-->

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒரு பிடி அரிசி!

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இப்படி மனித வாழ்விற்கு இன்றியமயாதவைகளுள் உணவும் ஒன்று.

எக்காலமாயினும் விவசாயம், உணவு பற்றி பேசாமல் இருக்க முடியாது. இப்பொழுதும் இரு வேறு மாநிலத்தவர் சந்தித்துக்கொண்டால், முதல் ஐந்து நிமிடங்களுள் வருவது உணவைப்பற்றிய பேச்சு.

இப்படியாக உணவு வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட உணவை எம்மதமாயினும் உண்பதற்கு முன் தங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு தான் உண்ண தொடுங்குகின்றனர்.

கிறிஸ்துவம்
Bless O Lord, this food to our use,
And us to thy loving service;
And make us ever mindful of the needs of others,
For Jesus' sake. Amen.

இஸ்லாம்
Bismillahi wa 'ala baraka-tillah.

ஹிந்து
Brahmarpanam Brahma Havir 
Brahmagnau Brahmana Hutam
Brahmaiva Tena Ghantavyam
Brahmakarma Samadhinaha

உணவை மிச்சம் வைக்காமல் உண்ண வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும், சிறு வயது முதலே இதுதான் பெற்றோரால் புகட்டப்படுகிறது.

சமிபத்தில் கேள்விப்பட்ட ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது...

ஒருவரின் நண்பர் மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்றிருந்தார்.
சென்ற புதிதில் பிற நண்பர்களுடன் ஊர் சுற்றிப்பார்க்க சென்றபோது ஒரு உணவகத்தில் வேண்டிய உணவுக்கான பணம் செலுத்தி அதற்காக  காத்துகொண்டிருந்தார், அதே சமயம் அங்கு உணவருந்திக்கொண்டிருந்த பெரியவர்கள், தங்கள் வயதொத்தவர் அனைவரும் சிறு பருக்கையும் மிச்சம் வைக்காமல் உண்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்த நபர், தன் உணவு வந்ததும் அதை அரைகுறையாக உண்டு மற்ற நண்பரை  சந்திக்க நேரம் ஆகிவிட்டது என்று வெளியே செல்ல முற்பட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி சட்டென்று ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு  ஏதோ  தெரிவிக்க, சிறிது  நேரத்தில்  அங்கு உணவு பாதுகாப்பு காவலர்  ஆஜர். உணவை தட்டில் மிச்சப்படுத்திய இந்த நபருக்கு தண்டனை தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்க, இவர் வாக்குவாதம் செய்திருக்கிறார், என்  பணம் நான் மிச்சம் வைக்கிறேன் என்று.


அதற்கு அந்த காவலர், பணம் உங்களுடையதாக இருக்கலாம் , ஆனால்  விளைவிப்பது  எங்கள்  விவசாயிகள்  (Money might be yours, Resource is Ours!). நீங்கள் மிச்சம் செய்யும் இந்த உணவை நீங்கள் வாங்காமல் இருந்திருந்தால் வேறொருவருக்கு இது போய் சேர்ந்திருக்கும். அதனால் தான் இந்த தண்டனை தொகை என்று அந்த காவலர் விளக்கியவுடன் தெளிவு பிறந்தது நமது இந்திய நபருக்கு.

அது நமக்கும் பொருந்தும், வேண்டிய அளவு மட்டும் உணவை பெற்றுக்கொண்டால், வீணாக்காமல் வேறொருவருக்கு அதனை உணவாக்கலாம்.


இதனை நமது மத்திய அரசு உணர்ந்தால், பல லட்சம் டன் எடை கொண்ட அரிசி, கோதுமை மூட்டைகள் வெயிலிலும் , மழையிலும் கடந்து வீணாகாமல்   உணவுக்காக  ஏங்கியிருக்கும்  பல  கோடி  மக்களுக்கு  உதவும்.


சில தனியார்களுக்கு உதவ சொற்ப அளவில் செலவு செய்ய வேண்டிய குடான் (Godown)  அமைக்காமல் விலை மதிப்பில்லா உணவு வகைகளை பாழ் செய்கிறது.


"உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே  
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்..." என்ற வரிகளை நினைவுகூர்ந்து...
எது எப்படியோ போகட்டும் என்றில்லாமல், நம்மால் முடிந்ததை நாம் கடைபிடித்து உணவை வீணடிக்காமல் மற்றவரில் ஒருவேளை உணவான ஒரு பிடிஅரிசியைக் காப்போம்.
Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக