முதல் பாகத்தின் இறுதியில்...
--> Swachh Barathதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு "ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்!
--> Swachh Barathதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு "ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்!
இரண்டாம் அத்தியாயம்:
ஒரு பொருள் வாங்கினால் அந்த ரசீதில், வாங்கிய பொருளை விட Swachh Barat வரி, க்ரிஷி கல்யாண் வரி என்று கண்டகண்ட ஹிந்தி பெயரில் வரியின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். நாட்டை தூய்மையாய் வைத்துக்கொள்வது என்பது ஒருசாதாரண ஆரம்ப கட்ட கடமை. இது காலம் காலமாய் இருந்து வரவேண்டியது, அதற்குத்தான் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களை பணியமர்த்துகிறது. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டை கடந்து சென்று கொண்டிருக்கும்போது இது ஏதோ ஒரு சாதனை என்பதுபோல ஒரு அரசாங்கம் பலகோடி செலவழித்து விளம்பரம் செய்வது, கல்லூரி படிக்கும் ஒருவன் அ, ஆ, இ, ஈ படிக்க ஆரமித்துவிட்டதாக தம்பட்டம் அடிப்பதுபோல உள்ளது.
இந்நாட்டில் வெளியே சென்றால், இலையுதிர் காலத்தில் இலைகள் தவிர்த்து வேறு குப்பைகள் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன், தெருவில் குப்பை தொட்டிகள் கிடையாது. கடைகளுக்கு செல்கிறோம் என்றால் ஒவ்வொரு கடை வாசலிலும் குப்பை தொட்டி இருக்கும், குப்பைத்தொட்டியில் நேரடியாக குப்பை கொட்டாமல், பெரிய கருப்பு நிறத்தில் Plastic Coverரில் குப்பையை போடுவதுபோல இருக்கும், அது நிறையும் தருவாயில் அந்தந்தக் கடைக்காரர்கள் அதை சுருக்கி முடிந்து கடை பின்புறம் இருக்கும் பெரிய குப்பை தொட்டியில் போட்டுவைப்பார். இதே போல தான் வீடுகளிலும். தனி வீடு என்றால் குப்பையை மறுசுழற்சிக்கு (recycle) ஏற்ற குப்பையை தனியாகவும், மக்கும் குப்பையை தனியாக பிரித்து பெரிய plastic பையில் சுருக்கி முடிந்து வாசலில் வைப்பார், apartment வீடுகளென்றால் பத்து/இருபது வீடுகளுக்கு என்று பொதுவாக பெரிய குப்பை தொட்டி இருக்கும், அதில் பிரித்து குப்பையை போடவேண்டும். வீட்டு பால்கனியிலிருந்து குப்பையை விட்டெறிவது, தெருவில் காலியாக இருக்கும் நிலத்தில் வேலியை தாண்டி வீசுவதெல்லாம் இங்கு கிடையாது.
நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் இருக்கும் சில வீடுகளுக்கான பொதுவான குப்பைத்தொட்டி. |
இப்படி கடைகளிலும், தனி வீடுகளிலும், apartment வீடுகளிலும் வைக்கும் குப்பைகளை, குப்பை தொட்டியிலிருந்து நாள் தவறாமல் தினமும் குப்பை லாரி வந்து அள்ளிக்கொண்டு போகும். தெருக்களிலும், குப்பை தொட்டியருகில் இருக்கும் வண்டிகளிலும் குப்பைக்கே உரிய துர்நாற்றம் அடித்து நான் கண்டதில்லை.
ஹக்கம்... குப்பைனா குப்பைதானே... அதென்ன அமெரிக்கா குப்பைனா மட்டும் நாத்தம் அடிக்காதா என்ன? என்று தானே நினைக்கிறீர்கள்?
அப்படியெல்லாம் இல்லை, இங்கு என்ன வித்தியாசம் என்றால் வீட்டிலும், ரோட்டிலும், கடைகளிலும் எங்குமே குப்பை வெளிப்படையாக கொட்டப்படுவது இல்லை. முன்பே சொன்னது போல பெரிய plastic பையில் நன்றாக சுருக்கி தான் கொட்டப்படுகிறது. மேலும், குப்பை லாரி மூடிய நிலையில் தான் இருக்கும். லாரியில் பின்புறத்தில் துப்புரவு பணியாளர் பெரிய குப்பை தொட்டியில் கொக்கியை மாறிவிடுவர், சின்ன குப்பை தொட்டி என்றால் பணியாளர் எடுத்துவைக்க தானியங்கி இயந்திரம் தானாகவே கொட்டிக்கொள்ளும். அதனால் வெளியில் குப்பை சிதறுவது, கொட்டுவது என்ற நிலைமை நான் கண்டவரை நூறு சதவீதம் கிடையாது.
கிட்டத்தட்ட சென்னையில் மற்றும் சில பெருநகரங்களில் இருக்கும் குப்பை லாரிபோல தான் இருக்கும், ஆனால் என்ன வித்தியாசம் என்றால் நம்மூரில் இருப்பது போல வெளியே குப்பை வழியாது, வண்டி அவ்வளவு சுத்தமாக பளிச்சென்று இருக்கும். துப்புரவு பணியாளர் தரமான gloves, shoes, helmet, முகக்கவசம் என்று பாதுகாப்பாக இருப்பார்.
நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு லட்சங்களில், கோடிகளில் commission கொடுத்து குப்பை அள்ளும் company அந்த தொழிலாளர்களுக்கு தரமான கவசங்களை கொடுப்பாரா என்ன நம் நாட்டில்? போட்ட பணத்தை எப்படி அள்ளலாம் என்று நினைப்பானே ஒழிய குப்பையை எப்படி தரமாக அள்ளலாம் என்று நிச்சயம் நினைக்கமாட்டான்.
சில ஆண்டுகளாக இந்தியாவின் silicon valley என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம் குப்பை நாற்றத்தால் நாறியது. என்னடா பிரச்சனை என்று நான் விசாரித்தபோது பெங்களூரு நகராட்சிக்கு உட்பட்ட எல்லையை (பெரிய இந்திய பாகிஸ்தான் எல்லை போல தான் நினைப்பு!) தண்டி குப்பையை கொட்ட முடியாது என்று contract எடுத்தவனுக்கும் அரசாங்கத்திற்கும் சண்டை. 70கி.மீ வரை தான் குப்பை வண்டி சென்று குப்பை கிடங்கில் கொட்டும், புதிதாக திறந்த குப்பை கிடங்கிற்கு 100 கி.மீ ஆகிறது இதற்கு புதிய contract போட வேண்டும் என்று contract காரனும், முடியாது என்று அரசாங்கமும் போட்ட சண்டையில் மொத்த நகரமே அப்படி நாறியது. இந்த துர்நாற்றத்தை தாண்டி தான் நான் தினமும் அலுவலகம் சென்றேன் இரண்டாண்டிற்கு மேல்.
இப்படி ஒரு குப்பை அள்ளுவதிலேயே contract, commission, லஞ்சம் என்று அடித்துக் கொள்வதால் தான் நம் நாட்டில் தெருவை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளமுடியவில்லை. இங்கு அப்படியெல்லாம் உள்ளுக்குள் ஏதாவது நடக்கிறதா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அபார்ட்மென்ட்டை, தெருவை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள நம்மைவிட முனைவுடன் செயல்படுகின்றனர். நியூயார்க் நகரில் பேருந்து, ரயில் நிலையத்திலிருந்து வெளிவரும் மக்கள் நிமிடத்திற்கு குறைந்தது ஐநூறிலிருந்து, ஆயிரம் பேர். ஒரே ஒரு நிமிடத்திற்கு சொல்கிறேன்!அவ்வளவு மக்கள் புழங்கும் தெருக்களில் சில இடங்களில் குப்பை இருக்கும் அதையும் சுத்தம் செய்துக்க கொண்டுதான் இருப்பர்.
இப்படியாக வெளியில் மட்டும் அல்ல, வீட்டினுள்ளும் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்று பார்க்க apartment வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை state inspection வருவார்கள். முழு வீடும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். inspection வருவதற்கு ஒருவாரம் முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவிப்பு வரும். வீட்டில் நாம் இல்லை என்றாலும் அவர்களிடத்தில் இருக்கும் சாவியை வைத்துக்கொண்டு inspection அன்று வருவார்கள், அரசாங்க அலுவலருடன் நாம் தங்கியிருக்கும் apartment மேற்பார்வையாளர் உடனிருப்பார், ஏதேனும் சுத்தம் இல்லை என்றால் $450 டாலர் வரை அபராதம் இருக்கும், அவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நாம் கூறினால் அவர்களே மாற்றிக் கொடுப்பார். சில இடங்களில் இது மாறுபடும்.
சிறுவயதில் நமக்கும் தான் சொல்லிக்கொடுத்தனர் சுத்தம் சோறு போடும் என்று நாம் அதை வீட்டுக்குள் மட்டுமே என்று எடுத்துக்கொண்டுவிட்டோம். இவர்களுக்கு இன்னும்
நன்றாகவே சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது வீட்டை மட்டும் அல்ல, ரோட்டையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் சுத்தம் Burger போடும் என்று.
மூன்றாம் அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை தொடரும்...
சிறப்பான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குதங்கள் ஊக்கமான கருத்துக்கு நன்றிகள் ஐயா.
பதிலளிநீக்கு