-->

பக்கங்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பழகலாம் வாங்க!!!

'எப்போ பாத்தாலும் அப்படி அந்த கைபேசியில என்னதான் பண்ணற' என்று கேட்கும் பெற்றோரிடமும் சொல்லப்படும் பதில் பெரும்பாலும், நண்பரோடு குறுஞ்செய்தி பகிர்ந்துக்கொண்டிருக்கிறேன் எனபது தான்... பெரும்பாலும், காலை முதல் மாலை வரை, பள்ளியிலோ,கல்லூரி, பணியிடத்தில் இருப்பவரிடமோ தான் குறுஞ்செய்தி பரிமாரிக்கொள்ளப்படுகிறது, அப்படி செய்வதில் தவறொன்றும் இல்லைத்தான், ஆனால்... பெற்றோர், உடன் பிறந்தவர், சுருக்கமாக சொல்லப்போனால், நம் வீட்டில் இருப்பவரை தவிர, மற்ற அனைவரிடமும் நாம் அரட்டயடிதுக்கொண்டிருப்போம்!

வெளியில் சென்றவர்காக வீட்டில் காத்துகொண்டிருப்பவரை ஒரு நாளில், எத்துனை முறை பலர் நினைதுப்பார்கின்றோம்? வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த 'புரட்சி' முகப்புத்தகம்! அதன் முன் உட்கார்ந்தவுடன் நேரம் போவது தெரியாமல், இரவு உணவு உண்பதற்கு பல முறை 'அழைப்பு'விடுத்தவுடன் அவசரமாக உண்டு, மீண்டும் 'புரட்சி'யில் ஈடுபடுவது தான் இன்று பலரது வாடிக்கையான செயலாக உள்ளது!

'சுவற்றிடமாவது சொல்லி அழு' எனபது பழமொழி!'

அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு அரை மணி நேரம் பேசினாலே பாதி பாரம் குறையும்! கேட்பவர், பேசுபவர் இருவருக்கும் தான்!

'முகப்புத்தகத்தில் நிலையை மேம்படுத்தி' நிழல் நண்பர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுவதில் ஆறுதல் கிடைக்காது... அதனால் சில, பல ஏமாற்றங்கள் தான் நேரும், அவ்வபோது நிகழும் தற்கொலைகளே இதற்க்கு சாட்சி பெங்களூர் ஐ.ஐ.எம் மாணவி தற்கொலை
 
எங்கேயோ இருக்கும் ஒரு நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால், தேங்காய் உடைப்பதும், பால் குடம் தூக்குவது, அலகு குத்திக் கொள்வதுமாக பல விசித்திரங்கள் நடைபெறுவது நமது நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் தான்! பெற்றோருக்காக, உடன் பிறந்தவருக்காக இது போல என்றாவது வேண்டிக்கொண்டதுண்டா? இவ்வளவு பெரிய சாகசங்களெல்லாம் செய்யத்தேவயில்லை, உடனிருந்து ஆறுதல் சொன்னாலே போதும்! அவர்களுக்கு குணமாகிவிடும்!


பகுத்தறிவாளர் M.R.ராதா 1954இல் ரத்தகண்ணீர் படத்தில் தான் நோய் வயப்பட்டிருக்கும் போது...


.....காந்தா, எண்ணப் பார்... என் முகத்தைப் பார்... எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டேன் பார்த்தாயா காந்தா...


காந்தா...இந்த மாதிரி நேரத்திலே என்னை வீட்டிலே தனியே போட்டுவிட்டு இரவெல்லாம் ஊர் சுத்தும் வேலையிலே இறங்கியிருக்காயாம்...

வேண்டாம் காந்தா...

அதை நான் கேட்கும்போது என் மனம் என்ன பாடு படும் தெரியுமா?
காந்தா... நீ வேறொன்றும் செய்யவேண்டாம்... என் பக்கத்திலே இரு.. அது
எனக்கு போதும்...

என் பக்கத்திலே இருந்துகொண்டு, மருந்து சாப்பிட்டீர்களா? என்று
கேட்டால் என் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்....
கஞ்சி சாப்பிடுங்கள் என்று சொனால்... மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்'


என்று கண்ணீர் விட்டுக் கதறும் ஒரு காட்சி...

இது அன்று திரையில் வந்தது... இது போன்று இன்று பலரிடத்தில் வெளியில் சொல்லமுடியாத ஆதங்கம் இருக்கிறது... அதற்க்கு சற்றும் இடம் கொடுக்காமல், அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு பேச வேண்டும்! அதனால் உண்டாகும் மகிழ்ச்சி விபரிக்கமுடியாதது!

பணியிடத்தில் இருக்கும் போது வீட்டில் தனிமையில் இருக்கும் மனைவி தொலை பேசி அழைப்பு விடுத்தவுடன், அருகில் இருப்பவரிடம் தாம் அதி பயங்கரமாக வேலை செய்வது போல, 'சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்' என்று கூறி இணைப்பை துண்டிப்பதை அவ்வபோது நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...

தேவையில்லாமல் முகத்தை இருக்கிக்கொள்வதை விடுத்து சிறு புன்னகையுடன் மலரச்செய்து நம் இருப்பினை விரும்புபவரிடம் பழகலாம் வாங்க...

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உயிர் மதிப்பு பெறுவோம்...

செய்தித்தாள் கையில் எடுத்தவுடனே கண்ணில் தென்படுவது, 'குண்டு வெடிப்பில் 100 பேர் உயிர் இழப்பு', 'தீவிரவாதிகளால் பலர் சுட்டுக்கொலை', 'இரயில் விபத்து, பேருந்து விபத்து - பலர் சாவு' போன்றன. செய்தி என்று  படித்தாலும் இவை வேறு வகையில் வந்தவண்ணம் தான் உள்ளன.
இங்கு கேள்வி என்னவெனில், அந்த செய்தியை படிக்கும்போது நம் மனதில் தோணுவது என்ன?

'அடடா பாவம்', 'இவனுங்களுக்கு வேல இல்ல, எவனாவது யாரயாவது சுட்டுண்டே இருப்பானுங்க', 'இப்படி துப்பாக்கி சூடு நடதரவனலாம் `தூக்குல` போடணும்' போன்றன.

இவ்வாறு 'முதல் பக்கத்திலிருந்து, அடுத்த பக்கம் திருப்பும் வரை' நாம் வருந்துவோம்... அவர்களின் குடும்பத்தினரை பற்றி ஒரு கணமும் நாம் வருந்துவதில்லை. அவர்கள் மனநிலை என்ன பாடு படும் என்பதை நாம் சிந்திப்பதில்லை.


நமக்கு பிடித்த ஒருவர், நம்மீது பாசம் வைத்த ஒருவர், உடல் நலக்குறைவால் அவதிப்படும் போது நம் மனம் படும் பாடு, அவர் உயிருக்கு போராடும் வேலையில் அவரருகில் இருந்து ஒரு கணம் அவர் படும் வேதனயைக்கண்டு, அவர் அனுபவிக்கும் சித்திரவதையைக்கண்டு நம்மை அறியாமல் நம் கண்களிலிருந்து கொட்டும் கண்ணீர் அருவி, இவை தான் அந்த உயிரின் மதிப்பினை, அந்த பிரிவின் வருத்தத்தினை நமக்கு உணர வைக்கும் சமயங்களாக அமைகிறது.

பணமிருக்கும் மனிதனை எப்போதும் மனம் நாடுவதில்லை.... நல்ல குணம் இருக்கும் மனிதனைதான் மனம் நாடுகிறது. பாசத்திற்காக ஏங்குவதுதான் மனித மனம், அந்த ஏக்கத்தினை நாம், நமக்கு வேண்டியவருக்கு ஏற்படும்படி விடக்கூடாது. பாசத்தை மனதிலேயே பூட்டி வெய்பதால் ஒரு பயனும் இல்லை. பாசத்தை அள்ளிக்கொடுக்க வேண்டும். பணம் காசு கொடுப்பது மட்டுமே பாசம் அல்ல, அன்புடன் பேசுவது தான் என்பதை உடனடியாக உணர வேண்டும். அடுத்தவரிடம் மனம் விட்டு பேசுவது நம் மனதையும் அமைதி படுத்தும். காரணமில்லாமல் முகத்தை 'உம்' என்று காட்டுவதனால் நம் மனம் அழுத்தம் தான் அடையும், ஒரு சிறு புன்முறுவலினால் மனக்குழப்பம் சட்டென்று மறையும்.

நமக்கு தெரியாத உயிர் பிரிந்தால் நாம் அதை சட்டைசெய்வதுகூட இல்லை, அனால் நம்மை பிறர் எப்படி பார்க்க வேண்டும் என்பது நாம் பிறரிடம் நடந்து கொள்வதில் தான் உள்ளது.

பிற உயிரிடம் உண்மையான அன்பு செலுத்தி, நம் உயிர் மத்திப்பை பெறுவோம்.