-->

பக்கங்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஆயிரம் மரம் வைத்த அற்புத தம்பதி!


நன்றி: அவள் விகடன்.

'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!


எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 81!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''


- இதைச் சொல்லும்போது, இந்த 81 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.

''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.
இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''
- நாமும் கலங்கித்தான் போனோம்.

''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''
- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!

''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’

புதன், 18 ஜனவரி, 2012

ஒரு ஓட்டுனரின் கதை!

'என்ன அண்ணா, இன்னிக்கு தாமதமா வந்துருக்கீங்க' என்று ஒரு புன்னகையுடன் கேட்டு, முன் இருக்கையில் உட்கார்ந்தேன்.

அன்றைய தினம் (17/01/2012) பெங்களுருவில் காவலர்களுக்கும், வக்கீல்களுக்கும் அடிதடி நடந்து ஏழு மணி நேரம் பெங்களுருவை ஸ்தம்பிக்க வைத்திருந்தனர். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இவர்களே அடிதடியில் இறங்கும்போது, இவர்கள் எங்கிருந்து சட்டத்தை காக்கப் போகிறார்கள் என்று இரு துறையினரையும் சற்று நேரம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும்போதே Horn அடித்தும் வழிவிடாமல் சென்ற பெண்மணியை 'ஜன்னல் வழியே' ஒரு அதட்டல் போட்டு Signalலில் காத்திருந்தோம்.

பணியிடம் சென்றடைய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும், எவ்வளவு நேரம் தான் பாதி திறந்த ஜன்னல் வழியே அரைகுறையாக (வண்டியை!) ஓட்டும் பெண்களையும், Cycle Gap இல் சர்ரென்று ஓட்டும் இளைஞர்களையுமே வேடிக்கை பார்ப்பது., பொங்கல் எப்படி போச்சு அண்ணா என்று கேட்டு முடிக்கும் முன்.., ரொம்ப ஸ்ரமப்படரிங்களே கன்னடத்தில் பேச, உங்க தாய் மொழி என்ன என்றார், தமிழ் என்றேன்.

முகத்தில் ஒரு புன்னகை, சார் நானும் ஒரு தமிழன் தான் என்றார் 'பெருமையாக'.

எந்த ஊரு சார் உங்களுக்கு? என்றார்

பிறந்தது தஞ்சை ஜில்லா மன்னார்குடி. படிச்சதெல்லாம் ஓசூர், சென்னையில் கல்லூரி முடித்துவிட்டு இங்கு வந்துவிட்டேன், நீங்க? என்றேன்.

நான் பொறந்து வளந்ததெல்லாம் பெங்களுருதான், அப்பா அம்மா ஆரணி பக்கம் என்றார்.

பொங்கல் பேச்சுக்கு மறுபடியும் வந்தோம், நல்லா போச்சு சார் என்றார்.
அதுதான முக்கியமான பண்டிகை!!!  அப்பா அம்மா படத்திற்கு படையல் வெச்சுட்டு பசங்களுக்கு புது துணி எடுத்துக்கொடுத்தேன் என்றார். நான் எட்டாவது படிக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க, அப்பா தான் பாத்துகிட்டாங்க...
(சொல்லிகொண்டிருக்கும்  போதே கை பேசி ஒலிக்க.., )

Okay madam, I'll come at 8'o clock sharp for your pickup என்றார் ஆங்கிலத்தில் சரளமாக.

ஆச்சர்யமாக பார்த்த என்னை, எனது ஆச்சர்யத்தை புரிந்துக் கொண்டு இப்படி தான் சார் நேத்திக்கு ஒரு பெண்ணை அழைத்துபோக call பண்ணேன், நான் டிரைவர் தான் பேசறேன்னு சொன்னத அவங்க நம்பவே இல்ல. அப்றோம் வண்டில இருந்த மற்றொரு employeeய விட்டு அவங்க கிட்ட பேச சொன்னேன், அப்றோம் தான் நான் டிரைவர் அப்டிங்கறத நம்பினாங்க.
இங்க பாருங்க அவங்க மனிப்பு கேட்டு அனுப்பின message என்று அந்த SMSஐ காட்டினார்.

Sorry, my colleagues use to tease me with such prank calls, so I thought they are calling me, sorry again என்று அந்த பென்ன்மணி SMS அனுபியிருந்தார்.

அருமையா பேசறீங்க, எப்படி அண்ணா ஆங்கிலம் கத்துண்டீங்க என்றேன்.

நான் படிச்சது ஆங்கில வழி கல்வி சார், Diploma in IT Management படிச்சுட்டு இருந்த நேரம், கடைசி ரெண்டு semester இருக்கும்போது அப்பா இறந்துட்டார். ஒரு semester முழுதும் இரவுல auto ஓட்டி படிச்சேன், ஆனா மூணு அக்கா இருந்ததால நான் படிச்சு முடிச்சு அதுக்கு ஏத்த வேலை தேடி நான் சம்பாதிக்க காலம் இடம் கொடுக்கல.


மும்பை போனேன், ஒரு நாள் எதயச்செயா மழைக்கு தாதர்ல ஒரு பூங்கா கிட்ட ஒதுங்கி நின்னுட்டு இருந்தேன், அங்க இருந்த ஒர்த்தர் 'க்யா கர்த்தா ஹய் பேட்டா' (இதற்க்கு மேல தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன்!!) என்று கேட்டார், பெங்களுருவிலிருந்து வேலை தேடி வந்துருக்கிறேன் என்றேன். என்னிடம் வேலைக்கு சேந்துக்கரியா என்றார், சரி என்றேன்.

அவர் travels வைத்து நடத்திக்கொண்டிருந்தார். ஒரு வண்டியில் cleaner ஆக பணிபுரிந்தேன், அப்படியே அந்த ஓட்டுனரிடம் வண்டி ஓட்ட கத்துக்கொண்டேன்,  ஒரு வாரம் அந்த driver பீகார் போக, அந்த வருடம் மகாராஷ்டிராவில் காங்கிரசார் கலவரம் செய்துகொண்டிருந்தனர் (அப்பாவும் இவங்களுக்கு இதுதான் வேலையா-என்று மனதில் நினைத்துக்கொண்டேன்!), வண்டி கனாடியை உடைதுட போகிறார்களே என்று வண்டியை ஒரு சந்தில் விட்டேன், அதை பார்த்த owner, என்ன தம்பி, வண்டி ஓட்ட தெரியுமா என்று கேட்க நானும் 'ஓ! ஒட்டுவேனே' என்றேன், மறுநாளே LLRக்கு apply செய்ய வைத்து , பின் Licenceசும் வாங்கிக்கொடுத்தார்.

அப்படியே சில வருடம் மும்பை-கோவா ரூட்டில் tourist driver ஆக இருந்தேன், ஆங்கிலர், japanese ஆட்கள் அதிகமாக வருவார் அவர்களுடன் நல்லா பழகுவேன், அப்படியே நல்லா பேச பழகிக்கிட்டேன் என்றார்.

இது மட்டும் இல்ல சார், வார இறுதியில் ராஜாஜி நகரில் NICTயில் ( National Institute of Computer Technology )  Oracle-DBMS faculty யாக இருக்கிறேன் என்றார்.

இது எப்படி என்றேன் வியப்பாக!

மும்பை, சென்னை, பெங்களுரு என்று L&T Infotech presidentக்கு personal டிரைவர் ஆக இருந்தேன், அவர் அடிக்கடி சும்மா இருக்க நேரத்துல ஏதாவது கத்துக்கோ என்பார், ஒரு நாள், நான் என்ன சார் கத்துக்கறது என்ற போது, தனது அலுவலகத்தில் Network Team இல் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், அங்கு சற்று Networking & Hardware  கற்றுக்கொண்டேன், மற்ற நேரத்துல என்னை அங்குள்ள ஊழியர்களுக்கு email அனுப்ப சொல்லிக்கொடுத்தார் என்றார்.

அவரே என்னை PGDCA 12,000 ரூபாய் கொடுத்து படிக்க வைத்தார்,
பின் அவர் வெளிநாடு போனபோது எனக்கு ஒரு கம்ப்யூட்டர் அன்பளிப்பாக கொடுத்தார் என்றார். அப்படியே எனது ஆர்வம் காரணமாக Oracle படித்தேன். இன்று எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் அந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறான் என்றார்.

நீங்க ஏன் cab ஓட்டனும், பேசாம வேலைக்கு சேர்ந்துட வேண்டியதுதான என்றேன்!

இல்ல சார், அதெல்லாம் set ஆகாது, இருபத்திரண்டு வருஷமா car ஓட்டறேன் அப்படிலாம் வந்துட முடியாது என்றார்!

தான் வாங்கிய Appreciation mailகளையும் (Printout) பெருமையுடன் காண்பித்தார்!

பணியிடம் வந்துசேர்வதற்கு சரியாக இருந்தது!

அண்ணா, உங்க பேர் என்றேன், பிரகாஷ் என்றார்!

வெள்ளி, 13 ஜனவரி, 2012

தமிழனின் பிறப்பிடம், குமரிக்கண்டம்.

நன்றி: இச்செய்தியை குறும்படமாக வெளியிட்ட History Channel மற்றும் முகநூலில் பெருமைக்குரிய இதனை பகிர்ந்துகொண்ட World record of Tamil people பக்கத்திற்கும்.


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்



இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.


தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழின் பெருமை சிறக்க வாழ்வோம்.


வாழ்க தமிழ். வெல்க தமிழ்.

திங்கள், 9 ஜனவரி, 2012

அழிய விடமாட்டோம் - தமிழை!


மின் அஞ்சலில் வந்த வண்ணம்... இங்கு...
தேவையின் காரணமாக சில இடங்களில் ஆங்கிலம் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது...
படித்து மறந்துவிடக்கூடிய பதிவு அல்ல இது, தமிழருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தொகுப்பு!
நன்றி!
___________________________________________


இதில் சில கருத்துக்கள் முற்றிலும் வருத்ததிற்குரிய உண்மை.
என்று மாறும் இந்த நிலை?!

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!
இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.


கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.
தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?


*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல.
இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

* மிருகங்களில் நாய்பாலில் பெண்பால்இனத்தில் தமிழன்இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.
ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.
இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

*பெண்ணாசை
பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள்பின்னால் வந்த குறு நில மன்னர்கள், என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரிஅரிவராசனம் பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.


இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனைமட்டக்களப்பான் மடையன் என்று சொல்லி& தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களை, சிங்கள அரசு ஒடுக்கியபோது, ஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.

தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற  மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!

* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு..,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம் காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், "பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம் எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி;எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்என்று சொன்னார்.
ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இலை போட்டு, உணவு ஊட்டி, வெற்றிலை மடித்துக்கொடுக்கும் தமிழக காவல்துறை  தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும் அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்.
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்.
பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

“Even a correct decision is wrong….,When it was taken too late..."

தமிழர் என்பதில் பெருமைகொள்வோம், நமது கடமை அறிந்து, பெருமை உணர்ந்து தமிழராக வாழ்வோம், தமிழை வீழாமல் காப்போம்.


வாழ்க தமிழ், வெல்க தமிழ்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

பெண்ணின் 'நியாயமான' ஏக்கம்!

நன்றி: மின் அஞ்சலில் இந்த தொகுப்பை பகிர்ந்துகொண்ட நண்பர் பா.விஜய்


வயதானால் கருப்பை பிரச்சனை வராது...

நகரப் பேருந்துகளில் ஈனப்பிறவிகளிடம் இடிபட வேண்டியது இருக்காது...

மாதமொரு முறை அடிவயிற்று வலி தாங்க வேண்டியதில்லை...

சட்டங்கள் இருந்தும் குற்றங்களுக்கு ஆளாகமலிருக்கலாம்...

முக்கியத்துவ பட்டியலில் குடும்பத்தை பின் தள்ளி எப்பொழுதும் நம் தோழர்கள் முதலிடம் வகிப்பார்கள்...

சடங்கானால் ,சத்தமில்லாமல் இருப்பதை விட்டு,அலங்கார பொருளாக ஊர் முன் நிற்காமல் இருக்கலாம்...

காதலை ஏற்காவிட்டால் ஆசிட் வீச்சு வாங்காமல் இருக்கலாம்...

கல்யாணம், நகை, பட்டுப்புடவை, வளைகாப்பு ஆகியவற்றை நினைத்து கருக்கலைப்பு செய்யாமல் இருப்பார்கள்...

‘கணவனுக்கு கட்டுப்பட்டு போ’ என்ற அம்மாவின் அறிவுரை கேட்காமல் இருந்திருக்கலாம்...

அன்புக்கணவன் மூணாருக்கு அழைத்து போய், கொலை செய்ய மாட்டான்...

அந்தரங்காமாக எடுத்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் போட்டதற்கு தற்கொலை செய்யாமல் இருக்கலாம்...

மூன்றாவது மனைவியாய் வாக்கப்பட்டு, பதின்நாங்காவது பிள்ளை பெறும் போது இறந்து, தாஜ்மஹால் பெற தேவை இல்லை...

மனைவியையும் எதிரியிடம் பந்தயப் பொருளாக வைக்கலாம்...

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, ஆசிரியரின் இச்சை பார்வைக்கு ஆளாக வேண்டாம்...

கணவனை இழந்தால் மதுரையை எரிக்க வேண்டி இருக்கும்...

ஆண்டவனே ஆனாலும் பதி சந்தேகப்படுவான்...

நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்...

குட்டைப் பாவாடைக்காக இல்லாமல் திறமைக்காக விளையாட்டில் புகழ் பெறலாம்...

பத்திரிகைகளிடமிருந்து தப்பிக்க உயிரை விலைக் கொடுக்க வேண்டாம்...

வலைப்பூவில்கூட தேனைத் தேடி, வண்டுகள் திரியாமல் இருக்கும்...

திடீரென்று நாம் துணிக்கடையில் உடை மாற்றியதை இணையதளத்தில் பார்க்க வேண்டாம்...

யார் ஆண்டாலும் 33%-காக போராட வேண்டாம்...

பேசாமல் நாமும் ஆணாகவே பிறந்திருக்கலாம் இல்லையா!!!