-->

புதன், 8 ஆகஸ்ட், 2018

எனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ!


எவ்வளவு வருத்தமாக இருக்கு உன்னை இப்படிப் பார்க்க!

பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்னபோதெல்லாம் நான் மட்டும் டேய் என் தலைவர் விஜயகாந்த் டா என்று சொல்லும்போது அவ்வளவு கெத்தாக இருக்கும்!

சில நடிகர்கள் "பேசக்கூட தெரியாத, துப்பில்லாத" வெறும் காசுக்காகவும், அரசியல் பேராசைக்காகவும் மட்டுமே ரசிகர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றைய நிலையை பார்த்தால், இப்படியொரு ரசிகர் கூட்டம் உனக்கு சேர்வதற்கு முன்னாலேயே எந்த அரசியல் பேராசையும் இல்லாத காலத்தில் உன் சொந்த செலவில் மக்களுக்கு நீ செய்த உதவிகள் பற்றிய நினைவுகள் தான் வந்துபோகிறது.

இன்று சமூக வலைதளத்தில் பிற கட்சிகளால் நடத்தப்பட்டும், ஒரு கேலிக்கு (மீம்) இவ்வளவு ரூபாய் என்று பணம் வாங்கிக்கொண்டு கிண்டல் செய்பவர்களுக்கு மக்களுக்கு நீ வாரி கொடுத்த நன்கொடைகளும், உதவிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! பாய்ஸ் படத்தில் சுஜாதா வரிகளில் உன் அன்னதானத்தை பற்றி சொல்லும்போது ஒரு புன்னகை வந்ததே, அதுதான் என் தலைவன்!

எத்தனையோ நடிகர்கள் அரசியல் ஆசையோடு தனிக் கட்சி தொடங்கி, சிலர் பிற கட்சிகளில் சேர்ந்தும், இன்னும் சிலர் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று இருபது வருடங்களுக்கு மேல் பூப்போட்டு பார்த்துக்கொண்டும், கேவலமான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு தானும் ஒரு கட்சித் தலைவர் என்று சொல்லிக்கொண்டும், இன்னும் சிலர் சின்னப்பிள்ளைகளை கூட்டி வைத்துக்கொண்டு முதல்வர் கனவில் சுற்றித்திரியும் நேரத்தில், எந்த ஒரு பயமுமில்லாமல் தனியாக, தைரியமாக, துணிவாக அரசியல்களம் கண்ட நீ தான் உண்மையில் ஆளப்பிறந்தவன்!
உனது திருமணத்தை தலைமை தாங்கி நடத்திவைத்த உன் தலைவன் கருணாநிதியே உனது திருமண மண்டபத்தை இடித்துத்தள்ளியும், உனது கட்சியை பிளவுபடுத்திய ஜெயலலிதாவும் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இருந்த காலத்திலேயே அவர்களை நேரடியாக எதிர்த்து துணிவுடன் அரசியல் செய்தாயே, அதுதான் என் தலைவன்!என்னைப்போன்ற உனது பல லட்ச ரசிகர்கள், நீ மரியாதை கொண்ட நபர் இன்று இறந்துவிட்டார் என்று நீ அழுத உன் அழுகையைக் கண்டு உனக்காக கண்ணீர் விட்டனரே, அந்த அன்பை வென்ற உண்மையான தலைவன் தான் நீ!

அந்த தெளிவான பேச்சு, புன்முறுவல் முன்போல இனி இல்லை எனும்போது மிகுந்த வருத்தம் தான் மிஞ்சிகிறது! மயிலை மாங்கொல்லையில் தூரத்திலிருந்து உன்னைக் கண்டிருந்தாலும், ஒருமுறை உன்னை நேரில் பார்த்துப் பேச ஆசையாக உள்ளது!

உன் உடல்நலக்குறைவு எதுவாகினும் அதை தாங்கும் தைரியம் கடவுள் உனக்கு கொடுக்க வேண்டுகிறேன்!

என்றும் எனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ  
Blogger Widget

2 கருத்துகள்:

 1. ***பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்னபோதெல்லாம் நான் மட்டும் டேய் என் தலைவர் விஜயகாந்த் டா என்று சொல்லும்போது அவ்வளவு கெத்தாக இருக்கும்!***

  What difference it makes, whether one is a Vijay fan or Vijaykanth fan? You are just like the other fans. எதுக்கு தேவையில்லாத "கெத்து"?

  ***சில நடிகர்கள் "பேசக்கூட தெரியாத, துப்பில்லாத" வெறும் காசுக்காகவும், அரசியல் பேராசைக்காகவும் மட்டுமே ரசிகர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றைய நிலையை பார்த்தால், இப்படியொரு ரசிகர் கூட்டம் உனக்கு சேர்வதற்கு முன்னாலேயே எந்த அரசியல் பேராசையும் இல்லாத காலத்தில் உன் சொந்த செலவில் மக்களுக்கு நீ செய்த உதவிகள் பற்றிய நினைவுகள் தான் வந்துபோகிறது.***

  எந்த அரசியல் பேராசையும் இல்லனா புத்தனைப்போல் போதி மரத்தடிக்குப் போயிருக்கணும். என்னத்துக்கு கட்சி ஆரம்பிக்கிறார் உங்க தலைவர்? உதவி செய்ய பதவி வேணும் என்கிற ஆசைதானே?!

  ***என்னைப்போன்ற உனது பல லட்ச ரசிகர்கள், நீ மரியாதை கொண்ட நபர் இன்று இறந்துவிட்டார் என்று நீ அழுத உன் அழுகையைக் கண்டு***

  நான் ஒரு வீடியோ பார்த்தேன். அந்தம்மாதான் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தது. இவர் அப்படியே உக்காந்து இருந்தாரு. அழுதாலும், அவர் இப்போ இருக்க மனநிலையில் எதுக்கு அழுதாரோ? ஏன் சும்மா தலைவா தலைவானு உருகிக்கிட்டு?

  யு எஸ் வந்டபோது உங்க தலைவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துப் போயி இருக்கலாம். இதுபோல் ஒரு பதிவை எழுதி, தலைவா! தலைவானு ஒப்பாரி வைப்பதற்கு

  பதிலளிநீக்கு
 2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, வருண்.

  பதிலளிநீக்கு