-->

வியாழன், 24 மார்ச், 2011

எதற்கு சுதந்திரம்?




நம் நாடு சுதந்திரம் பெற்று எழுபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  உயிரையும், உடைமைகளையும், வீட்டினையும் துச்சமாக கருதி, அரும்பாடுபட்டு, சத்தியத்தின் விளிம்பில் நின்றும் சற்றும் தளராமல், உறுதியோடும், வலிமையான மனத்தோடும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து, மாண்டு, செக்கிழுத்து, சிறைபெற்று, குடும்பத்தை இழந்து, வாடி வதைபட்டு சுதந்திரம் அடைந்தோம்.

எதற்காக இவ்வளவு பாடுபட்டார்கள் நாம் சுதந்திரம் பெறுவதற்கு? வெள்ளைக்காரன் தன் நலம் கருதி ஏற்படுத்திய சாலைகள் காரணமாகவா? புகைவண்டி, கப்பல், விமானப் போக்குவரத்து போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் காரணமாகவா? அல்லது, சாலைகளில் உமிழ்நீர் உமிழாமலும், மற்ற பிற இடங்களில் மக்களை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த விதம் கருதி எதிர்த்தோமா?

இல்லை, மேற்குறிப்பிட்ட; மற்றும் இன்னப்பல மேம்பாடுகளை எதிர்த்து நாம் போராடவில்லை. நம்  நாட்டிலிருந்த விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட பொருட்களை, பொக்கிஷங்களை அபகரித்து சென்றனர் மேலைநாட்டவர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், முகலாயர்கள், முகமதியர்கள், அயரோப்பியர்கள் என, நம் நாட்டில் மற்றா வளங்களை இருநூறு ஆண்டுகளுக்கு மேலும் சுரண்டி எடுத்தனர். ஆயினும், 'மங்கா' வளமாக திகழ்ந்த நம் நாட்டில் மங்கா செல்வமாக இருந்தது நம் மக்களின் மன உணர்வுகளே.

இயற்கை வளம் கொழித்த நம் நாட்டில், காக்கையை விரட்ட தங்கட்டியை வீசி எறியும் மூதாட்டி, வீடுகளில் திண்ணைகள் அமைத்து வழிப்போக்கர்களுக்கு உணவு அளிக்கும் பண்பாடு, வேண்டியவர்களுக்கு இல்லை என்னாது வேண்டியனவற்றை அளிக்கும் கொடை குணம், பெரும் செல்வத்தை...இல்லாதவற்கு வாரிக்கொடுக்கும் தன்மை, இவற்றால் நிறம்பியிருந்தது நம் நாடு.

இப்படியிருக்க நாம் ஏன் வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றோம்?

இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
 
விடுனர்,

இந்திய அரசியல் தலைவர்கள்


பெறுனர்,
ஆட்சியாளர் துறை

                                  சுருக்கம்: சுதந்திரம் வேண்டி.

மதிபிற்குரிய ஐயா,

                        எங்கள் நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் சுரண்டி எடுத்து வருகிறீர்கள். எங்களது மங்காத செல்வ வளங்கள் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தொடரும், தாங்கள் அபகரித்தது போதும், மீதம் இருப்பதை நாங்கள் அனுபவிக்க ஆசைப்படுகிறோம், எங்களுக்கு சுதந்திரம் கொடுத்துச் செல்லவும். மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் மறைமுகமாக எங்களை ஆட்சி செய்யுங்கள். ஆனால், இப்பொழுது சுதந்திரம் கொடுத்து செல்லுங்கள்.


                                                              நன்றி!!
                                                                                                               இப்படிக்கு,
                                                                                                         அரசியல் தலைவர்கள்

இவ்வாறு, இருப்பின், விதேசி துணிகளை எரித்தல், விதேசி பொருட்களை உபயோகிக்காமல் இருத்தல், விதேசி பொருட்களுக்கு வரி செலுத்தாமல் இருத்தல் போன்ற போராட்டங்கள் நடத்தி, சிறை சென்று, பல கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றோம்.

இத்தனை எதிர்ப்புகளை தெரிவித்த நாம், எப்படி இவ்வளவு தலைகீழாக மாறியுள்ளோம்? கேவலம் அறுபது ஆண்டுகளுக்குலேயே நம்மில் இவ்வளவு மாற்றம்?

நாம் உபயோகிப்பதில்... பத்தில் ஒன்பது, வெளிநாட்டு பொருட்கள். அனைத்திலும் அயல்நாட்டு ஆதிக்கம்.
' நீயா நானா'  புகழ் கோபிநாத் கல்லூரி விழா ஒன்றில் பேசும்பொழுது கூறியது போல, நாம் பேசும் 'மைக்' , வைத்திருக்கும் வாகனம், உடுத்தும் உடை' அனைத்திலும் வெளிநாட்டு ஆதிக்கம்.

என்னதான் நம்மை அடிமைபடுத்தி ஆண்டவர்கள் என்றாலும், அவர்களிடம் ஒரு கோட்பாடுகள் இருந்தன, ஏற்படுத்திய சட்டங்களை கடுமையாக அமலாக்கினர். அதனால் தான் அன்று அவர்கள் கட்டிய கட்டிடங்கள் இன்னும் பொலிவுடன், திடத்துடன், வலிமையுடன் இன்னும் பல இடங்களில் இருப்பதை நாம் காண்கிறோம்.


இங்கோ, நேற்று கட்டிய நடைமேடை இன்று இடிந்து விழுகிறது, இராணுவத்திற்காக வாங்கப்படும் ஆயுதங்களில் ஊழல், இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக கட்டிய குடியிருப்புகள் விதிமுறை மீறிக்கட்டப்படுகின்றன, அதுவும் ஆள்பவர்களின் சிபாரிசுகளுக்கு வழங்கப்படுகின்றன, மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படுகின்ற அலைக்கற்றயில் எண்ணிக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு ஊழல், பிரதமர் பதவிக்காக நடத்தப்படும் தேர்தலில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டிற்கு பணம், காமன்வெல்த் போட்டியில் ஊழல், இப்பொழுது தேர்தலில் ஒவ்வொரு வாக்கிற்கும் கூட பணம் கொடுத்து அனைத்துதரப்பு மக்களையும் ஊழல் வாதியாக மாற்ற பணம் வாய்ந்த தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டன.


இதனையெல்லாம் பார்க்கும்போது நமக்குள் எழும் கேள்வி ஒன்றுதான்...

காரணமே இல்லாமல் நாம் எதற்கு பெற்றோம் சுதந்திரம்?
Blogger Widget

வியாழன், 17 மார்ச், 2011

சம்'சாரம்'

* கீழ் குறிப்பிட்டுள்ளவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் குறிப்பிடப்படவில்லை *

எதை நீ sight அடிச்சியோ, அது நல்லாத்தான் இருந்தது;
எதை நீ sight அடித்துக்கொண்டிருக்கின்றாயோ, அதுவும் நல்லாத்தான் இருக்குது;
எதை நீ sight அடிக்கப்போகின்றாயோ, அதுவும் நல்லாத்தான் இருக்கும்;
உன்னுடையது எது Break Up ஆச்சு?
எதுக்காக அழற?
எதை நீ pickup பண்ண, அதை இழப்பதற்கு?
எதை நீ Propose பண்ண, அது உன்ன reject பண்ணறதுக்கு?
எதை நீ look விடறியோ, அது இங்கிருந்தே வந்தது;
எதை நீ முறைகிறியோ, அதுவும் இங்க இருக்கறதுதான்;
இன்னிக்கு எது உன் figureஒ, நாளைக்கு அது வேறோருத்தனுடயது;
இன்னுருநாள் வேறொருத்தனுக்கு 'சம்சாரம்';
இதுவே உலக நியதி.
Blogger Widget

செவ்வாய், 15 மார்ச், 2011

சிந்தனை செய் மனமே!

பின்னலாடைக் கூடங்கள், சிறு தொழிற்சாலைகள் நம் நாட்டின் பாரம்பர்யமிக்க 'திருப்பூரில்' இன்று மூடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நாமெல்லாம் தான் என்று சொன்னால், அதனை ஏற்கத்தான் வேண்டியுள்ளது.


சுந்தந்திரத்திற்கு முன்பு, காந்தியடிகள் நடத்திய 'அந்நிய ஆடைகளை உடுத்தாதிருத்தலைப்' பற்றி நாம் சிறு வயதிலேயே பாடங்களில் படித்துவிட்டோம், அதன் சாரம் புரியாமலேயே! அந்நிய நாட்டு உடைகளை உடுத்தாமல் நம் நாட்டில் தயார் செய்யப்பட்ட உடைகளை உடுத்துபவரை காணுதல் இன்று அரிதாகிவிட்டது.


பத்து வருடத்திற்கு முன், தீபாவளிப் பண்டிகைக்கு புதிய ஆடைகள் வாங்க, நான்கு பேர் கொண்ட குடும்பம் கடைத்தெருவிற்கு சென்றால், ஆயிரம் ரூபாய்க்குள் நான்கு பேர்க்கும் புத்தாடைகள் வாங்கி, மீதமிருக்கும் பணத்திற்கு, அரிதாக அன்றிரவு வெளியே உணவருந்திவிட்டு வீடு திரும்பலாம்.
காரணம், அன்று வெளிநாட்டு ஆடைகள் நம் நாட்டிற்க்கு இறக்குமதியானது மிகக்குறைவு.

ஆனால், இன்றைய நிலையோ... மகன் வாங்க விரும்பும் அதே ஆடை, வெளிநாட்டு இறக்குமதி என்ற பெயரில், அன்று மொத்தக்குடும்பத்திற்கு உண்டான செலவைவிட அதிகம். காரணம் வெளிநாட்டு மோகம்.

நாம் வெள்ளையனே வெளியேறு என்று விரட்டிப்பெற்ற சுகந்திரம், இன்று நம்மில் பலருக்கு காரணம் தெரியாமல் போய்விட்டது.
எந்த வெள்ளையனிடம் வரி செலுத்த மாட்டோம் என்று சண்டையிட்டோமோ...
எந்த வெள்ளையனின் உடைகளை உடுத்த மாட்டோம் என்று கோஷமிட்டோமோ...
எந்த வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்கமாட்டோம் என்று உறுதியேற்றோமோ...
கேவலம்.., அனைத்தையும் மறந்து இன்று அனைத்தையும் செய்துவருகிறோம்.

வெளிநாட்டு பெயர் கொண்ட எவ்வொரு பொருளானாலும் அதை பெருமையோடு பெரும் விலைக்கொடுத்து வாங்குவதில்தான் நமக்கு அப்படியொரு பெருமை!!!

காலி மார்க் 'போவொண்டோ(Bovonto)',Gold Spot போன்றவட்ட்ரை கோககோலா, பெப்சி போன்ற முதலைகள் முழுங்கிவிட்டதையெல்லாம் பலர் மறந்திருப்பார்கள்.

இப்படி தலையில் அணியும் தொப்பி முதல், காலில் அணியும் செருப்பு வரை எல்லாவற்றிலும் நாம் கொண்டுள்ள வெளிநாட்டு மோகம் குறையும்வரை, நம் நாட்டு மக்கள் தொழிலில் அழிய நாமே மறைமுகமாக காரணமாகிறோம் என்பதை சிந்தனை செய் மனமே! Blogger Widget

இதிலென்ன தவறு?

நம் நாட்டில் இருக்கும் பல நடுத்தர குடும்பங்கள் வசிப்பது வாடகை வீட்டில்.
பலர், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிப்பது உண்டு. குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது ஒரே வீட்டில் வசிப்பது உண்டு.
தன் குடும்ப சூழல் காரணமாக வீடு மாறுபவர்களும், வீட்டில் மக்கள் தொகை பெருகிவிட்டலோ 'இடமின்மை' காரணமாக வீடு மாறுபவர்கள் உண்டு.

மேலும், தற்கால கணினி மயமான சூழலில், கணிப்பொறியாளராக பணிபுரியும் பலர், தன் திறமைக்கேற்ப, அனுபவத்திற்கேற்ப மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணிபுரியும் நிறுவனத்தைவிட்டு, வேறு இடம் மாறுவதும் வழக்கமாகிவிட்டது.

இது போல, தன் சௌகர்யத்திர்க்கேர்ப்ப பால் வாங்கும் கடை, மளிகை சாமான் வாங்கும் கடை முதல் பனி புரியும் நிறுவனம் வரை தனக்கு ஒத்து வராத அனைத்தையும் நாம் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி இருக்கும் நாம், அரசியல் செய்திகளை படிக்கும்போது தினம் சொல்லும் ஒரு வாக்கியம் இது 'கட்சி விட்டு கட்சி மாறிக்கொண்டிருக்கிறானே! இவனெல்லாம் ஒரு மனுஷனா!!!'

இது என்ன நியாயம்? உங்கள் சௌகர்யத்திர்க்கேர்ப்ப நீங்கள் பலவற்றை மாற்றும்பொழுது, ஏன் இந்த அரசியல்வாதி கட்சி மாறக்கூடாது? ஏன் சில பல கூட்டணி மாற்றி அமைக்கக்கூடாது? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தன் செல்வாக்கினை மதிக்கும் பொழுது கூட்டணி மாற்றியமைப்பதும் தன் கட்சியினை வலுப்படுத்தும் முயற்சி, இதேலென்ன தவறு?
Blogger Widget

எமன் வீட்டு வாசற்படி

தோழா!! படியில் நின்று பயணம் செய்யாதே!
தவறி நீ கீழே விழுந்தால்;
உனக்கு கைகொடுத்து தூக்க எமன் காத்துக்கொண்டிருக்கிறான்.
Blogger Widget