான் அந்த இடத்தில் இருக்கிறோம். இந்த சிறு விஷயம் நம்மில் பலர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு தாய், தந்தை எதிர்பார்ப்பு இதுதான்.

சிறிது நேரம் தொலைக்காட்சி, கைபேசி/தொலைபேசி அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலோடு மனம் விட்டு பேசினால், அதனால் அவர்களடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் சில நாட்கள், நண்பர்களோடும், பொழுதுபோக்கிலுமே கழிந்து பின் வீட்டாருடன் பேச நேரமில்லாமல் திரும்பக் கிளம்ப வேண்டிய சூழல் எப்பொழுதும் நடக்கிற ஒன்றாகிவிட்டது!

ஒவ்வொரு நாளும் நம்மை தவமாய் தாமிருந்து' பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமைகளுள் இதுவும் ஒன்றாகும் என்பதை மறந்துவிடக் கூடாது!
Blogger Widget

வெள்ளி, 18 நவம்பர், 2011

'அவசரக்கரண'மாக மாறிய தோப்புக்கரணம்!

நன்றி: தினமணி
தேதி:18.11.2011

Blogger Widget

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...

சில மாதங்களுக்கு முன் வரை எந்த ஊடகத்தினை பார்த்தாலும் ஒரு வாக்கியம் 'இது இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டம்' என்று! 


74 வயதான அன்னா ஹசாரே, தனது கிராமத்தின் வளர்ச்சியை முன் மாதிரியாக கொண்டுவந்தமைக்காக பத்ம ஸ்ரீ(1990), பத்ம பூஷன் (1992) போன்ற உயரிய விருதுகளைப்பெற்றவர். மேலும் மாநில, மதிய அரசுகளால் பல விருதினை பெற்றுள்ளார் (விருதுகளை வாங்கவில்லை, பெற்றுள்ளார்!)

இந்திய ராணுவத்திலிருந்து வரும் ஓய்வூதியத்தை மட்டுமே தனது வருமானமாகக் கொண்டுள்ள ஹசாரே, ஏப்ரல் 16  ஆம் தேதி தனது சொத்து விபரத்தை தாக்கல் செய்தார், அதில் அவருக்கு வங்கியில் 
INR 67,183 மற்றும் கையிருப்பாக INR 1,500 உள்ளதாக தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அவரின் முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். 

திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஊழல் எதிர்ப்பு காட்சியினை அன்று முதல் 
அனைத்து ஊடகங்களும் புத்துணர்ச்சி பெற்று ஒளிபரப்பத் தொடங்கின...

இதில் இவருடன் முன்னாள்/இந்நாள் நேர்மையாளர்கள் சிலர் 
சேர்ந்துக்கொண்டு 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' என்று ஒரு அமைப்பை 
தொடங்கி அதற்கு புத்துனர்வ்வு கொடுத்தனர்.
ஹராரே 'நினைப்பதை' மக்களிடத்திலும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள்
இவர்கள் தாம். இப்படியாக சில பல வாரங்கள் ஊடகங்களில் 
இவர்கள் 'காட்சியளிக்க' இவர்களின் எண்ணங்களோ வேறு மாதிரியாக 
திரும்பத் தொடங்கிவிட்டது! 

இந்திய நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்ததாக கொண்டிருக்கும் வேலையில்,
அவர் குழுவில் 'இருந்த' கேஜ்ரிவால், ஹசாரே தான் நாடாளுமன்றத்தைவிட  

முக்கியமானவர் என்று ஒரு கருத்தினை தெரிவித்தார்.


மேலும், இது போன்ற பல வீண் வீர வசனங்கள் பத்திரிகைகளுக்கு அள்ளி வீசி அரசாங்கத்தை கோபப்படுத்தி வந்தனர்.


                  
பிரஷாந்த் புஷன் (அடிபட்டதற்கு முன்)
அவரே தான்! அடி வாங்கும்போது!


பார்த்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள்(?!), இப்படியாக விட்டால் நமது நிலை
'இன்னும்' மோசமாகி விடும் இந்த குழுவினை அடக்க வேண்டும் என்று 
நினைத்துக்கொண்டிருந்த வேலையில், குழுவில் இருந்த பிரஷாந்த் பூசன் 
காஷ்மீர் பற்றி கூறிய தவறான கருத்தால் அடி, உதய் வாங்கியது மட்டுமலாமல், 
அன்னா ஹசாரே குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். குழுவிலேயே இருந்தால் அவர்களுக்கும் அவப்பெயர் வந்துவிடுமோ என்று 
அவர்கள் நினைத்தார்களோ என்னவோ, நமக்கு தெரியாது!

ஒவ்வொரு பேட்டியிலும் தனது கருத்தினை மாற்றி, மாற்றி சொல்லும் 'திறமை'
வாய்ந்த ஹசாரே, இனி எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை என்று சில 
நாட்களுக்கு முன், தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் காரணமாக மௌனவிரதம்த்தைக் கடைபிடிக்கப்போவதாக அண்ணா ஹசாரே முடிவெடுத்துள்ளார்.

இப்படியாக இருக்க ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசாங்கத்தை கொச்சை படுத்தியதாக குழுவில் உள்ள கிரண் பேடி மேல் சில புகார்களும் எழுந்துள்ளது... மேலும் இவர்களின் போராட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியின் 'நிலை' என்ன என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால்
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக இருக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் கேஜ்ரிவால் INR 9.15 லட்சம் வரி பாக்கி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியுள்ளது. மேலும் குழுவில் சேர்ந்த நிதியில் தனது அறக்கட்டளைக்கு சில ஒதுக்கிகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

லோக்பால் நிறைவேரவிடால் காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்வோம், நிறைவேற்றினால் காங்கிரஸ் க்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று (ஏதோ லோக்பால் நிறைவேற்றினாலே ஊழல் ஒழிந்துவிடுவது போலவும், நிறைவேற்றினால் இதுவரை நடந்த ஊழளெல்லாம் சரியான முடிவிற்கு வந்துவிடுவது போலவும்!) ஏக வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழு, ஆரம்பமாவதற்கு முன்பே ஆட்டம் கண்டு வருகிறது என்பது தான் உண்மை!!!


Blogger Widget