-->

Thursday, March 24, 2011

எதற்கு சுதந்திரம்?
நம் நாடு சுதந்திரம் பெற்று அறுபத்து  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  உயிரையும், உடைமைகளையும், வீட்டினையும் துச்சமாக கருதி, அரும்பாடுபட்டு, சத்தியத்தின் விளிம்பில் நின்றும் சற்றும் தளராமல், உறுதியோடும், வலிமையான மனத்தோடும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து, மாண்டு, செக்கிழுத்து, சிறைபெற்று, குடும்பத்தை இழந்து, வாடி வதைபட்டு சுதந்திரம் அடைந்தோம்.

எதற்காக இவ்வளவு பாடுபட்டார்கள் நாம் சுதந்திரம் பெறுவதற்கு? வெள்ளைக்காரன் தன நலம் கருதி ஏற்படுத்திய சாலைகள் காரணமாகவா? புகைவண்டி, கப்பல், விமானப் போக்குவரத்து போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாகவா? அல்லது, சாலைகளில் உமிழ்நீர் உமிழாமலும், மற்ற பிற இடங்களில் மக்களை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த விதம் கருதி எதிர்த்தோமா?

இல்லை, மேற்குறிப்பிட்ட; மற்றும் இன்னப்பல மேம்பாடுகளை எதிர்த்து நாம் போராடவில்லை. நம்  நாட்டிலிருந்த விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட பொருட்களை, பொக்கிஷங்களை அபகரித்து சென்றனர் மேலைநாட்டவர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், முகலாயர்கள், முகமதியர்கள், அயரோப்பியர்கள் என, நம் நாட்டில் மற்றா வளங்களை இருநூறு ஆண்டுகளுக்கு மேலும் சுரண்டி எடுத்தனர். ஆயினும், 'மங்கா' வளமாக திகழ்ந்த நம் நாட்டில் மங்கா செல்வமாக இருந்தது நம் மக்களின் மன உணர்வுகளே.

இயற்கை வளம் கொழித்த நம் நாட்டில், காக்கையை விரட்ட தங்கட்டியை வீசி எறியும் மூதாட்டி, வீடுகளில் திண்ணைகள் அமைத்து வழிப்போக்கர்களுக்கு உணவு அளிக்கும் பண்பாடு, வேண்டியவர்களுக்கு இல்லை என்னாது வேண்டியனவற்றை அளிக்கும் கொடை குணம், பெரும் செல்வத்தை...இல்லாதவற்கு வாரிக்கொடுக்கும் தன்மை, இவற்றால் நிறம்பியிருந்தது நம் நாடு.

இப்படியிருக்க நாம் ஏன் வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றோம்?

இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
 
விடுனர்,

இந்தியக்குடிமக்கள்


பெறுனர்,
ஆட்சியாளர் துறை

                                  சுருக்கம்: சுதந்திரம் வேண்டி.

மதிபிற்குரிய ஐயா,

                        எங்கள் நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் சுரண்டி எடுத்து வருகிறீர்கள். எங்களது மங்காத செல்வ வளங்கள் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தொடரும், தாங்கள் அபகரித்தது போதும், மீதம் இருப்பதை நாங்கள் அனுபவிக்க ஆசைப்படுகிறோம், எங்களுக்கு சுதந்திரம் கொடுத்துச் செல்லவும். மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் மறைமுகமாக எங்களை ஆட்சி செய்யுங்கள். ஆனால், இப்பொழுது சுதந்திரம் கொடுத்து செல்லுங்கள்.


                                                              நன்றி!!
                                                                                                               இப்படிக்கு,
                                                                                                              குடிமக்கள்.

இவ்வாறு, இருப்பின், விதேசி துணிகளை எரித்தல், விதேசி பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல், விதேசி பொருட்களுக்கு வரி செலுத்தாமல் இருத்தல் போன்ற போராட்டங்கள் நடத்தி, சிறை சென்று, பல கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றோம்.

இத்தனை எதிர்ப்புகளை தெரிவித்த நாம், எப்படி இவ்வளவு தலைகீழாக மாறியுள்ளோம்? கேவலம் அறுபது ஆண்டுகளுக்குலேயே நம்மில் இவ்வளவு மாற்றம்?

நாம் உபயோகிப்பதில்... பத்தில் ஒன்பது, வெளிநாட்டு பொருட்கள். அனைத்திலும் அயல்நாட்டு ஆதிக்கம்.
' நீயா நானா'  புகழ் கோபிநாத் கல்லூரி விழா ஒன்றில் பேசும்பொழுது கூறியது போல, நாம் பேசும் 'மைக்' , வைத்திருக்கும் வாகனம், உடுத்தும் உடை' அனைத்திலும் வெளிநாட்டு ஆதிக்கம்.

என்னதான் நம்மை அடிமைபடுத்தி ஆண்டவர்கள் என்றாலும், அவர்களிடம் ஒரு கோட்பாடுகள் இருந்தன, ஏற்படுத்திய சட்டங்களை கடுமையாக அமலாக்கினர். அதனால் தான் அன்று அவர்கள் கட்டிய கட்டிடங்கள் இன்னும் பொலிவுடன், திடத்துடன், வலிமையுடன் இன்னும் பல இடங்களில் இருப்பதை நாம் காண்கிறோம்.


இங்கோ, நேற்று கட்டிய நடைமேடை இன்று இடிந்து விழுகிறது, இராணுவத்திற்காக வாங்கப்படும் ஆயுதங்களில் ஊழல், இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக கட்டிய குடியிருப்புகள் விதிமுறை மீறிக்கட்டப்படுகின்றன, அதுவும் ஆள்பவர்களின் சிபாரிசுகளுக்கு வழங்கப்படுகின்றன, மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படுகின்ற அலைக்கற்றயில் எண்ணிக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு ஊழல், பிரதமர் பதவிக்காக நடத்தப்படும் தேர்தலில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டிற்கு பணம், காமன்வெல்த் போட்டியில் ஊழல், இப்பொழுது தேர்தலில் ஒவ்வொரு வாக்கிற்கும் கூட பணம் கொடுத்து அனைத்துதரப்பு மக்களையும் ஊழல் வாதியாக மாற்ற பணம் வாய்ந்த தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டன.


இதனையெல்லாம் பார்க்கும்போது நமக்குள் எழும் கேள்வி ஒன்றுதான்...

காரணமே இல்லாமல் நாம் எதற்கு பெற்றோம் சுதந்திரம்?

5 comments:

Anonymous said...

Complete Adsense Solution- http://www.adsensehelp.co.in/


adsensesolutionforu@yahoo.com


Thanks

arun said...

Superb

arun said...

nice

mindfalls said...

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது மெய்யே. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களை அடி மைப்படுத்தி ஆண்டுவரும் ஒரு கூட்டம் இன்னமும் அதிகார சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது என்பதை எவ்வளவு பேர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது தமிழர் தத்துவம். ஆனால் எல்லாமே அவரவர் தலை எழுத்துப்படியே நடக்கும்; நீ செய்வது எதுவும் உன்னால் செய்யப்படுவதில்லை; என்னதான் முயன்றாலும் உனக்கு ஒட்டுவதுதான் ஓட்டும் என்றெல்லாம் கூறி நம்ப வைத்து நம்மைக் கையாலாகதவர்கள் ஆக நம்மையே நம்பச் செய்து கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அறிவியல் துறையில் நம்மவர்கள் எந்த ஒரு புது கண்டுபிடிப்பையும் கண்டுபிடிக்க முடியாதவர்களாக ஆக்கிவைத்த அந்த கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ள நம்மவர்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

Bhargav Kesavan said...

மிகச்சரி... நம்முடைய தரத்தை உயர்த்திக்கொள்ள நாம் பாடு படவேண்டும். எதற்கும் உதவாத அரசாங்கத்தை நாம் நம்பினால், இதை போல ஒரு கட்டுரை நம் வாரிசுகளும் எழுதவேண்டிவரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...